வியாழன், 28 மே, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரான்சில் CID விசாரணை!!

உயிர்த்த ஞாயிறன்று நடந்த தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் 272 பேர் உயிரிழந்தனர்.

 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தக் கொடூரமான படுகொலைகளின் பின்னணியில் வெறும் தீவிரவாத குழுக்கள் மட்டுமின்றி, ஒரு பாரிய அரசியல் சதிவலை இருந்தது என்ற சந்தேகம் ஆரம்பம் முதலே நிலவி வந்தது. 

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே — முன்னாள் இராஜாங்க உளவுத்துறை தலைவர் — 2026 பிப்ரவரி 25 அன்று கொழும்பில் கைது செய்யப்பட்டார். தாக்குதல்களில் சதித்திட்டம் மற்றும் உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்தக் கைது நடந்தது. CID இயக்குநர் ஷானி அபேசேக்கர தலைமையிலான குழு பிரான்சுக்குச் சென்று, இலங்கை தூதரக அதிகாரி இல்லத்தில் ஹன்ஸீர் அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை பதிவுசெய்தது. 

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 14 பக்க அறிக்கையில் கூடுதல் சிறப்பு நீதிபதி திலீப பெய்ரிஸ் தெரிவிக்கையில், சுரேஷ் சல்லே இந்தத் தாக்குதல்களின் ‘சூத்திரதாரி’ என்றும், இந்த நடவடிக்கை ஒரு அரசியல் நோக்கத்தை அடைவதற்காக மேற்கொள்ளப்பட்டது என்றும் மௌலானாவின் வாக்குமூலம் தெரிவிக்கிறது என்றும் கூறினார். பிணங்களின் மீது ஏறி நின்று அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற அந்தப் பேராசைதான் இந்தத் தாக்குதலுக்கு பின்னால் இருந்தது என்ற கேள்வி இன்று நீதிமன்றம் வரை சென்றுள்ளது. 

 “பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று சர்வதேச ரீதியில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எவ்வளவு பொதுப்பணம் செலவானாலும் சரி, எவ்வித தயக்கமுமின்றி அதனைச் செலவிட்டு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்துவதுதான் தற்போதைய அரசாங்கத்தின் பிரதான பொறுப்பு.

” ஏழு ஆண்டுகளாக நீதி கிடைக்காமல் தவித்து வந்த கத்தோலிக்க திருச்சபையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களும் இந்த புதிய விசாரணை முன்னேற்றங்களை வரவேற்றுள்ளனர்.

 25 பேருக்கு எதிராக 23,000க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளுடன் கூடிய வழக்கு மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு தினமும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

களுத்துறை வெட்டுமக்கட துப்பாக்கிச் சூடு!

களுத்துறை மசூதி வீதி, வெட்டுமக்கட பகுதியில் இன்று காலை சுமார் 8.59 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த துப்பாக்கிச் சுடானது, ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்களில் பயணித்துக் கொண்டிருந்த வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து காரில் வந்த நபர் ஒருவரால் நடத்தப்பட்டுள்ளது.இந்தத் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சம்மந்தப்பட்ட வர்த்தகர், நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

வெல்லமண்டி நடராஜன், தவெகவில் இணைந்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தவெகவில் இணைந்தார். அதிமுக பிரிந்தபோது ஓ.பி.எஸ்.ஆதரவாளராக சில மாதங்கள் செயல்பட்டு வந்தார் வெல்லமண்டி நடராஜன். ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததால் வெல்லமண்டி நடராஜன் எடப்பாடி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார். 

தொடர்ந்து, அவருக்கு அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வெல்லமண்டி நடராஜன் தவெகவில் இணைந்தார். தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை நேரில் சந்தித்து வெல்லமண்டி நடராஜன் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி- சி.வி.சண்முகம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டது. 

இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதையடுத்து எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்து ஒரே அணியாக செயல்பட தொடங்கியுள்ளனர். 

இதனிடையே, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தனர்.

புதன், 27 மே, 2026

வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது!!

சீனப் பிரஜைகள் குழுவொன்றுக்குச் சொந்தமான வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமான முறையில் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில், வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். 


 மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சந்தேக நபரான குறித்த பொறுப்பதிகாரியை வெயாங்கொடை பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

 ராஜகிரிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட 19 சீனப் பிரஜைகளின் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இந்தப் பொறுப்பதிகாரி தம்வசம் வைத்திருந்ததுடன், அவற்றை விடுவிப்பதற்காக ஒருவரிடம் 3 இலட்சம் ரூபா வீதம் பணம் கோரியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

ஒரு பெண் மூலமாகவே பொலிஸ் பொறுப்பதிகாரி இந்தத் தொகையை கோரியுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கனடாவில் 17 இந்தியர்கள் கைது!

கனடாவில் வசிக்கும் தெற்காசிய மற்றும் இந்திய வம்சாவளி வர்த்தகர்களைக் குறிவைத்து நடத்தப்பட்டு வந்த சர்வதேச மிரட்டல் கும்பலின் முக்கிய நெட்வொர்க்கை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள பீல் பிராந்தியத்தில் வசிக்கும் தெற்காசிய வணிகர்கள் மற்றும் இந்திய சமூக மக்களைப் பணம் கேட்டு மிரட்டுதல், துப்பாக்கிச் சூடு நடத்துதல் போன்ற குற்றங்கள் சமீபகாலமாக அதிகரித்து வந்தன. 

இதனைத் தடுக்க அமைக்கப்பட்ட பீல் பிராந்திய காவல் துறையின் சிறப்பு மிரட்டல் தடுப்புப் பிரிவு, சர்வதேசக் குற்றக் கும்பல் ஒன்றுக்கு எதிராக நடத்திய பல மாத ரகசிய விசாரணையின் முடிவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 பேரைக் கைது செய்துள்ளது. 

கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் 'ஃபார் பிரதர்ஸ்' என்ற பயங்கரக் குற்றவியல் கும்பலுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 கடந்த டிசம்பர் 2025 முதல் தொடங்கப்பட்ட இந்த 'புராஜெக்ட் பிளாட்டினம்' கூட்டுப் புலனாய்வு நடவடிக்கையில், கனடா நாட்டின் பீல் பிராந்திய காவல்துறை, ஒண்டாரியோ மாகாண காவல்துறை, கனடா எல்லைப் பாதுகாப்பு முகமை, நிதிப் பரிவர்த்தனை பகுப்பாய்வு மையம் மற்றும் அமெரிக்காவின் முதன்மைப் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ ஆகியவை இணைந்து செயல்பட்டன.

கனடா 3 நாடுகளுக்கு பயணத் தடை!!

மூன்று ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் நாட்டிற்குள் நுழைவதற்கு கனடா அரசாங்கம் தற்காலிகத் தடை விதித்துள்ளது. அதன்படி, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, உகண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் புதன்கிழமை முதல் 90 நாட்களுக்கு கனடாவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 


 எபோலா வைரஸ் கனடாவுக்குள் நுழைவதையும், அது நாட்டில் பரவுவதையும் தடுப்பதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் 'புந்திபுக்யோ' வகை எபோலா வைரஸ் தேசிய தொற்றுநோய் நிலையை எட்டுவதற்கான அபாயம் "மிகவும் அதிகம்" என்று உலக சுகாதார அமைப்பு அண்மையில் அறிவித்திருந்தது.

அமெரிக்க நீதித் துறையையே ‘வளைத்த’ அதானி!

இந்தியப் பெருமுதலாளியான கவுதம் அதானி, 10 பில்லியன் டாலர்களை (84,000 கோடி ரூபாய்) அமெரிக்காவில் முதலீடு செய்வதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, அவர் மீதான அனைத்து குற்ற வியல் மற்றும் சிவில் வழக்குகளையும் அமெரிக்க நீதித்துறை நிரந்தரமாகத் தள்ளுபடி செய்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் அதானி குழுமம் மீதான நிதி மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதித்துறை (DoJ) முழுமையாக கைவிட்டு விட்டது; போதிய ஆதாரங்கள் இல்லாததாலும், வழக்கை மேற்கொண்டு நடத்தத் தேவையில்லை என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் முடிவு செய்ததாலும் இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம் அதானி குழுமம் மீது அமெ ரிக்காவில் நடந்து வந்த அனைத்து சட்டப்பூர்வ விசாரணைகளிலிருந்தும் அதானி தப்பித்துக் கொண்டுள்ளார்.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக-வின் ஆதரவால் உலகப் பணக்கா ரர்களில் ஒருவராக உயர்ந்த கவுதம் அதானி, அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றி, கடந்த 2024 ஆம் ஆண்டு 3 பில்லியன் டாலர்களுக்கும் மேல் பணம் திரட்டியதாக நியூயார்க் நீதிமன்றத்தில் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி மீது குற்ற வியல் மோசடி வழக்கு தொடரப்பட்டது.

இந்தியாவில் சூரிய மின்சக்தி திட்டங்க ளுக்கான அனுமதியைப் பெறுவதற்காக, இந்திய அரசு அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர்களை அதானி லஞ்சம் கொடுத்துள்ளார். 

அமெரிக்க முதலீட்டாளர்களிடமிருந்து பெற்ற முதலீட்டை இவ்வாறு தவறான வழிகளில் அதானி பயன்படுத்தியுள்ளார் என்று அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையமும் (SEC) சிவில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இவை மட்டுமல்லாமல், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், அரபு அமீரகத்தைச்சேர்ந்த ஒரு வர்த்தகரிடமிருந்து ஈரான் எரிவாயுவை ஓமன் மற்றும் ஈராக் நாட்டு எரிவாயு என்ற பெயரில் வாங்கியதாகவும், ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை மீறி அந்த வர்த்தகம் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடந்தது.

இவ்வழக்குகளில் தனக்காக வாதாட, சல்லிவன் & குரோம் வெல் உள்ளிட்ட 5 முன்னணி அமெரிக்க சட்ட நிறுவனங்களை அதானி அமர்த்தியிருந்தார். அந்த நிறுவனங்கள் அதானியைக் காப்பாற்ற தீவிரமாக வேலை செய்து வந்த நிலையில் தான், 10 பில்லியன் டாலர் முதலீடு என்ற ‘சமரசத் திட்டம்’ மூலம் அனைத்து வழக்குகளும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

 அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்தால் அதானி மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்படும் என கடந்த சில நாட்களஅமெரிக்க நீதித்துறையும், அதானி மீதான வழக்குகள் தீர்க்கப்பட்டு விட்டதாகவும், இதன்மீது மீண்டும் மேல்முறையீடு கோர முடியாது என்று வித் பிரிஜூடிஸ் (“With Prejudice”) என்ற முறையில் வழக்குகளைத் தள்ளுபடி செய்துள்ளது.

 அமெரிக்கக் குற்ற வியல் நடைமுறைகளில் இதுபோன்ற வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுவது மிகவும் அரிதானவை. ஒரு வழக்கை விரிவாக ஆய்வு செய்த பிறகு, அதை மேற்கொண்டு நடத்துவது தேவை யற்றது என்ற முடிவுக்கு வரும்போது மட்டுமே இத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். ஆனால், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு அதானி மீதான வழக்குகளை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. 

அதேபோல, எண்ணெய் வாங்கிய விவ காரத்தில் அதானி குழுமம் முழு ஒத்துழைப்பு வழங்கி, 275 மில்லியன் டாலர்கள் அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டதால் அந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டுள்ளது.ுக்கு முன்பே, செய்திகள் வெளியாகின. 

அதன்படியே தற்போது நடந்துள்ளது. 10 பில்லியன் டாலர்களைக் கொட்டிக் கொடுத்து, அதானி தப்பித்துக் கொண்டுள்ளார்.அவர் அதானி அமெரிக்காவில் 10 பில்லி யன் டாலர்கள் (சுமார் 84,000 கோடி ரூபாய்) முதலீடு செய்ய விரும்புகிறார். ஆனால் அவர் மீது வழக்குகள் நிலுவையில் இருக்கும் வரை அவரால் முதலீடு செய்ய முடியாது என குறிப்பிட்டிருந்தார்.

Thank You Google

Thank You Google
Thanks