திங்கள், 15 ஏப்ரல், 2024

பிரித்தானியாவின் ஒக்ஸ்போட்டில் “மே18 முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாள்” 15வது ஆண்டு மாபெரும் நினைவேந்தல் எழுச்சி நிகழ்வு.

பிரித்தானியாவின் ஒக்ஸ்போட்டில் “மே18 முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாள்” 15வது ஆண்டு மாபெரும் நினைவேந்தல் எழுச்சி நிகழ்வு. எதிர்வரும் மே18,2024 மாலை 5.00 மணிக்கு பிரித்தானியாவில் தமிழர்களுக்குச் சொந்தமான நிலப்பரப்பில் அமைந்துள்ள உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ஒன்றுகூடி விளக்கேற்றி, இனவிடுதலைக்காக உயிர்விலைகொடுத்த அத்தனை ஆன்மாக்களின் மீது உறுதியெடுத்து தொடர்ந்து தாயகம் நோக்கிய விடுதலைப்பணியை முன்னெடுக்க ஒன்றுகூடுவோம். 

இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் வலிகளைச் சுமந்த போராளிகளும், மக்களும் நினைவேந்தலுக்கான தயார்படுத்தல்களில் உணர்வுகளோடு ஈடுபட்டு வருகின்றனர். தாயகத்தை விட்டு புலம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டபோதும் அவர்களது நினைவுகளும், எண்ணங்களும் அந்த மண்ணை, மக்களைவிட்டு புலம்பெயரவில்லை என்பதனை அவர்களது அர்ப்பணிப்பு நிறைந்த செயற்பாடுகள் கட்டியம்கூறி நிற்கின்றன.

முள்ளிவாய்க்கால் என்பது எமது இனத்தின் விடுதலைக்கான குறியீடு.! முள்ளிவாய்க்கால் என்பது எமது இனத்தின் வலிகளின் கூடாரம்.! முள்ளிவாய்க்கால் என்பது தமிழர் இனவழிப்பின் சாட்சியம்.! 

மே- 18 ,நினைவேந்தல் ஏற்ப்பாட்டுக்குழு, 

உலகத்தமிழர் வரலாற்று மையம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கொழும்பில் இருந்து வந்த நபர் யாழில் மயங்கி விழுந்து உயிரிழப்பு!!

கொழும்பில் இருந்து வந்த நபர் ஒருவர் இன்றைய தினம் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகாமையில் உள்ள நண்பனின் வீட்டில் மயங்கி விழுந்து உயிரி...