மாமல்லபுரம் உலகளவில் வரலாற்று பிரசித்தி பெற்ற தமிழக சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்பட பல்வேறு புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இங்கு சுற்றுலா வரும் பயணிகள், மாமல்லபுரம் எல்லைப் பகுதியான கருகாத்தமன் கோயிலின் பின்புறமுள்ள பிடாரி ரதத்தைச் சுற்றி பார்க்கவும் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.
பின்னர் பிடாரி ரதத்தை சுற்றி பார்த்துவிட்டு வெளியே வரும் சுற்றுலா பயணிகளில் பலர், அங்கு தொல்லியல் துறையின் மதில்சுவரை ஒட்டியுள்ள காலி இடத்தில் பிளாஸ்டிக் பைகள், வாட்டர் பாட்டில் உள்பட ஏராளமான குப்பைக் கழிவுகளை போட்டுவிட்டு செல்கின்றனர். அதேபோல், அப்பகுதியில் ஏராளமான ஓட்டல் கழிவுகள் மற்றும் குப்பைகளை இரவு நேரங்களில் கொட்டிவிட்டு செல்கின்றனர்.
இதனால் அப்பகுதியே குப்பைமேடு போல் காட்சியளித்து, கடும் துர்நாற்றம் வீசியது.
குப்பை கழிவுகளை அகற்றி, அங்கு ஏராளமான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து அழகுபடுத்த வேண்டும் என்று நகராட்சிகளின் மண்டல இயக்குனர் மாரிச்செல்வி உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில், மாமல்லபுரம் நகராட்சி ஆணையர் அபர்ணா மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர் குருசாமி தலைமையில், நேற்று முதல் அப்பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலமாக குப்பைக் கழிவுகளை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் குப்பைக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க, அங்கு 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதற்கு மாமல்லபுரம் நகராட்சி ஆணையர் அபர்ணா, சுகாதார ஆய்வாளர் குருசாமி ஆகியோர் திட்டமிட்டுள்ளனர். அவர்களின் முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாமல்லபுரம் சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளதால், எங்களுக்கு அந்நகரை தூய்மைப்படுத்த வேண்டிய கடமை உள்ளது.
ஒருசில இடங்களில் சுற்றுலாப் பயணிகள் விழிப்புணர்வு இல்லாமல், கண்மூடித்தனமாக குப்பைக் கழிவுகளை வீசிவிட்டு செல்கின்றனர். இங்கு குப்பை போடக்கூடாது என பல்வேறு அறிவிப்பு பலகைகள் வைத்து எச்சரிக்கிறோம். இவற்றை மீறுபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக சுற்றுலா பயணிகளிடையே விரைவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம், குடரப்பு கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கடலட்டைகளைக் கடத்திச் சென்ற மூவர் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.
வடக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட வெற்றிலைக்கேணி கடற்படை முகாம் அதிகாரிகளால் நேற்று (05) காலை முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கடலட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடற்கரைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட படகொன்றைச் பரிசோதித்தபோது, சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்டு நிலப்பரப்பிற்கு கடத்தி வரப்பட்ட 673 கடல் அட்டைகள் அடங்கிய தொகுதியை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 51 முதல் 56 வயதிற்கு இடைப்பட்ட மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கடலட்டைகள் தொகுதி, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்பிடிப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பல நூற்றாண்டுகளாக உலக மக்கள் பயன்படுத்தி வந்த பாரம்பரிய உலக வரைபடத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் அளவு தவறாகக் காட்டப்பட்டு வந்ததைச் சரிசெய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் (UN) பெருமளவு ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவின் உண்மையான பரப்பளவை துல்லியமாக வெளிப்படுத்தும் புதிய உலக வரைபடத்தை (Equal Earth Map) அதிகாரப்பூர்வமாக ஏற்பதற்கான இந்தத் தீர்மானத்திற்கு உலக அரங்கில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
தற்போது புழக்கத்தில் இருக்கும் 'மெர்கேட்டர் உலக வரைபடம்' (Mercator Projection), கடல் பயணங்களை எளிதாக்க 1569ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டதாகும்.
ஆனால், அது பூமியின் கோள வடிவத்தை தட்டையான காகிதத்தில் கொண்டு வரும்போது, ஆப்பிரிக்கக் கண்டத்தை அதன் உண்மையான அளவை விட மிகச் சிறியதாகவும், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளை மிகப் பெரியதாகவும் காட்டுகிறது.
எடுத்துக்காட்டாக, ஆப்பிரிக்கக் கண்டமானது கிரீன்லாந்தை விட 14 மடங்கு பெரியதாகும்.
ஆனால், பழைய வரைபடத்தில் இரண்டுமே ஒரே அளவில் காட்சியளிக்கின்றன.
இந்த புவியியல் ரீதியான வரலாற்றுத் தவறை மாற்றி, உலக நாடுகளின் பரப்பளவை அதன் உண்மையான விகிதத்தில் காட்டும் 'ஈக்வல் எர்த்' (Equal Earth) வரைபடத்தை ஐநா சபை அங்கீகரிக்க வேண்டும் என ஆப்பிரிக்க நாடான தோகோ (Togo) தீர்மானம் கொண்டு வந்தது.
ஐநா பொதுச் சபையில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்கெடுப்பில்:
ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் உட்பட 164 நாடுகள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.
அமெரிக்கா மட்டுமே இந்தத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது.பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 6 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்து விலகியிருந்தன.
புதிய வரைபடத்தின் மூலம் ஆப்பிரிக்கா, சீனா, அமெரிக்கா, மற்றும் ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் தன்னுள் அடக்கும் அளவுக்கு பிரம்மாண்டமான பரப்பளவைக் கொண்டது என்பது உலகிற்குத் துல்லியமாகக் காட்டப்பட்டுள்ளது.
இது உலகளாவிய கல்விமுறை மற்றும் புவியியல் பார்வையில் ஒரு மிகப்பெரிய புரட்சியாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவின் பலத்த எதிர்ப்பையும் மீறி, மூன்றில் இரண்டு பங்கு நாடுகளின் பேராதரவுடன் இந்தத் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதால், இனிவரும் காலங்களில் சர்வதேச அளவில் கல்வி நிறுவனங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் இந்தப் புதிய வரைபடம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்து வருகிறது. சமீபத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் முக்கிய அணுசக்தி தளமான பிகாக்ஸ் மவுண்டைன் மீது மிக விரைவில் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இந்த எச்சரிக்கையை வெளியிட்டார்.
ஈரானின் அணு ஆயுதங்களை தடுப்பது அமெரிக்காவின் பிரதான நோக்கம் என்றும், பிப்ரவரி மாதம் முதல் அமெரிக்கா ஈரானின் ராணுவ இலக்குகளை தாக்கி வருவதாகவும் டிரம்ப் கூறினார். மேலும், ஈரானில் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் கண்டறியப்பட்டால், பிகாக்ஸ் மவுண்டைன் தளம் உடனடியாக தாக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். அமெரிக்காவின் இந்த தொடர்ச்சியான ராணுவ நடவடிக்கைகள் ஈரானின் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா தனது இறையாண்மையை மீறுவதாகவும், பிராந்தியத்தில் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்குவதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. பிகாக்ஸ் மவுண்டைன் என்பது நதாண்ஸ் அணுசக்தி நிலையத்திற்கு அருகிலுள்ள மலைப்பகுதியாகும்.
இது மலைகளுக்கு அடியில் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளதால், மேற்கத்திய உளவு அமைப்புகள் இதனை ஈரானின் ரகசிய அணுசக்தி செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுவதாக கருதுகின்றன.
எனினும், இது அமைதியான அணுசக்தி தேவைகளுக்காக மட்டுமே என ஈரான் கூறுகிறது.டிரம்பின் எச்சரிக்கை சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி, மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை ஜவ்வாது மலையில் மலைவாழ் மக்களிடம் ரூ.1 கோடி லஞ்சம் பெற்ற வனச்சரகர்கள் 3 பேர் உள்பட 6 வனத்துறை ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
அரசுக்கு சொந்தமான வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி லஞ்சம் பெற்றுள்ளனர். மலைவாழ் மக்கள் 30க்கும் மேற்பட்டோரிடம் வனத்துறை ஊழியர்கள் லஞ்சம் பெற்றது விசாரணையில் அம்பலமானது.
நீர்ப்பாசனக் கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்பிக் கொடுக்க முடிவதுடன், தேசிய பொருளாதாரத்திற்கு அவர்களின் பங்களிப்பை நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக் காட்டினார்.
ரஜரட்ட பாரிய நீர்ப்பாசனக் கட்டமைப்பில் இணையவிருக்கும் மற்றொரு விசேட நீர்த்தேக்கத் திட்டமான கீழ் மல்துவத்து ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், அதன் எதிர்காலப் பணிகளுக்குத் தடையாக உள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பங்கேற்புடன் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அண்மையில் குறித்த பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்ததுடன், அங்கு முன்வைக்கப்பட்டிருந்த பிரச்சினைகள் குறித்து மேலும் கலந்துரையாடியதுடன், அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பல சாதகமான முடிவுகளும் இதன்போது எடுக்கப்பட்டன.
10 வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு இன்மையால் இடையில் கைவிடப்பட்ட கீழ் மல்வத்து ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்காக 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 5000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மல்கத்து ஓயா கீழ் பகுதியில் கிராமிய அபிவிருத்தி மற்றும் விவசாய உற்பத்தியைப் பாதிக்கும் முக்கிய காரணியான நீர்ப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், தந்திரிமலைப் பிரதேசத்தில் புதிய அபிவிருத்திப் பகுதியை உருவாக்குதல், மன்னார் மாவட்டத்தில் உள்ள யோதவாவி மற்றும் அகிதமுருப்பு வாவி ஆகியவற்றுக்குட்பட்ட 40,000 ஏக்கர் வயல் நிலங்களை சிறு மற்றும் பெரும் போகங்களில் பயிரிட்டு பயிர் அடர்த்தியை அதிகரித்தல், குடிநீர் வழங்கல், நீர்மின் உற்பத்தி மற்றும் அப்பகுதியின் வெள்ளக் கட்டுப்பாடு, சுற்றுலா வலயமொன்றை ஆரம்பித்தல், மீன்பிடித் தொழிலை மேம்படுத்துதல் மற்றும் காட்டு யானைப் பிரச்சினைகளை முகாமைத்துவம் செய்தல் போன்றவற்றை இத்திட்டத்தின் மூலம் நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது.
கீழ் மல்கத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை 2029 - 2030 ஆம் ஆண்டளவில் முழுமையாக நிறைவு செய்து மக்களிடம் கையளிப்பது அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளதுடன். இதன் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் வடமத்திய மாகாணத்தின் மிகப்பாரிய நீர்த்தேக்கமாக இது மாறும்.
நீர்ப்பாசனத் திட்டத்திற்காக காணிகளைக் கையகப்படுத்துதல் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து இதன் போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இடம்பெயரும் மக்களுக்கு முன்பு இருந்ததை விட சிறந்த வாழ்க்கைத்தரத்தை வழங்கும் வகையில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்து மீள்குடியேற்றங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
இதன்படி, அந்த மக்களுக்காக நவீன விவசாயத் திட்டங்களை அறிமுகப்படுத்துதல், தனியார் துறை விற்பனை நிலைய வலையமைப்புகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுடன் ஏற்படுத்திக்கொள்ளும் கொள்வனவு ஒப்பந்தங்கள் ஊடாக அவர்களின் உற்பத்திகளுக்கு நிலையான சந்தையை ஏற்படுத்திக் கொடுத்தல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
வனஜீவராசிகள் திணைக்களம், சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் இலங்கை இராணுவம் இணைந்து யானை வேலியை நிர்மாணித்தல், பராமரித்தல் மற்றும் வெற்றிகரமான நீண்டகால உயிரியல் தீர்வாக பனை வேலி போன்ற இயற்கையான வேலிகளை ஸ்தாபித்தல் தொடர்பில், வரலாற்று சிறப்புமிக்க தந்திரிமலை ரஜமகா விகாராதிபதி, வடகிழக்கு மாகாணங்களின் உப பிரதான சங்கநாயக்க வண. தந்திரிமலை சந்தரதன தேரர் முன்வைத்த பரிந்துரை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
கடந்த பொருளாதார நெருக்கடி காரணமாக நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்த "குடா விலச்சி வாவித் திட்டத்தை" மீள ஆரம்பித்தல் உட்பட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான குளங்களை புனரமைப்பது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.
கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டமானது ரஜரட்ட மக்களின் பாரிய எதிர்பார்ப்பாகும் என இதன்போது சுட்டிக்காட்டிய தந்திரிமலை ரஜமகா விகாராதிபதி, வண. தந்திரிமலே சந்தரதன தேரர், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அதற்காக மேற்கொள்ளும் அர்ப்பணிப்பைப் பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
இத்திட்டம் தொடர்பில் நம்பிக்கை கொள்ளக்கூடிய வகையில் இன்றைய தினம் பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டமை குறித்தும் அவர் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.
சமூகத்தில் நல்ல படிப்பு, கௌரவமான பதவி, போதிய வசதிகள் என எல்லாமே இருந்தும், மூடநம்பிக்கையின் பிடியில் சிக்கி ஒரு பெற்றோர் தங்களின் சொந்தக் குழந்தையையே பலி கொடுத்த சோகம் அநுராதபுரத்தில் அரங்கேறியுள்ளது!
நடந்தது என்ன?
மரபணு ரீதியான இரத்தக் குறைபாட்டு நோயான 'தலசீமியா' (Thalassemia) நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு, குறிப்பிட்ட கால இடைவெளியில் இரத்தம் ஏற்றுவது (Blood Transfusion) மட்டுமே வாழ்வாதாரம். ஆனால், மூடநம்பிக்கை மற்றும் ஏதோ ஒரு தவறான போதனையின் காரணமாக, "குழந்தைக்கு இரத்தம் ஏற்றக் கூடாது" என்று பெற்றோர் பிடிவாதமாக மறுத்துள்ளனர்.
முறையான சிகிச்சை கிடைக்காமல், அந்தப் பிஞ்சு உயிர் துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தது.
இந்தச் சம்பவத்தில் அக்குழந்தையின் தாய், சமூகத்தில் மற்ற குழந்தைகளுக்கு அறிவூட்டும் ஒரு பள்ளி ஆசிரியை (School Teacher)! கல்வியும், சமூக அந்தஸ்தும் இருந்தும் கூட, அறிவியல் பூர்வமான மருத்துவத்தை நம்பாமல், மூடநம்பிக்கையை நம்பியதன் விளைவு...
இன்று ஒரு குழந்தையின் உயிர் பறிபோயுள்ளது.
தற்போது, குழந்தைக்கு இரத்தம் வழங்க மறுத்து அதன் மரணத்திற்குக் காரணமாக இருந்த குற்றத்திற்காக, அந்தப் பெற்றோருக்கு எதிராக அநுராதபுரம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிந்திக்க வேண்டிய தருணம்!
பட்டம் வாங்குவதும், பதவியில் இருப்பதும் மட்டும் ஒருவரைப் பகுத்தறிவாளராக மாற்றிவிடாது என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
* அறிவியல் வளர்ந்த இந்த 21-ஆம் நூற்றாண்டிலும், போலி போதனைகளையும் மூடநம்பிக்கைகளையும் நம்பி உயிர்களைப் பலி கொடுப்பது எவ்வளவு பெரிய அறியாமை?
மதமும் நம்பிக்கையும் மனிதர்களை நல்வழிப்படுத்த வேண்டுமே தவிர, ஒரு பிஞ்சு உயிரின் மருத்துவ சிகிச்சையைத் தடுத்து அதைக் கொல்லும் ஆயுதமாக மாறக்கூடாது.
படிப்பறிவு உள்ளவர்களே இப்படி அறியாமையில் மூழ்கினால், சமூகத்தின் நிலை என்ன?
இனி ஒரு பிஞ்சு உயிரும் இத்தகைய மூடநம்பிக்கைகளுக்குப் பலியாகக் கூடாது! விழித்துக் கொள்வோம் மனித நேயத்துடன்!