செவ்வாய், 19 மே, 2026

கடைசி நிமிடத்தில் தாக்குதலை ரத்து செய்த டிரம்ப்!!

திட்டமிடப்பட்டிருந்த தாக்குதலை தாம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்படிக்கையொன்றை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். 

இது குறித்து கருத்துத் தெரிவித்த ட்ரம்ப், "நாளை ஈரான் மீது நடத்தவிருந்த தாக்குதலை மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்க இராணுவத்திற்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்.

எனினும், ஏற்றுக்கொள்ளக்கூடிய உடன்படிக்கையொன்றை எட்ட முடியாவிட்டால், உடனடி அறிவித்தலின் மூலம் ஈரான் மீது முழுமையான, பாரியளவிலான அளவிலான தாக்குதலை நடத்துவதற்கு தயாராக இருக்குமாறு அவர்களுக்கு மேலும் உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks