செவ்வாய், 10 செப்டம்பர், 2024

மருத்துவமனையில் கடந்த ஆறு மாதங்களில் 700 குழந்தைகள் இறந்துள்ளனர். ஒரு நாளைக்கு மூன்றுக்கும் மேல் இறக்கின்றனர் என்று நங்கர்ஹரில் உள்ள தலிபானின் பொது சுகாதாரத் துறை எங்களிடம் கூறியது. உலக வங்கி மற்றும் யுனிசெஃப் நிதியுதவி மூலம் இந்த மருத்துவச் சேவையைத் தொடர்ந்து நடத்தாமல் இருந்திருந்தால் இன்னும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும். 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை, முந்தைய அரசாங்கத்திற்கு நேரடியாக வழங்கப்பட்ட சர்வதேச நிதிகள் ஆஃப்கானிஸ்தானில் உள்ள அனைத்துப் பொதுச் சுகாதார சேவைகளுக்கும் நிதியளித்தன. தாலிபன்கள் பொறுப்பேற்றதும், அவர்களுக்கு எதிரான சர்வதேசத் தடைகள் காரணமாக நிதி நிறுத்தப்பட்டது. இது சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தியது. தற்காலிக அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவி முகமைகள் முன்வந்தன. ஆனால் இது நிரந்தர தீர்வாக இருக்காது. இப்போது, வேறு பல சம்பவங்களால் உலகம் திசைதிருப்பப்பட்டுள்ளது. எனவே ஆஃப்கானிஸ்தானுக்கான நிதி சுருங்கிவிட்டது. அதேபோல, தாலிபன் அரசாங்கத்தின் கொள்கைகள், குறிப்பாகப் பெண்கள் மீதான கட்டுப்பாடுகளால் நன்கொடையாளர்கள் நிதி வழங்கத் தயங்குகின்றனர். “வறுமை மற்றும் ஊட்டச்சத்துச் குறைபாட்டுப் பிரச்னைகள் எங்களைத் தொடர்ந்து வருகின்றன. இது வெள்ளம் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற இயற்கைப் பேரழிவுகளால் மேலும் மோசமாகிவிட்டது. சர்வதேசச் சமூகம் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க வேண்டும். அரசியல் மற்றும் உள் பிரச்னைகளுடன் அதைச் சேர்த்துப் பார்க்கக் கூடாது,” என்று தாலிபன் அரசாங்கத்தின் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபிட்ராத் பிபிசியிடம் தெரிவித்தார்.

“உலகமே அழிந்து விட்டது போல் உணர்கிறேன். விவரிக்க முடியாத அளவுக்கு வருத்தமாக இருக்கிறது. என் கண் முன்னே என் குழந்தைகள் இறந்தது எனக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?” என்கிறார் ஆமினா. ஆமினா தனது ஆறு குழந்தைகளை இழந்து விட்டார். அவரின் குழந்தைகள் மூன்று வயதுக்கு மேல் உயிர் வாழவில்லை. மற்றொரு குழந்தை தற்போது உயிருக்குப் போராடி வருகிறது. 

ஏழு மாத குழந்தையான பீபி ஹாஜிராவை பார்ப்பதற்கு, புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தை போல இருந்தது. கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்படும் பீபி, ஆப்கானிஸ்தானின் கிழக்கு நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் பிராந்திய மருத்துவமனையில் உள்ள ஒரு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். “வறுமையால் என் குழந்தைகள் இறந்து கொண்டிருக்கிறார்கள். என்னால் அவர்களுக்குக் கொடுக்க முடிந்தது எல்லாம், உலர்ந்த ரொட்டியும் தண்ணீரும் தான். அவற்றையும் வெயிலில் வைத்து தான் சூடுபடுத்துகிறேன்,” என்று வேதனையுடன் விவரித்தார் ஆமினா. 

இது ஆமீனாவின் கதை மட்டும் அல்ல, ஆஃப்கானிஸ்தானின் இப்பகுதியில் பலரது நிலை இதுதான். உடனடி மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டால், ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்படலாம்.ஆஃப்கானிஸ்தானில் பீபி ஹாஜிரா உட்பட 32 லட்சம் குழந்தைகளுக்குக் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளது. இது, பல ஆண்டுகளாக ஆஃப்கானிஸ்தான் எதிர்கொள்ளும் ஒரு பிரச்னை. 40 ஆண்டுகாலப் போர், தீவிர வறுமை போன்ற பல காரணங்களால் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னை நீடிக்கிறது. தாலிபன்கள் பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் நிலைமை வரலாறு காணாத அளவுக்கு மோசமடைந்துள்ளது. 

பாதிக்கப்பட்டுள்ள 32 லட்சம் குழந்தைகள் எப்படி இருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்து பார்ப்பது கடினம். எனவே, ஒரு சிறிய மருத்துவமனையில் கிடைத்த அனுபவக் கதைகள் அதிகரித்து வரும் இந்த பேரழிவைப் பற்றிய நுண்ணறிவை வழங்கும். ஏழு படுக்கைகளில் 18 குழந்தைகள் உள்ளனர். இந்த எண்ணிக்கை குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டும் நிகழ்வது அல்ல. இங்கு எல்லா நாளும் இப்படித்தான் இருக்கிறது. குழந்தைகளின் அழுகையோ அலறலோ கேட்கவில்லை. 

நாடித் துடிப்பை கண்காணிக்கும் மானிட்டரின் பீப் ஒலி மட்டுமே அறையில் கேட்கும் ஒரே சத்தம். பெரும்பாலான குழந்தைகள் மயக்க நிலையில் இல்லை. ஆக்ஸிஜன் மாஸ்க் அணியவில்லை. அவர்கள் விழித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நகரவோ அல்லது அழுவதற்கோ தெம்பு இல்லாமல் மிகவும் பலவீனமாக உள்ளனர். பீபி ஹாஜிராவுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டு, ஊதா நிற ஆடை அணிந்து, தன் சிறிய கையால் முகத்தை மூடிக் கொண்டிருக்கிறார், மூன்று வயது சனா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது தாயார் தனது இளைய சகோதரியைப் பிரசவித்த போது இறந்து விட்டார். 

எனவே அவரது அத்தை லைலா அவரை கவனித்துக் கொள்கிறார்.லைலா என்னை அழைத்து ஏழு விரல்களை உயர்த்திக் காண்பித்தார். அது அவர் இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை. பக்கத்துப் படுக்கையில் இருந்த மூன்று வயது குழந்தை இல்ஹாம் வயதுக்கு ஏற்ற வளர்ச்சியில் இல்லை. குழந்தையின் கைகள், கால்கள் மற்றும் முகத்தில் தோல் உரிந்திருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அவரது சகோதரி இரண்டு வயதாக இருக்கையில் இறந்துவிட்டார். ஒரு வயதே ஆன அஸ்மாவைப் பார்க்க வேதனையாக இருந்தது.

அந்தக் குழந்தையின் நீண்ட இமைகள் கொண்ட அழகான பழுப்பு நிறக் கண்கள் எங்கோ வெறித்துப் பார்த்து கொண்டிருந்தன. சிறிய முகத்தின் பெரும்பகுதியை மூடியிருக்கும் ஆக்ஸிஜன் மாஸ்க் உதவியுடன் சுவாசிக்கும் போது குழந்தை கண்களை சிமிட்டுகிறது. அஸ்மாவின் அருகே நிற்கும் மருத்துவர் சிக்கந்தர் கானி, தலையை அசைத்தபடி, "அஸ்மா உயிர் பிழைப்பாள் என்று தோன்றவில்லை," என்று கூறினார். 

அஸ்மாவின் சிறிய உடல் செப்டிக் ஷாக் என்னும் ஆபத்தான நிலையை எட்டியது. சோகமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், அந்த அறையில் இருந்த செவிலியர்கள் மற்றும் தாய்மார்கள் எல்லாவற்றையும் ஏற்று கொண்டு, தங்கள் வேலையைச் செய்கின்றனர். குழந்தைகளுக்கு உணவளிக்கிறார்கள், அழும் போது அவர்களை அமைதிப்படுத்துகிறார்கள். அஸ்மாவின் தாய் நசிபா கதறி அழுகிறார். அவரது முக்காடைத் தூக்கி தன் மகளுக்கு முத்தமிடக் கீழே சாய்ந்தார். “என் உடலில் சதை உருகுவது போல் உணர்கிறேன். 

என் குழந்தை இப்படி கஷ்டப்படுவதை என்னால் தாங்க முடியவில்லை,” என்று அழுகிறார். நசிபா ஏற்கனவே மூன்று குழந்தைகளை இழந்துள்ளார். “என் கணவர் கூலித்தொழிலாளி. அவருக்கு வேலை கிடைக்கும் போது மட்டுமே உணவு இருக்கும்,” என்கிறார். அஸ்மா எந்த நேரத்திலும் இதயச் செயலிழப்புக்கு ஆளாகலாம் என்று மருத்துவர் கானி கூறுகிறார். நாங்கள் அந்த அறையை விட்டு வெளியேறிய ஒரு மணி நேரத்திற்குள் அஸ்மா இறந்துவிட்டார்.மருத்துவமனையில் கடந்த ஆறு மாதங்களில் 700 குழந்தைகள் இறந்துள்ளனர். 

ஒரு நாளைக்கு மூன்றுக்கும் மேல் இறக்கின்றனர் என்று நங்கர்ஹரில் உள்ள தலிபானின் பொது சுகாதாரத் துறை எங்களிடம் கூறியது. உலக வங்கி மற்றும் யுனிசெஃப் நிதியுதவி மூலம் இந்த மருத்துவச் சேவையைத் தொடர்ந்து நடத்தாமல் இருந்திருந்தால் இன்னும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும். 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை, முந்தைய அரசாங்கத்திற்கு நேரடியாக வழங்கப்பட்ட சர்வதேச நிதிகள் ஆஃப்கானிஸ்தானில் உள்ள அனைத்துப் பொதுச் சுகாதார சேவைகளுக்கும் நிதியளித்தன. தாலிபன்கள் பொறுப்பேற்றதும், அவர்களுக்கு எதிரான சர்வதேசத் தடைகள் காரணமாக நிதி நிறுத்தப்பட்டது. 

இது சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தியது. தற்காலிக அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவி முகமைகள் முன்வந்தன. ஆனால் இது நிரந்தர தீர்வாக இருக்காது. இப்போது, வேறு பல சம்பவங்களால் உலகம் திசைதிருப்பப்பட்டுள்ளது. எனவே ஆஃப்கானிஸ்தானுக்கான நிதி சுருங்கிவிட்டது. அதேபோல, தாலிபன் அரசாங்கத்தின் கொள்கைகள், குறிப்பாகப் பெண்கள் மீதான கட்டுப்பாடுகளால் நன்கொடையாளர்கள் நிதி வழங்கத் தயங்குகின்றனர்.

 “வறுமை மற்றும் ஊட்டச்சத்துச் குறைபாட்டுப் பிரச்னைகள் எங்களைத் தொடர்ந்து வருகின்றன. இது வெள்ளம் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற இயற்கைப் பேரழிவுகளால் மேலும் மோசமாகிவிட்டது. சர்வதேசச் சமூகம் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க வேண்டும். அரசியல் மற்றும் உள் பிரச்னைகளுடன் அதைச் சேர்த்துப் பார்க்கக் கூடாது,” என்று தாலிபன் அரசாங்கத்தின் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபிட்ராத் பிபிசியிடம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரிட்டிஷ் ஸ்டார்மர் தொழிலாளர் மாநாட்டு உரையை ஆற்றுகிறார்.

டெய்லி டெலிகிராப், பிபிசியின் முன்னணி தேர்தல் நிபுணரும், நாட்டிலேயே மிகவும் மதிக்கப்படும் பிசிபாலாஜிஸ்ட்களில் ஒருவருமான பேராசிரியர் சர் ஜான்...