இது தொடர்பாக, முன்னாள் நீதி அமைச்சரின் மகன் உட்பட மூன்று சந்தேக நபர்களை அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் அமைப்பாளர் சரித் அபேசிங்க, மற்றும் முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் அருண வருண ஹண்டிக ஆகியோர் இவ்வாறு காவலில் வைக்கப்பட்டனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இந்த சந்தேக நபர்களின் பிணை மனுக்களை நிராகரித்தபோது,நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளின்படி, இந்த மாபெரும் இலஞ்சம் சந்தேக நபர்களுக்கு இலங்கை நாணயத்தில் அல்லாமல், ஐக்கிய அரபு அமீரகத்தில் பயன்படுத்தப்படும் 'திராம்' நாணயத்தில் வழங்கப்பட்டுள்ளது.
துபாயில் வசிக்கும் நிர்மலா பண்டாரா என்ற 'ஹெர்பி' என்பவர் மூலமாக இந்தப் பரிவர்த்தனை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
மேலும், மூன்று சந்தேக நபர்களும் மார்ச் 23, 2023 அன்று துபாய்க்கு சென்றுள்ளனர். அங்கு, ஹெர்பியின் வீட்டில், 'ஹரக் கட்டா' என்ற பாதாள உலக உறுப்பினரின் மனைவியான மதுஷிகா மதுவந்தி மற்றும் தற்போது காவலில் உள்ள மிதிகம ருவன் ஆகியோரை அவர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.
அங்கு, சந்தேக நபர்கள் ஆரம்பத்தில் 50 கோடி திராமைகோரினர் என்றும் அது பின்னர் பேச்சுவார்த்தைகள் மூலம் 30 கோடியாகவும் , இறுதியாக 20 கோடியாகவும் குறைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக