அதேபோல, ஒரே ஆண்டில் கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களில் எண்ணிக்கையில் இதுவே மிக அதிகம் எனக் கூறப்படுகிறது.
இதுதொடர்பான தரவுகள் கனடா எல்லைச் சேவைகள் முகமையின் கீழ் வெளியாகியுள்ளது.
கனடாவில் 2020 ஆம் ஆண்டிற்குப் பின் இனவாரியான வெளியேற்றப் பட்டியலில் இந்தியர்களே மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
2020இல் கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்ட வெளி நாட்டவர்களின் எண்ணிக்கை 12,858. அதில், 1,424 பேர் இந்தியர்கள். அதா வது 11 சதவீத இந்தியர்கள் ஆவார்.
இடைப்பட்ட ஆண்டுகளில் மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள் அதிகளவு வெளியேற்றப்பட்ட நிலையில், இந்தாண்டு இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.
கனடாவிற்குள் நுழையத் தகுதியற்றவர்களாக கடந்த ஆண்டு 3,779 இந்தியர்கள் கருதப்பட்டனர். அதே ஆண்டில் மொத்தமாக 23,160 பேர் வெளியேற்றப்பட்டதில் 4,837 பேர் மெக்சிகோ நாட்டைச் சார்ந்தவர்கள்.
வெளியாகும் தரவுகளின் மூலம் இந்தியர்கள் தொடர்ந்து வெளியேற்ற நடவடிக்கைகளுக்கு ஆளாகும் குழுவாக உள்ளனர் என்பது தெரிய வருகிறது. குறிப்பாக, நிலுவையில் உள்ள 52,457 வெளியேற்ற வழக்குகளில் 11,393 வழக்குகள் இந்தியக் குடிமக்களுக்கு எதிரானவை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக