வியாழன், 28 மே, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரான்சில் CID விசாரணை!!

உயிர்த்த ஞாயிறன்று நடந்த தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் 272 பேர் உயிரிழந்தனர்.

 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தக் கொடூரமான படுகொலைகளின் பின்னணியில் வெறும் தீவிரவாத குழுக்கள் மட்டுமின்றி, ஒரு பாரிய அரசியல் சதிவலை இருந்தது என்ற சந்தேகம் ஆரம்பம் முதலே நிலவி வந்தது. 

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே — முன்னாள் இராஜாங்க உளவுத்துறை தலைவர் — 2026 பிப்ரவரி 25 அன்று கொழும்பில் கைது செய்யப்பட்டார். தாக்குதல்களில் சதித்திட்டம் மற்றும் உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்தக் கைது நடந்தது. CID இயக்குநர் ஷானி அபேசேக்கர தலைமையிலான குழு பிரான்சுக்குச் சென்று, இலங்கை தூதரக அதிகாரி இல்லத்தில் ஹன்ஸீர் அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை பதிவுசெய்தது. 

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 14 பக்க அறிக்கையில் கூடுதல் சிறப்பு நீதிபதி திலீப பெய்ரிஸ் தெரிவிக்கையில், சுரேஷ் சல்லே இந்தத் தாக்குதல்களின் ‘சூத்திரதாரி’ என்றும், இந்த நடவடிக்கை ஒரு அரசியல் நோக்கத்தை அடைவதற்காக மேற்கொள்ளப்பட்டது என்றும் மௌலானாவின் வாக்குமூலம் தெரிவிக்கிறது என்றும் கூறினார். பிணங்களின் மீது ஏறி நின்று அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற அந்தப் பேராசைதான் இந்தத் தாக்குதலுக்கு பின்னால் இருந்தது என்ற கேள்வி இன்று நீதிமன்றம் வரை சென்றுள்ளது. 

 “பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று சர்வதேச ரீதியில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எவ்வளவு பொதுப்பணம் செலவானாலும் சரி, எவ்வித தயக்கமுமின்றி அதனைச் செலவிட்டு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்துவதுதான் தற்போதைய அரசாங்கத்தின் பிரதான பொறுப்பு.

” ஏழு ஆண்டுகளாக நீதி கிடைக்காமல் தவித்து வந்த கத்தோலிக்க திருச்சபையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களும் இந்த புதிய விசாரணை முன்னேற்றங்களை வரவேற்றுள்ளனர்.

 25 பேருக்கு எதிராக 23,000க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளுடன் கூடிய வழக்கு மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு தினமும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks