திங்கள், 17 ஆகஸ்ட், 2026

இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்!

இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற திட்டமிட்ட குற்றக் குழுவின் முக்கிய குற்றவாளியான கஞ்சிபானி இம்ரான் விரைவில் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சர்வதேச காவல்துறையின் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 58 பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் இதுவரை இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.'

'நாட்டிலிருந்து தப்பி வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபாணி இம்ரான், மிக விரைவில் நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவரப்படுவார்.இதுவரை சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 58 குற்றவாளிகள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளர். 

இந்நாட்டில் இயங்கிவரும் மிகப்பெரிய ஐந்து போதைப்பொருள் கடத்தல்காரர்களில் இவரும் ஒருவர். இம்ரான் குழுவுடன் தொடர்புடைய மூவர் நான்கு நாட்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks