இத்தாக்குதல்களுக்குப் பதிலடியாக, குவைத் உள்ளிட்ட பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளை இலக்கு வைத்து தாக்கியதாக ஈரான் உரிமை கோரியுள்ளது.
"ஈரானிய ஆக்கிரமிப்பைத்" தொடர்ந்து, தங்கள் நாட்டு வான் பாதுகாப்புப் படையினர் "பகைமைமிக்க ஏவுகணை மற்றும் ட்ரோன் (Drone) தாக்குதல்களை எதிர்கொண்டு முறியடித்ததாக" குவைத் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஒரே இரவில் தங்கள் வான்பரப்புக்குள் ஏவப்பட்ட ஈரானின் 10 ஏவுகணைகளைத் தடுத்து அழித்ததாக ஜோர்தான் இராணுவமும் தெரிவித்துள்ளது.
இதனால் எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
"அமெரிக்கப் படைகள் இத்தாக்குதலில் போர் விமானங்கள், வான்வழி ட்ரோன்கள், போர்க்கப்பல்கள் மற்றும் பிற இராணுவக் கட்டமைப்புகளைப் பயன்படுத்தியதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக