வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று தீவுகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை ஒன்றை விடுத்துள்ளார்.
அதன்படி, குறித்த மூன்று தீவுகளையும் பசுமை சக்தித் தீவுகளாக (Green Energy Islands) மேம்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
எரிசக்தி அமைச்சுக்கான 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய தீவுகளில் தற்போது நடைமுறையில் உள்ள கலப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (HRES) திட்டங்களை மையமாக வைத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடியின் போது இடைநிறுத்தப்பட்ட, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட எரிசக்தித் திட்டங்களை விரைவாக மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
புடின் அரசுக்கு பெரும் நெருக்கடி கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ரஷ்ய தடை மசோதாவில் பெரும் மாற்றத்தை அமெரிக்க செனேட்டர்கள் கொண்டு வந்துள்ளனர். இந்த மாற்றம் மூலம் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் இந்சியாவுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரு கட்சிகளாலும் ஒப்புதல் பெற்ற Russia sanctions bill-ல் சில முக்கியமான தளர்வுகள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த மசோதா கொண்டு வர முக்கிய காரணம் ரஷ்ய அதிகாரிகள், தலைவர்கள், ரஷ்யா உடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது கடுமையான வரி விதிப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த மசோதாவில் அறிவிக்கப்பட்ட முக்கியமான விஷயம் என்னவென்றால் ரஷ்யா எண்ணெய் மற்றும் எரிபொருள் வாங்கும் நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிக்கப்பட்டும் என நிலைப்பாடு உருவாக்கப்பட்டது. தற்போது அமெரிக்க செனேட்டர்கள் இந்த விதியை தளர்த்த முடிவு செய்து 500 சதவீத வரியை 100 சதவீதமாக குறைத்துள்ளனர்.
அதுவும் இந்த 100 சதவீத வரி என்பது ரஷ்யாவுடன் அதிக எண்ணெய் வாங்கும் டாப் 5 நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் இந்த Russia sanctions மசோதா திருத்தப்பட்டு உள்ளது. இந்த மசோதாவை உருவாக்கியவர் Lindsey Graham, இவர் கடந்த 11 ஆம் தேதி திடிரென மறைந்த நிலையில் இந்த திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர் இறப்பதற்கு முன்பே அமெரிக்க அதிபர் டிரம்ப்-யிடம் திருத்திற்கான ஒப்புதலை பெற்றதாக கூறினார் என்பதும் கவனிக்கப்பட வேண்டியது.
இந்த புதிய திருத்தம் மூலம் அதிகளவில் பயன் பெறப்போவது யாரென்றால் ரஷ்யாவுடன் அதிகம் கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்யும் டாப் 5 நாடுகள் தான், இதில் சீனா, இந்தியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அசர்பைஜான். இதேபோல் அதிக எரிவாயு வாங்கும் நாடுகளில் சீனா, பிரான்ஸ், ஜப்பான், ஹங்கேரி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் உள்ளது.
அமெரிக்க அரசு இந்த திருத்தம் கொண்டு வர முக்கியமான காரணம் என்னவென்றால் இந்த 500 சதவீத வரியால் அமெரிக்காவின் நடப்பு நாடுகளும் பாதிக்கப்படுகிறது.
இதை சரி செய்யவே அமெரிக்க செனேட்டர்கள் இந்த மாற்றத்தை கொண்டு வர டிரம்பிம் ஒப்புதல் பெற்றனர். ஆனால் இது bipartisan legislation என்பதால் இதற்கு இரு கட்சிகளும் மீண்டும் ஒப்புதல் அளிக்க வேண்டும். அடுத்த கட்டமாக இந்த மசோதாவில் ஈரான் மற்றும் ஹிபுல்லாவை சேர்க்கவும் டிரம்ப் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது ஒருபக்கம் ரஷ்யா மீதான கிடுக்குபிடியை அமெரிக்கா தளர்த்துவதாக கூறப்பட்டாலும், உலகளாவிய வர்த்தகத்தில் ரஷ்யாவின் பங்கு அதிகமாக இருக்கும் காரணத்தால் இது முறைமுகமாக அமெரிக்காவையும் பாதிக்கிறது.
இந்த Russia sanctions bill மூலம் ரஷ்யாவின் வர்த்தகத்தையும், ஏற்றுமதியை முடக்கி அந்நாட்டுக்கான நிதி ஆதாரத்தை குறைத்து உக்ரைன் போரில் இருந்து பின்வாங்க வைக்க வேண்டும் என்ற குறிக்கோள் உடன் கொண்டு வரப்பட்டாலும், 4 ஆண்டுகளாக தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் உடன் போரிட்டு வருகிறது.
சென்னையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜா தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அம்பத்தூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ராஜா கைதானார். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் வயிற்று வலி என கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அம்பத்துாரைச் சேர்ந்தவர் ராஜா (வயது 20). இவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில், அம்பத்துார் மகளிர் போலீசாரால், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த மாதம் 15ம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
தன் கிட்னியில் கல் இருப்பதால், வயிறு வலிப்பதாக புழல் சிறை போலீசாரிடம், ராஜா நேற்று மதியம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ராஜா உட்பட இரண்டு விசாரணை கைதிகளை, ஐந்து ஆயுதப்படை காவலர்கள், போலீஸ் வாகனத்தில், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அம்பத்துாரைச் சேர்ந்தவர் ராஜா (வயது 20). இவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில், அம்பத்துார் மகளிர் போலீசாரால், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த மாதம் 15ம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
தன் கிட்னியில் கல் இருப்பதால், வயிறு வலிப்பதாக புழல் சிறை போலீசாரிடம், ராஜா நேற்று மதியம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ராஜா உட்பட இரண்டு விசாரணை கைதிகளை, ஐந்து ஆயுதப்படை காவலர்கள், போலீஸ் வாகனத்தில், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
சிகிச்சைக்கு பின், மருத்துவமனையில் உள்ள உணவகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது, காவலர்களின் கவனத்தை திசை திருப்பிய ராஜா, போலீசாரை ஏமாற்றி விட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து ராஜா தப்பிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மற்ற கைதியை உடனடியாக மூன்று காவலர்கள், புழல் சிறைக்கு அழைத்து சென்றனர். இரண்டு காவலர்கள், மருத்துவமனை முழுவதும் தேடியும் ராஜா கிடைக்கவில்லை. தலைமறைவான ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நேற்று (15) ஆரம்பமாகியுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 32 நாட்கள் அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ள நிலையில், கடந்த 23 ஆம் திகதியுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் நேற்று முதல் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்டத்தின் 33 ஆவது நாளான நேற்று புதிதாக 2 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவை இரண்டும் சிறுவர்களுடையதாகும். அதேவேளை இரண்டு என்புக்கூட்டு குவியல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
நேற்று என்புக்கூடுகள் எவையும் அகழ்ந்து எடுக்கப்படவில்லை.
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் இதுவரையில் 87 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 414 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 409 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் ஆசிரியை மற்றும் அவரது கணவர் ஆகியோர் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப் பொருள் தொகையுடன் மாதம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு வடக்கு பிராந்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையின் போதே இந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேக நபரான ஆண்டமிருந்து 1 கிலோ 6 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளும், பெண்ணிடமிருந்து 149 கிராம் 150 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளின் போது, இவர்கள் 'மொதர மயூர' என்ற பிரபல போதைப்பொருள் கடத்தல்காரனின் கூட்டாளிகள் என்பது தெரியவந்துள்ளது.
அத்துடன், இந்த தம்பதியினர் நீண்டகாலமாக இப்போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமையும் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
இருப்பினும், சந்தேகநபரான பெண் பொலிஸ் விசாரணைகளின் போது, தான் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் சட்டப் பட்டப்படிப்பு படித்து வருவதாகவும், அதற்கான கல்விச் செலவுகளை ஈடுகட்டும் நோக்கிலேயே இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரான பெண் மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற உத்தரவிவிற்கு அமைய 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம், சந்தேகநபரான ஆடவரிடம் நடத்தப்படும் விசாரணைகளின் பின்னர் அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ வழக்கின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்திக்கு எதிராக மேலும் 30 நாள் தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவு நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவிப்பதற்கான நடவடிக்கைகள் நேற்று (13.07.2026)மேற்கொள்ளப்பட்டன.
2025, பெப்ரவரி 19 அன்று, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் 5 ஆம் நீதிமன்ற அறையில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
இது குறித்து கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகள் இந்த விவரங்களை கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வாவிடம் சமர்ப்பித்துள்ளனர்.சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தடுப்புக்காவலை , ஒகஸ்ட் 12 ஆம் திகதி வரை நீடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலை தொடர்பாக தற்போது வெளிநாட்டில் உள்ள, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி என சந்தேகிக்கப்படும் சுபுன் தயரத்ன என்ற ஹீனதியான மகேஷ் என்பவரைக் கைது செய்வதற்காக, இன்டர்போல் மூலம் பிடியாணை பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தயார் செய்துள்ளதாகக் குற்றப்பிரிவு நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.
இதன்படி முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதவான், தொடர்புடைய விசாரணைகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்குமாறு கொழும்பு குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.