வெள்ளி, 10 ஜூலை, 2026

நீர்கொழும்பு துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிக்கு மரண அச்சுறுத்தல்!!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரிக்கு, மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கலவரத்தில் ஈடுபட்ட கைதிகளே இந்த மரண அச்சுறுத்தலை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த அச்சுறுத்தலில் "உன்னை எங்காவது கண்டால் கொன்றுவிடுவோம். வெளியே சிக்கும் போது உன்னை விடமாட்டோம், கொன்றுவிடுவோம்" என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகாரிக்குஎதிராக விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலைத் தொடர்ந்து, அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த சிறைச்சாலைகள் திணைக்களம் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

குறித்த அதிகாரி, டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அன்று ஏற்பட்ட அவசர நிலைமையைக் கருத்திற்கொண்டு கடமைக்குச் சமூகமளித்திருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது. 

 இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரியைப் பாதுகாக்குமாறு, சக அதிகாரிகள் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks