இதற்கமைய, யாழ்ப்பாண நீதிமன்றத்தின் பொறுப்பிலுள்ள 15 மில்லியன் ரூபாய் பணமும், யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 70 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான இரு மாடி வீடொன்றுமே இவ்வாறு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.
பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவுகள் நேற்று (15) முதல் 14 நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது
கடந்த 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31ஆம் திகதி யாழ்ப்பாண விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகளினால் 15 மில்லியன் ரூபாய் பணம், லொறி ஒன்றுடன், 5 பேரையும் கைது செய்து கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
இதுதொடர்பாகச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில், யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேக நபரொருவர், போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டிய பணத்தைக் கொண்டு 7 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான இரு மாடி வீட்டை நிர்மாணித்துள்ளமை தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக