பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகத் தலிபான் அமைப்பு உறுதியளித்திருந்த போதிலும், அவர்களின் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் பெண்களுக்கு எதிராகக் கடுமையான பாகுபாடு காட்டப்பட்டுள்ளது.
2021-ல் தலிபான் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகளையும், இன்று ஆப்கானிஸ்தானில் பெண்களின் வாழ்க்கையின் எதார்த்த நிலையையும் 'கார்டியன்' (Guardian) பத்திரிகையாளர் ஆனி கெல்லி (Annie Kelly) ஒப்பிட்டுப் பார்க்கிறார்.
போர்க்களத்தில் வட கொரியாவின் அனுபவம் அதிகரித்து வருவதாக எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், தென் கொரியாவுடனான கூட்டுப் பயிற்சிகளைக் குறைக்குமாறு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைன் போரிலிருந்து கிம் ஜாங்-உன்னின் ஆட்சி நிர்வாகம் புதிய போர்க்கள உத்திகளைக் கற்றுக்கொள்வதாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் எச்சரித்த போதிலும், வட கொரியாவைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட தென் கொரியாவுடனான கூட்டு ராணுவப் பயிற்சிகளைக் குறைப்பதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
தென் கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் இரண்டு முக்கிய வருடாந்திரப் பயிற்சிகளில் ஒன்றான 'உல்ச்சி ஃப்ரீடம் ஷீல்ட்' (Ulchi Freedom Shield) பயிற்சிகள் திங்கள்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 27 வரை நடைபெறவுள்ளன.
இப்பயிற்சிகளில் சுமார் 18,000 தென் கொரியப் படைவீரர்களுடன், அமெரிக்கப் படைகளும், ஐக்கிய நாடுகள் கட்டளைப் பிரிவின் (UNC) 18 உறுப்பு நாடுகளில் 11-ஐச் சேர்ந்த பணியாளர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரியப் போரின் மோதல்களை நிறுத்திய 1953-ஆம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தத்தைக் கண்காணிக்கும் பன்னாட்டு அமைப்பே இந்த UNC ஆகும்.இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை மாலை, அமெரிக்க ஜனாதிபதி, "கிம் ஜாங்-உன்னுடன் எனக்குள்ள மிக நல்ல உறவின் அடிப்படையில்" அமெரிக்காவின் பங்கேற்பில் தனக்கு "மகிழ்ச்சியில்லை" என்று கூறினார்.
மேலும் அவர், இந்தப் பயிற்சிகள் அதிக செலவு மிக்கவை என்றும், "டொனால்ட் ஜே டிரம்ப் ஜனாதிபதியாக இருந்த காலம் முதல் அச்சுறுத்தலற்றதாகவும் மரியாதைக்குரியதாகவும் இருந்து வரும் ஒரு நாட்டிற்கு, முற்றிலும் பொருத்தமற்ற மற்றும் விரோதமான ஒரு சமிக்ஞையை அனுப்புகின்றன" என்றும் கூறினார்.
பயிற்சிகளை ரத்து செய்வதற்கு மிகவும் தாமதமாகிவிட்டதால், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத்திடம் அவற்றை "கணிசமாகக் குறைக்குமாறு" உத்தரவிட்டதாக டிரம்ப் மேலும் கூறினார். "ஈரானின் இஸ்லாமியக் குடியரசை அணு ஆயுதமற்றதாக மாற்றுவதற்கு" தென் கொரியா உதவ மறுத்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
சனிக்கிழமையன்று, டிரம்ப் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் வட கொரியத் தலைவருடன் தான் போஸ் கொடுக்கும் ஒரு பழைய புகைப்படத்தைப் பகிர்ந்து, இருவரும் "மிக நன்றாகப் பழகுகிறார்கள்" என்ற தனது கூற்றை மீண்டும் வலியுறுத்தினார். இது, கிம்முடன் உச்சிமாநாட்டை நடத்துவதற்கான தனது முயற்சியை அவர் மீண்டும் தொடங்குவார் என்ற யூகங்களுக்கு வழிவகுத்தது.
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தமது பூர்வீக காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அமைதிப் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை 9-வது வாரமாகவும் தொடர்ந்தது.
இன்றைய போராட்டம் வழக்கமான வடிவத்திலிருந்து மாற்றப்பட்டு கவனயீர்ப்பு ஊர்வலமாக முன்னெடுக்கப்பட்டது:
கவனயீர்ப்புப் பேரணி: பலாலி புனித செபஸ்தியார் ஆலய முன்றலில் திரண்ட பொதுமக்கள், கறுப்பு மேலங்கி அணிந்தும் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறும் பலாலி சந்தி நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.
பலாலி சந்திக்கு அருகிலுள்ள இராணுவ முன்னரங்கப் பகுதிக்கு முன்பாகத் திரண்ட மக்கள், கடந்த 36 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமது சொந்தக் காணிகள், வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி பல மணிநேரம் தொடர்ச்சியாகக் கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் பலாலி சந்திப் பகுதிக்கு நகர்ந்த போராட்டக்காரர்கள், மதியம் வரையில் அங்கேயே தங்கியிருந்து தமது உறுதியான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
நீண்டகாலமாகத் தொடரும் இக்காணி அபகரிப்புப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் எனவும், தமது சொந்த நிலங்களில் மீளக் குடியேறும் வரை இப்போராட்டம் ஓயாது எனவும் மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற திட்டமிட்ட குற்றக் குழுவின் முக்கிய குற்றவாளியான கஞ்சிபானி இம்ரான் விரைவில் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சர்வதேச காவல்துறையின் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 58 பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் இதுவரை இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.'
'நாட்டிலிருந்து தப்பி வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபாணி இம்ரான், மிக விரைவில் நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவரப்படுவார்.இதுவரை சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 58 குற்றவாளிகள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளர்.
இந்நாட்டில் இயங்கிவரும் மிகப்பெரிய ஐந்து போதைப்பொருள் கடத்தல்காரர்களில் இவரும் ஒருவர். இம்ரான் குழுவுடன் தொடர்புடைய மூவர் நான்கு நாட்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்டனர்.
கள்ளக்குறிச்சியில் இன்று நடைபெறவுள்ள விசிகவின் ‘தமிழ் தேசிய எழுச்சி மாநாடு’ வெற்றிகரமாக நடைபெற வாழ்த்தி திருமாவளவனுக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சரின் கடிதத்தில்"தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு" வெற்றிகரமாக நடைபெற எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"திராவிடமும் தமிழ்த் தேசியமும் இந்த மண்ணின் இரு கண்கள்" என்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கொள்கை விளக்க மாநாட்டிலேயே அறிவித்தோம்.
எங்கள் செயற்குழு நிறைவேற்றிய தீர்மானத்தில், ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை உருவாக்க "பொது வாக்கெடுப்பு" நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற ஓவியர் அன்டோனெல்லோ டா மெசினா வரைந்த சுமார் ரூ.770 கோடி மதிப்புள்ள 4 அபூர்வ ஓவியங்கள் திருடப்பட்டுள்ளன.
அருங்காட்சியகத்தில் பாதுகாவலர்கள் இருந்தபோதும், பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை அலார அமைப்புகளை முறியடித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பாதுகாக்கப்பட்ட கண்ணாடி பெட்டியை உடைத்து குறித்த 4 ஓவியங்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
தப்பியோடும் அவசரத்தில் 2 ஓவியங்களை அங்கேயே போட்டு விட்டுச் சென்றுள்ளனர்.
இந்த ஓவியங்களின் திருட்டு குறித்து இத்தாலி பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
யாழ் வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது சொந்த நிலங்களை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்களான பொதுமக்கள் இராணுவத்தினரின் “கொமாண்டோ” பங்களா முன்பாக இன்றைய தினம் 17 ஆவது வாரமாகத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
யுத்தம் நிறைவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், பாதுகாப்புத் தரப்பினர் வெளியேறாமல் பூர்வீக நிலங்களை முடக்கி வைத்துள்ளதற்கு எதிராகவே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வலிகாமம் வடக்கில் உள்ள ஜே/256, ஜே/248, ஜே/251 மற்றும் ஜே/255 ஆகிய கிராம உத்தியோகத்தர் (சேவையாளர்) பிரிவுகளைச் சேர்ந்த தமிழ் மக்கள், கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் அவர்களது பூர்வீக வாழ்விடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.
போர் நிறைவடைந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அப்பகுதிகள் தொடர்ந்தும் உயர் பாதுகாப்பு வலயமாகவே பேணப்பட்டு வருவதுடன், மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவது இராணுவத்தினரால் தடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு பல வருடங்களாகப் பல்வேறு மட்டங்களில் கோரிக்கைகள் விடுத்தும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதாக மக்கள் எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக, இன்றைய தினமும் 17 ஆவது வாரமாக இப் போராட்டம் உறுதியுடன் முன்னெடுக்கப்பட்டது.