கடந்த 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதன் காரணமாகவே இந்தச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியின் போது, கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையின் நுழைவாயிலுக்கு அருகில் சட்டவிரோதமாக ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 12 பேருக்கு எதிராகக் காவற்துறையினரால் வழக்குத் தொடரப்பட்டது. குறித்த வழக்கு மே 15, வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
வழக்கு விசாரணையைப் புறக்கணித்தமைக்காக நீதவான் பசன் அமரசேன கடுமையான கண்டனத்தைத் தெரிவித்ததுடன் பின்வரும் உத்தரவுகளை வழங்கினார்:
நீதிமன்றில் முன்னிலையாகாத ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் மற்றைய சந்தேகநபரைக் உடனடியாகக் கைது செய்யுமாறு காவற்துறைக்கு உத்தரவிட்டார்.
கைது செய்யப்படும் இருவரையும் அடுத்த வழக்குத் தவணையின் போது அல்லது அதற்கு முன்னதாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.
இலங்கையின் அரசியல் களத்தில் அதிரடியான போராட்டங்களுக்குப் பெயர் பெற்றவர் ஹிருணிகா பிரேமச்சந்திர. கடந்த ‘அரகலய’ போராட்டக் காலத்தில் ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக அவர் முன்னெடுத்த போராட்டங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
தற்போது அவர் நீதிமன்ற விசாரணைகளுக்குச் சமூகமளிக்கத் தவறியுள்ளமை சட்ட ரீதியான நெருக்கடிகளை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக இவ்வாறான பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்போது, சந்தேகநபர்கள் தானாகவே நீதிமன்றத்தில் சரணடைவது வழக்கமாகும்.
எனினும், காவற்துறையினர் இந்தக் கைது கட்டளையை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்பது அரசியல் வட்டாரங்களில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக