புதன், 27 மே, 2026

கனடாவில் 17 இந்தியர்கள் கைது!

கனடாவில் வசிக்கும் தெற்காசிய மற்றும் இந்திய வம்சாவளி வர்த்தகர்களைக் குறிவைத்து நடத்தப்பட்டு வந்த சர்வதேச மிரட்டல் கும்பலின் முக்கிய நெட்வொர்க்கை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள பீல் பிராந்தியத்தில் வசிக்கும் தெற்காசிய வணிகர்கள் மற்றும் இந்திய சமூக மக்களைப் பணம் கேட்டு மிரட்டுதல், துப்பாக்கிச் சூடு நடத்துதல் போன்ற குற்றங்கள் சமீபகாலமாக அதிகரித்து வந்தன. 

இதனைத் தடுக்க அமைக்கப்பட்ட பீல் பிராந்திய காவல் துறையின் சிறப்பு மிரட்டல் தடுப்புப் பிரிவு, சர்வதேசக் குற்றக் கும்பல் ஒன்றுக்கு எதிராக நடத்திய பல மாத ரகசிய விசாரணையின் முடிவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 பேரைக் கைது செய்துள்ளது. 

கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் 'ஃபார் பிரதர்ஸ்' என்ற பயங்கரக் குற்றவியல் கும்பலுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 கடந்த டிசம்பர் 2025 முதல் தொடங்கப்பட்ட இந்த 'புராஜெக்ட் பிளாட்டினம்' கூட்டுப் புலனாய்வு நடவடிக்கையில், கனடா நாட்டின் பீல் பிராந்திய காவல்துறை, ஒண்டாரியோ மாகாண காவல்துறை, கனடா எல்லைப் பாதுகாப்பு முகமை, நிதிப் பரிவர்த்தனை பகுப்பாய்வு மையம் மற்றும் அமெரிக்காவின் முதன்மைப் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ ஆகியவை இணைந்து செயல்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks