செவ்வாய், 16 ஏப்ரல், 2024

ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 33 பேர் பலி.

காபூல் : ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்தார்கள். ஆப்கானிஸ்தானில் பருவகால மழையினால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி 3 நாட்களில் குறைந்தது 33 பேர் உயிரிழந்தனர். 

மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக இயற்கை பேரிடர் மேலாண்மைக்கான மாநில அமைச்சகத்தின் தலிபான் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா ஜனன் சைக் கூறுகையில், தலைநகர் காபூல் மற்றும் பல மாகாணங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் 600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. 

200 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இந்த வெள்ளத்தால் சுமார் 800 ஹெக்டேர் விவசாய நிலங்களும், 85 கிலோமீட்டர் (53 மைல்) சாலைகளும் சேதமடைந்துள்ளன. மேற்கு பரா, ஹெராத், தெற்கு ஜாபுல் மற்றும் காந்தஹார் ஆகிய மாகாணங்கள் அதிக சேதங்களை சந்தித்துள்ளன. மேலும் ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களில் வரும் நாட்களில் அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கொழும்பில் இருந்து வந்த நபர் யாழில் மயங்கி விழுந்து உயிரிழப்பு!!

கொழும்பில் இருந்து வந்த நபர் ஒருவர் இன்றைய தினம் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகாமையில் உள்ள நண்பனின் வீட்டில் மயங்கி விழுந்து உயிரி...