சனி, 31 அக்டோபர், 2026

ஈரோடு அருகே 1 கோடி ருபையை பறித்து சென்ற மர்ம கும்பல் கைது..!!

பெருந்துறையில் கோயில் கட்டுவதற்காக பதினைந்து லட்சம் ரூபாய் நன்கொடை தருவதாகக் கூறி ஒரு கோடி ரூபாய் பறித்துச் சென்ற கும்பலை கைது செய்திருக்கிறார்கள் போலிசார்

. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சாய்பாபா கோவில் அமைப்பதற்கு நன்கொடை வசூலித்த தொழிலதிபரிடம் ஒரு கோடி ரூபாய் ரொக்கப்பணம் கொடுத்தால், ஒரு கோடியே பதினைந்து லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் அனுப்புவதாக கூறி, ஒரு கோடி ரூபாயை பறித்துச் சென்ற ஆறு பேர் கொண்ட கும்பலைத்தான் போலீசார் வந்து கைது செய்துள்ளனர். 

பெருந்துறையை சேர்ந்த அருண் குமார், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மற்றும் பழைய கார்களை வாங்கி விற்கக்கூடிய தொழிலும் செய்து வரக்கூடியவர். தனது நண்பருடன் சேர்ந்து காஞ்சி கோவில் சாலையில் ஒரு சாய்பாபா கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். 

அந்த கோவில் கட்டுவதற்கு கட்டுமான பணிகளுக்கு பணம் தேவைப்படுவதால் நன்கொடை வசூலிலும் ஈடுபட்டிருக்கிறார். 

அப்பொழுது தான் பெருந்துறையை சேர்ந்த சமூக ஆர்வலர் நந்தகுமார் என்பவர் அவர்களை தொடர்பு கொண்டு தனக்கு தெரிந்த நபர்கள் திருப்பூரில் இருப்பதாகவும், அவர்களிடம் ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்தால் ஒரு கோடியை பதினைந்து லட்சம் ரூபாயாக திருப்பி தருவார்கள். 

அதாவது வங்கி கணக்கு மூலமாக தருவார்கள் என கூறியிருக்கிறார். இதன்படி குமாரசாமி என்ற ஒரு நபரையும் அவர் அறிமுகம் செய்திருக்கிறார். இதன் பேரில் குமாரசாமியிடம் அருண் குமார் ஒரு கோடி ரூபாய் பணத்தை கொடுத்திருக்கிறார். 

இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பாக அந்த பெருந்துறைக்கு வந்த குமாரசாமி மற்றும் ஒரு கும்பல் அருண்குமார் அந்த பணத்தை கொடுத்த போது பணம் ஒரு கோடியே பதினைந்து லட்சம் ரூபாயை வங்கி கணக்கில் செலுத்துமாறு கேட்ட பொழுது, அதை தராமல் அந்த பணத்தை பறித்துக்கொண்டு அருண் குமாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 

இது தொடர்பாக அருண் குமார் பெருந்துறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.


இதனையடுத்து திருப்பூரை சேர்ந்த குமாரசாமி, பரமேஷ்வரன், சாய்நாத், சேத்தன், கார்த்திக் மற்றும் சரவணன் ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு கார் மற்றும் இரண்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு. ஒரு கத்தி, இரண்டு லட்சம் ரூபாயையும் கைப்பற்றி உள்ளனர்.

மீதம் இருக்கக்கூடிய 98 லட்சம் ரூபாய் பணத்துடன் மேலும் மூன்று பேர் தலைமறைவாகி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளார். அவர்களையும் தேடி வரக்கூடிய பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

பெருந்துறையில் தொழிலதிபரிடம், கோவில் கட்டுவதற்கு நன்கொடை தருவதாக கூறி, ஒரு கோடி ரூபாயை ஆறு பேர் கொண்ட மர்ம கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர், மேலும் நன்கொடை என்ற பெயரில் 1 கோடி ரூபாய் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks