வியாழன், 1 அக்டோபர், 2026

காங்கேசன்துறையில் 187.56 ஏக்கர் காணி உத்தியோகபூர்வமாக விடுவிப்பு!

இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 187.56 ஏக்கர் காணி உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான ஆவணம் பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேர்ணல் நிசங்க யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் நேற்று (30) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. 

காங்கேசன்துறையில் அமையவுள்ள முதலீட்டு வலயத்திற்கு அரச காணி 351.23 ஏக்கர் வழங்குவதற்கு ஜனாதிபதி அங்கீகாரத்துடன் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அவ்வாறு முதலீட்டு வலயத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 351.23 ஏக்கர் காணிப் பரப்பிற்குள், நேற்று உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்ட 187.56 ஏக்கர் காணியும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன் மற்றும் மேஜர் வீரக்கோன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks