இந்த பாதிப்பு இந்தோனேசியா முதல் இந்தியா வரையிலும், நைஜீரியா முதல் அமெரிக்கா வரையிலும் உலகம் முழுவதும் பரவலாக இருக்கும். எல் நினோ நிகழ்வுகளால் ஏற்படும் வறட்சி, காட்டுத்தீ மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றின் காரணமாகவும் மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்பம் தொடர்பான இந்த உயிரிழப்புகள் பிராந்திய அளவில் மதிப்பிடப்பட்டுள்ளன. எனவே, மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எங்கு மேற்கொள்ளலாம் என்பதையும், அதன் மூலம் உயிர்களை எப்படிக் காப்பாற்றலாம் என்பதையும் இந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
மேம்படுத்தப்பட்ட வெப்ப முன்னறிவிப்புகள், மக்கள் தஞ்சம் புகக்கூடிய குளிர்ச்சியான இடங்கள் (cooling centres), கடும் வெப்பமான நேரங்களில் மருத்துவ நிலையங்களில் கூடுதல் பணியாளர்களை நியமித்தல் மற்றும் திறந்தவெளியில் பணிபுரிபவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவை இத்தகைய நடவடிக்கைகளில் அடங்கும்.தற்போது புவியை வெப்பமாக்கி வரும் எல் நினோ, அதன் எதிர்பார்க்கப்பட்ட உச்சக்கட்டத்திற்கு பல மாதங்களுக்கு முன்பே, திங்கட்கிழமையன்று இந்த நிகழ்வுக்காக இதுவரை பதிவுசெய்யப்பட்டதிலேயே மிக உயர்ந்த வெப்பநிலையைத் தாண்டியது.
இந்த வெப்பம் முந்தைய நிகழ்வுகளை விட மிகவும் அதிகமாக இருப்பதால், விஞ்ஞானிகள் இதை "மனதை உலுக்கும்" மற்றும் "காட்ஸிலா அளவிலான" வெப்பம் என்று வர்ணித்துள்ளனர். எல் நினோக்கள் இயற்கையான காலநிலை நிகழ்வுகளாகும், ஆனால் புவி வெப்பமயமாதலால் அவை மேலும் மோசமடையக்கூடும்.
"451,000 பேர் என்ற மதிப்பீடு, நம்மை நிலைகுலையச் செய்யும் அளவுக்கு மிகப் பெரிய எண்ணிக்கையாகும்.
ஆனால், அதில் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள், தாத்தா பாட்டிகள் மற்றும் அண்டை வீட்டார், வேலைக்குச் செல்பவர்கள், குடும்பங்களைப் பராமரிப்பவர்கள் மற்றும் தங்கள் வாழ்க்கையை வாழ்பவர்கள் அடங்குவர்," என்று காலநிலை தாக்க ஆய்வகத்தின் இணை நிறுவனரும், சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவரும், இந்த அறிக்கையின் இணை ஆசிரியருமான பேராசிரியர் மைக்கேல் கிரீன்ஸ்டோன் கூறினார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக