அம்பாறை பிரதேச சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், சந்தேகநபரான குறித்த விரிவுரையாளர், ஆசிரியர் கலாசாலை பாடங்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் முக்கிய பொறுப்பில் இருந்து வந்துள்ளார்.
இதன் காரணமாக தாம் இது குறித்து வெளியில் முறைப்பாடு அளித்தால் தங்களது மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு கல்வி வாழ்க்கை பாழாகிவிடும் என்ற அச்சத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் நீண்டகாலமாக மௌனம் காத்து வந்துள்ளதாகப் காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆரச்சிக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் ஆசிரிய பயிற்சி மாணவிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் அம்பாறை மாவட்ட மகளிர் பணியகத்தின் விசேட காவல்துறை குழுவினர் நேற்று (01-10-2026) சந்தேகநபரான குறித்த விரிவுரையாளரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் இன்று (02-10-2026) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
அம்பாறை மாவட்டப் பொறுப்பு பிரதி காவல்துறை மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் பேரிலும், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆரச்சியின் வழிகாட்டலிலும் உதவிப் காவல்துறை அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்னவின் அறிவுறுத்தலின் பேரிலும் மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அம்பாறை மாவட்ட மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி பிரதம காவல்துறை பரிசோதகர் தயானி கமகே, பதில் பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் கே.டி.பி. தரங்கா, காவல்துறை சார்ஜென்ட் வீரசிங்க (37387), காவல்துறை கொன்ஸ்டபிள் சந்திகா (12830), பெண் காவல்துறை சார்ஜென்ட் துஷாரி (3573) மற்றும் பெண் காவல்துறை கொன்ஸ்டபிள்களான உஷானி (10237), சச்சினி (10686) ஆகியோர் அடங்கிய விசேட காவல்துறை குழுவினர் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக