பசுமை ஜெட் எரிபொருளானது விவசாய கழிவுகள், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் உள்ளிட்டவை மூலம் தயாரிக்கப்படுகிறது.
கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்காக, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இந்த தேசியக் கொள்கை வரைவை வெளியிட்டுள்ளது. இந்த வரைவு முன்மொழிவின்படி, 2028-க்குள் பசுமை ஜெட் எரிபொருள் கலப்பு 2 சதவீதமாகவும், 2030-க்குள் 5 சதவீதமாகவும் அதிகரிக்கப்படும். மேலும் 2040-க்குள் 20% வரை கலக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் இதில் சில சவால்கள் இருப்பதை நிபுணர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். பசுமை ஜெட் எரிபொருள் சாதாரண எரிபொருளை விட விலை அதிகம் என்பதால், விமானக் கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளது.
அதே போல நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகளை எட்ட இந்தியாவில் போதிய உற்பத்தி ஆலைகளும், கழிவு சேகரிப்பு கட்டமைப்புகளும் போதுமானதாக இல்லாததால், அதற்கான ஏற்பாடுகள் வேகமாக மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறி உள்ளனர்.
இதனிடையே எரிபொருள் நிறுவனங்கள் அதிக அளவில் பசுமை எரிபொருளை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் வகையில்,ரூ.500 கோடி மதிப்பிலான நிதி உதவி உள்ளிட்ட ஆதரவு நடவடிக்கைகளை வழங்க அரசு திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக