இது தொடர்பில் பாதிக்கப்பட்ட யுவதி, யாழ்ப்பாண காவல்துறையினருக்கு தொலைபேசி ஊடாக தகவல் வழங்கியதை அடுத்து, விரைந்து செயற்பட்ட காவல்துறையினர் ஆரியகுளம் பகுதியில் வைத்து பேருந்தை மறித்து குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் 09ஆவது காலாட்படை பிரிவை சேர்ந்த கப்டன் தர அதிகாரி என தெரியவந்துள்ளது.இந்த நிலையில், சந்தேகநபரை யாழ்ப்பாண காவல்நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக