வியாழன், 18 ஏப்ரல், 2024

ஸ்ரீலங்கா மைத்திரிக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு.

சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு மாவட்ட நீதிமன்றால் இன்று(18) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று மீண்டும் அழைக்கப்பட்ட போதே மைத்திரிபால சிறிசேனவிற்கான தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

வேலூர் குடியாத்தத்தில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு பழ ஜூஸ் விஷம் .

நேற்று வேலூர் குடியாத்தத்தில் நடிகர் மன்சூர் அலிகான் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

 மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில், நேற்று உணவில் தனக்கு விஷம் கலந்து கொடுக்கப்பட்டதா? என்ற பகீர் சந்தேகத்தை அவர் கிளப்பியுள்ளார். வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இதற்காக குடியாத்தம் பகுதியில் பொதுமக்களிடையே தீவிர வாக்குச் சேகரிப்பில் நேற்று ஈடுபட்டிருந்தார். 

 அப்போது அவருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் உடனே அனுமதிக்கப்பட்டார். பின்பு, குடியாத்தத்தில் இருந்து எம்புலன்ஸ் மூலம் சென்னை கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 

 இவ்வாறான பின்னணியில் தனக்கு உணவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதா? என்ற பகீர் சந்தேகத்தை கிளப்பி இருக்கிறார் மன்சூர் அலிகான். இதுபற்றி தனது மக்கள் தொடர்பாளர் கோவிந்தராஜ் மூலம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று குடியாத்தம் சந்தையிலிருந்து திரும்பி வரும்போது ஒரு இடத்தில் கட்டாயப்படுத்தி, பழ ஜூஸ் குடுத்தாங்க. அதன் பிறகு, மோர் குடுத்தாங்க. குடிச்ச உடனே வண்டியில் இருந்து விழ இருந்தேன்.

 மயக்கம், அடி நெஞ்சுல தாங்க முடியாத வலி! பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க. ட்ரீட்மென்ட் குடுத்தும் வலி நிக்கல. உடனே சென்னைக்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு வந்தாங்க. டாக்டர் பாலசுப்ரமணியன் ஐசியூ-ல அட்மிட் பண்ணி சிகிச்சை கொடுத்ததுல இப்ப வலி கொஞ்சம் கம்மியாயிருக்கு. விஷ முறிவு, நுரையீரல் வலி போக டிரிப்ஸ் குடுத்தாங்க. இன்று மதியம் 2.00 மணிக்கு சாதாரண வார்டுக்கு மாத்துவாங்க” என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளி கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்- செல்வராசா கஜேந்திரன்

கைதிகள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். 

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கைது செய்யப்பட்டு கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரசியல் கைதி செ.ஆனந்தவர்மன் எனப்படும் அரவிந்தனை நேற்று (16.04.24) பார்வையிட்ட பின் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் போராளி செல்வநாயகம் ஆனந்தவர்ணன் கடந்த 2024.03.26 இல் கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் விசாரணைக்காக அழைக்கப்பட்டு அன்றைய தினமே கைது செய்யப்பட்டு கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் வெலிக்கடையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். 

அவரது முகநூலில் கடந்த 2020 இல் ஒரு படமும் 2022 இல் ஒருபடமும் பகிரப்பட்டதாகவும் அதன் மூலம் புலிகளை மீளுருவாக்கம் செய்யும் முயற்சி என்ற பொய்க் குற்றச்சாட்டினைச் சுமத்தி அவரைத் தடுத்து வைத்துள்ளனர். 

ஏற்கனவே அவர் சுமார் 9 ஆண்டுகள் கொடிய சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கும் பல பொய் வழக்குகளுக்கும் முகம் கொடுத்து விடுதலையாகி தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டு கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளார். 

அடிப்படை வசதிகள் மிகவும் மோசமாகவுள்ள சுமார் 400 பேர் மாத்திரம் அடைக்கப்படக்கூடிய வெலிக்கடை விளக்கமறியல் சிறையில் 2,286 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையில் அடைத்துவைக்கப்பட்டுள்ளார். அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலையில் அவரைச் சந்தித்து உரையாடியிருந்தேன்.


சுமார் 3 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் இயக்கச் சீருடையில் உள்ள படத்தை முகநூலில் பகிர்ந்தாகக் குற்றம் சுமத்தி அதன் மூலம் புலிகளை மீளுருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தி தன்னை கைது செய்து அடைத்துள்ளளதாகத் தெரிவித்தார்.

 மேலும் அடுத்த தடவை எப்போது நீதிமன்றில் முற்படுத்துவார்கள் என்ற திகதிகூடத் தெரியாத நிலையில் தன்னைத் தடுத்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். தன்னைக் கைது செய்து அடைத்துள்ளமையினால் தனது பிள்ளைகள் அநாதரவான நிலையில் இருப்பதாகவும் தனது விடுதலைக்கு அழுத்தம் கொடுக்குமாறும் மிகுந்த வேதனையுடன் கோரினார். 

கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டம் தமிழர்களது குரல்வளையை நசுக்கி தமிழர்களை தமது கொத்தடிமைகளாக வைத்துக் கொள்வதற்கான எல்லையற்ற அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்கியுள்ளது. பொலிஸார் இனவாதமாகவே செயற்படுகின்றார்கள். மீளுருவாக்கம் என்ற பொய்க்குற்றச்சாட்டுக்களின் கீழ் ஆனந்தவர்ணன் கைது செய்யப்பட்டுள்ளமையை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஆனந்தவர்ணன் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும். அத்துடன் கொடிய பயங்கரவாதத் தடைச்சட்ட முழுமையாக நீக்கப்படல் வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றோம். அச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டுமெனவும் கோருகின்றோம் என தெரிவித்தார்.

புதன், 17 ஏப்ரல், 2024

வெள்ளத்தில் மூழ்கிய டுபாய்.

சுமார் 75 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பிராந்திய நாடுகள் கடுமையான வெள்ளப் பேரழிவைச் சந்தித்துள்ளன. இதன் காரணமாக ஓமானில் மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பிராந்தியங்களில் பலத்த சூறாவளி காற்று வீசியதால் பலத்த மழை பெய்து வருகிறது. 75 ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பதிவான அதிகபட்ச மழை இதுவாகும். 

இதனுடன், டுபாய் உட்பட எமிரேட்டின் ஏழு பகுதிகளிலும் வெள்ளம் பதிவாகியுள்ளது. உலகின் மிகவும் வளர்ச்சியடைந்த நகரங்களில் ஒன்றான டுபாயின் தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. புகழ்பெற்ற டுபாய் மால், மால் ஆஃப் தி எமிரேட்ஸ், முழங்கால் அளவு தண்ணீரில் மூழ்கியுள்ளது.

இலங்கையில் பாரியளவில் அதிகரித்துள்ள பெட்ரோலின் விலை.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எரிபொருளின் விலை கடுமையாக உயர்வடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா (Harshana Rajakaruna) தெரிவித்துள்ளார்.

 இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இன்று எமது வாழ்க்கைச் செலவு கடுமையாக அதிகரித்துள்ளதை நாங்கள் இப்போது காண்கின்றோம். 

2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது இன்று எரிபொருட்களின் விலை பாரியளவில் உயர்வடைந்துள்ளது. டிசம்பர் 31ஆம் திகதி 2019ஆம் ஆண்டு பெட்ரோலின் விலை 134 ரூபாயாக இருந்தது. இப்போது அது 360 ரூபாயாக பாரியளவில் உயர்ந்துள்ளது. 95 ரூபாவாக இருந்த சம்பா அரிசி ஒரு கிலோ கிராமின் விலை 240 ரூபாயாக அதிகரித்துள்ளது. 19 ரூபாவாக இருந்த ஒரு மூடை இப்பொழுது 50 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

100 கோடி ரூபாய் செலவில் தமிழுக்கு ஒரு பிரம்மாண்ட பேரகராதி.

தமிழுக்கு ஓர் அகராதி கேட்கவே மிக மகிழ்ச்சியாக உள்ளது உலகெலாம் தமிழ் பரவும் என்ற கனவு நணைவாகிக்கெண்டு வருகிறது .

தமிழருக்கு என்று ஓரு நாடும் விரைவில் உருவாகும் நிச்சயம் வாழ்க தமிழ் வளர்கதமிழ் மகிழ்சி வாழ்த்துகிறேன்

 

சாய்ந்தமருது உணவகங்களில் புற்றுநோயை உண்டாக்கும் சுவையூட்டிகள் கண்டுபிடிப்பு!

சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள் சுகாதாரமற்ற உணவுகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து உணவுப் பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது பிரதேச இரவு நேர உணவகங்கள், டேஸ்ட் கடைகள், கோழி பதப்படுத்தி விற்கும் இடங்கள் போன்றவற்றில் நேற்று (16) இரவு திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

 கடந்த காலங்களில் சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள், சந்தை, சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், சிறிய சூப்பர் மார்க்கட்கள் போன்றவற்றை பார்வையிட்ட அவர் உரிமையாளர்களுக்கும், உணவு தயாரிப்பவர்களுக்கும் சுகாதார நடைமுறைகளை பேணி உணவுகளை தயாரிக்குமாறும் உணவங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கீன்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றவற்றை சுகாதார முறைப்படி பேணுமாறும் ஆலோசனை வழங்கியதுடன் அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திருந்ததுடன் எச்சரிக்கையும் விடுத்திருந்தார். 

 அதனை ஒட்டியதாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெரின், காரியாலய உத்தியோகத்தர் எம்.எச்.எம். பிர்தௌஸ் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் சகிதம் சாய்ந்தமருது பிரதேச உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும் நிலையங்கள் மீது திடீர் பரிசோதனையும், முற்றுகையும் இடம்பெற்று மாலை நேர உணவகங்களில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள், பாவனைக்கு பொருத்தமற்ற எண்ணெய்கள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள், கலப்படம் செய்யப்பட்ட சுவையூட்டிகள் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டது. 

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, முறையான களஞ்சிய வசதி இல்லாத மற்றும் பழுதடைந்த உணவுகளை வைத்திருந்தோர் மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகள் கைப்பற்றப்பட்டது. அதே போன்று சில உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க தேவையான மேலதிக ஒழுங்குகளை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் 12 நாட்களில் 4 காவல் மரணங்கள்!!

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 5 முதல் 16ஆம் தேதிக்குள் 4 காவல் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இது தொடரக்கூடாது என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள...