மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 65 பேருந்துகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்திற்கு 36 பேருந்துகள், சேலம் கோட்டத்திற்கு 39 பேருந்துகள், கோயம்புத்தூர் கோட்டத்திற்கு 25 பேருந்துகள், கும்பகோணம் கோட்டத்திற்கு 49 பேருந்துகள், மதுரை கோட்டத்திற்கு 42 பேருந்துகள் மற்றும் திருநெல்வேலி கோட்டத்திற்கு 44 பேருந்துகள் என ரூ.127.21 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட 300 புதிய பேருந்துகளின் சேவையை சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் விஜய் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும், பேருந்தில் ஏறி சென்று நடத்துநரிடம் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்துக்கொண்டு தலைமைச்செயலகத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை பயணம் மேற்கொண்டார்.
தற்போது தொடங்கி வைக்கப்பட்ட புதிய பேருந்துகள் கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேடு பேருந்து முனையங்களிலிருந்தும், மாநகர் போக்குவரத்து பேருந்துகள் தொடர்புடைய பேருந்து நிலையங்களிலிருந்தும் போக்குவரத்து சேவையை உடனடியாக தொடங்கி உள்ளன.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், தலைமை செயலாளர் சாய்குமார், போக்குவரத்துத்துறை செயலாளர் வள்ளலார், போக்குவரத்துத்துறை சிறப்புச்செயலாளர் லில்லி, சென்னை மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் மோகன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் மேலாண்மை இயக்குநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக