புதன், 27 மே, 2026

வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது!!

சீனப் பிரஜைகள் குழுவொன்றுக்குச் சொந்தமான வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமான முறையில் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில், வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். 


 மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சந்தேக நபரான குறித்த பொறுப்பதிகாரியை வெயாங்கொடை பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

 ராஜகிரிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட 19 சீனப் பிரஜைகளின் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இந்தப் பொறுப்பதிகாரி தம்வசம் வைத்திருந்ததுடன், அவற்றை விடுவிப்பதற்காக ஒருவரிடம் 3 இலட்சம் ரூபா வீதம் பணம் கோரியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

ஒரு பெண் மூலமாகவே பொலிஸ் பொறுப்பதிகாரி இந்தத் தொகையை கோரியுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks