அதேவேளை, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மேலும் 9 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நீதிபதிகள் நவரத்ன மாரசிங்க, இராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களுக்கான தண்டனை விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கு விசாரணை விபரங்கள்:சதித்திட்டம் தீட்டியமை மற்றும் உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பேருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட இந்த நீண்ட விசாரணையின் போது, அரச தரப்பில் 2,309 சாட்சிகள் ஆஜராகி சாட்சியமளித்திருந்தனர்.வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் சந்தேகநபர்களில் ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக