ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

மஹர சிறை தீவைத்து அழிப்பு!!

மஹர சிறைச்சாலையில் நேற்று (01) ஏற்பட்ட பதற்ற நிலைக்கு மத்தியில் கைதிகள் குழுவொன்று அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டிருந்ததாக தகவல்கள் வௌியாகியுள்ளன. 

குறித்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த கைதிகள் குழு நேற்றிரவு முழுவதும் அங்கிருந்து தப்பிச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டதுடன், பாதுகாப்புப் படையினரால் அவ்வாறான திட்டங்கள் பல சந்தர்ப்பங்களில் முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இச்சம்பவங்களின் போது அவர்களால் சிறைச்சாலையின் பல சொத்துக்களுக்குப்சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதுடன், நிர்வாகக் கட்டிடங்கள் மற்றும் ஆவணங்களுக்கும் தீவைத்து அழிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது.

இன்று (02) முற்பகல் அளவில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் சிறைச்சாலையினுள் நிலவிய சூழ்நிலை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பாக உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சீ. கஜநாயக்க தெரிவித்துள்ளார். 

சிறைச்சாலையின் சமையலறை, புனர்வாழ்வுக் கட்டிடம் மற்றும் அலுவலகம், தலைமை சிறைக்கட்டுப்பாட்டாளர் அலுவலகம் மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலை என்பன சேதமாகியுள்ளதாக தெரிவித்தார்.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலையைக் கண்காணிப்பதற்காக பெல் 412 (Bell 412) ரக ஹெலிகொப்டர் மற்றும் ட்ரோன் என்பன ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks