வியாழன், 1 அக்டோபர், 2026

பொலன்னறுவை இரண்டு பிள்ளைகளின் தந்தை கொலை!

பொலன்னறுவை, கல்தம்பராவ, நிஸ்ஸங்கமல்லபுர பகுதியில் 31 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.


 உயிரிழந்தவர் ஈஸ்வரகே தொன் தில்ஷான் மதுஷங்க என்ற ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து உயிரிழந்தவரின் மனைவி தெரிவிக்கையில், நேற்று பிற்பகல் தனது கணவர் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு, பின்னர் வீட்டுக்கு அருகில் வந்து தம்முடன் தகராறில் ஈடுபட்டு வீட்டை விட்டுச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார். 

அதன்பின்னர் இரவில் அவர் வீட்டுக்கு திரும்பி வராத நிலையில் இன்று காலை வீட்டிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ள பிரதான வீதியில் காயங்களுடன் வீழ்ந்து கிடந்ததை அவதானித்ததாக மனைவி தெரிவித்துள்ளார்.

இது மதுபானம் அருந்தியபோது ஏற்பட்ட மோதலினால் இடம்பெற்ற கொலையா அல்லது வீதியில் வீழ்ந்து கிடந்தபோது விபத்தினால் ஏற்பட்ட மரணமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், பொலன்னறுவை பொலிஸின் பல குழுக்கள் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks