இந்நிலையில், கடந்த சில நாட்களாக புளியங்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர் லாவண்யா பணியாற்றி வந்துள்ளார். அப்போது, மருத்துவமனைக்கு வந்த சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வரும் விஜய் பிரதாப் சிங் என்பவர், பணியில் இருந்த செவிலியர் லாவண்யாவிடம் திடீரென தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் சக ஊழியர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, மருத்துவமனை மருத்துவ அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக