புதன்கிழமை அதிகாலையில், 'மிகத் தீவிரமான சூறாவளி புயலாக' (very severe cyclonic storm) 'அர்னாப்' (Arnab) எனும் சூறாவளி, ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் கரையை கடந்தது.
அப்போது காற்றின் வேகம் மணிக்கு 125 முதல் 135 கிலோமீட்டர் வரை இருந்ததாகவும், அவ்வப்போது காற்றின் வேகம் 150 கிலோமீட்டர் வரை அதிகரித்ததாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களின் சில பகுதிகளில் 30 சென்டிமீட்டர் (சுமார் 12 அங்குலம்) வரையிலான கனமழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
புதன்கிழமை பிற்பகலில் இந்தப் புயல் வலுவிழந்து 'ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக' (deep depression) மாறியது.
ஆந்திரப் பிரதேசத்தில் சுமார் 50,000 பேரும், அண்டை மாநிலமான ஒடிசாவில் 48,000 பேரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக