திங்கள், 6 ஜூலை, 2026

தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்திருத்தம் மறுபரிசீலனை-ஜோசப் விஜய்

தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களைப் பாதிக்கும் வகையில், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம்-2013ல் ஒன்றிய அரசால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தை மறுபரிசீலனை செய்யக்கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (6.7.2026) கடிதம் எழுதியுள்ளார். 

அக்கடிதத்தில், ஒன்றிய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை, 2026 ஜூன் 24 அன்று வெளியிட்ட 2026-ஆம் ஆண்டு தேசிய உணவு பாதுகாப்பு (திருத்தச்) சட்ட வரைவின் காரணமாக, தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகவும், இச்சட்ட வரைவு, 2013-ஆம் ஆண்டு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 3-ன்கீழ், அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின் மூலமாகத் தகுதிவாய்ந்த குடும்பங்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும் உணவுப் பொருள் உரிமைகளை மாற்றுவதற்கு வகை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks