புதன், 4 நவம்பர், 2026

அமெரிக்க பாராளுமன்றின் இரு அவைகளை கைப்பற்றிய ஜனநாயக கட்சி !!

அமெரிக்க பாராளுமன்றின் பிரதிநிதிகள் சபையின் அதிகாரத்தையும் ஜனநாயக் கட்சி கைப்பற்றியுள்ளது. 435 மொத்த ஆசனங்களில் பெரும்பான்மையை உறுதிப்படுத்த 218 ஆசனங்கள் தேவை என்ற நிலையில் சற்றுமுன்னர் வரை வௌியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் ஜனநாயக் கட்சி 220 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. 


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி இதுவரையில் 128 ஆசனங்களை மாத்திரமே பெற்று பாரிய பின்னடைவை சந்தித்தது. அதேநேரம் முன்னதாக செனட் சபையின் அதிகாரத்தையும் ஜனநாயக கட்சியினர் கைப்பற்றியுள்ளனர். 

அதில் பெரும்பான்மைக்கு 50 ஆசனங்கள் தேவை என்ற நிலையில் 53 ஆசனங்களை கைப்பற்றி முன்னிலை வகிக்கின்றது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி 42 ஆசனங்களையே கைப்பற்றியுள்ளது. 

 இதன்மூலம் தற்போது வரை வௌியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் அமெரிக்க பாராளுமன்றின் இரு அவைகளையும் ஜனநாயக கட்சி வென்றதுடன் முன்னிலையும் வகித்து வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks