இலங்கையின் ருமஸ்ஸல பகுதியில் அமைந்துள்ள ஜங்கிள் பீச்சிற்கு சுற்றுலா சென்ற 20 வயதுடைய பிரான்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ராகம பகுதியைச் சேர்ந்தவர் எனவும், சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் நேரத்தில் அவர் குறித்த பகுதிக்கு சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் உனவட்டுன சுற்றுலா பொலிஸ் பிரிவினர் சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பிரான்ஸ் நாட்டுப் பெண்ணின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேகநபர் ஹபராதுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் வீட்டில் இருந்து நண்பர்களுடன் வெளியில் சென்ற நிலையில் குளமொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலம் இன்றைய தினம் திங்கட்கிழமை அளவெட்டி பகுதியில் உள்ள குளமொன்றில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அளவெட்டி பகுதியில் உள்ள குளமொன்றில் சடலம் ஒன்று மிதப்பதாக தெல்லிப்பழை காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர், அளவெட்டி பகுதியில் திருமணம் முடித்து வாழ்ந்து வந்துள்ளார்.
நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் சிலருடன் வீட்டில் இருந்து சென்றுள்ளார்.
இந்நிலையிலையே குளத்தில் சடலமாக காணப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அழகுராணி கிரீடம் இருக்கலாம்… ஆனால் மக்களின் பணத்திற்குக் கணக்கும் இருக்க வேண்டும்!
அழகுப் போட்டியில் வென்றால் கிரீடம் கிடைக்கும். ஜனாதிபதியின் மனைவியானால் மரியாதையும் செல்வாக்கும் கிடைக்கும். ஆனால் குழந்தைகள் மருத்துவமனையின் பெயரில் பணம் பெற்றால், மக்கள் கேட்பது ஒன்றுதான்:
“பணம் எங்கே?
வாங்குவதாகச் சொன்ன கருவி எங்கே?”.
அந்தக் கேள்விக்குக் குடும்பப் புகைப்படம் பதிலாகாது. வங்கிக் கணக்கும் ஆவணங்களும்தான் பதில்!
சிரந்தி விக்கிரமசிங்க, 1973ஆம் ஆண்டு மிஸ் ஸ்ரீலங்கா பட்டம் பெற்றவர். 1983இல் மகிந்த ராஜபக்சவைத் திருமணம் செய்துகொண்டார்.
நாமல், யோஷித்த, ரோஹித்த ஆகிய மூன்று மகன்களின் தாய். 2005 முதல் 2015 வரை இலங்கையின் முதல் பெண்மணியாக இருந்தவர். அழகுப் போட்டி மேடையிலிருந்து நாட்டின் அதிகார மையத்திற்கு வந்த வாழ்க்கை அவருடையது.
அத்தகைய செல்வாக்கு ஒருவருக்குப் பெருமை மட்டுமல்ல; பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பும் கூட.
எவ்வளவு பணம்? எதற்காக வழங்கப்பட்டது?
தற்போதைய நிதி வழக்கின் மையத்தில் இருப்பது இலங்கை ரூபாய் ஒரு கோடி — அதாவது 100 இலட்சம், ரூ.10,000,000.
தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து இந்தத் தொகை, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு CT ஸ்கேனர் வழங்கும் நோக்கத்திற்காகப் பெறப்பட்டதாகவும், சிரந்தி தலைமை வகித்த “சிரிலிய சவிய” அமைப்பின் கணக்கிற்குச் சென்றதாகவும் விசாரணைத் தரப்பு தெரிவிக்கிறது.
அந்தப் பணம் உரிய நோக்கத்திற்குப் பயன்படுத்தப்படவில்லை என்பதே குற்றச்சாட்டு.
இது எப்போது தொடங்கிய விவகாரம்?
2026 அக்டோபர் 13 அன்று நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விசாரணைத் தரப்பின் விளக்கத்தின்படி:
2010 டிசம்பர் 8:நிதி வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.
2010 டிசம்பர் 30: ஒரு கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2011 மே 4:”கார்ல்டன் சுவ உதான” கணக்கிற்குப் பதிலாக, “சிரிலிய சவிய” கணக்கில் பணத்தைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்த மாற்றத்திற்கான உரிய இயக்குநர் சபை அனுமதி இருக்கவில்லை என்றும், முதல் பெண்மணியின் வேண்டுகோள் என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் விசாரணைத் தரப்பு குற்றஞ்சாட்டியது.
**இவை நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்கள்; இறுதித் தீர்ப்பு அல்ல.**
சாதாரண மனிதன் வங்கியில் கடன் கேட்டால் பத்து ஆவணங்கள் கேட்கப்படும். அதிகாரத்தில் இருப்பவரின் பெயர் வந்தால் மட்டும் நடைமுறைகள் விடுமுறைக்குப் போகலாமா?
“முதல் பெண்மணி” என்பது மரியாதைக்குரிய அடையாளமாக இருக்கலாம்; வங்கி விதிகளைத் தாண்டுவதற்கான அனுமதிச்சீட்டாக இருக்கக்கூடாது!
இந்த நிதி முறைகேடு தொடர்பான விசாரணை, 2015இல் FCIDக்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டதாக Sunday Times தெரிவிக்கிறது. மேலும், கொழும்பு டொரிங்டன் பிளேஸில் வீடு வாங்கிய பரிவர்த்தனைக்கும் இந்த நிதிக்கும் தொடர்பு இருப்பதாக CIABOC நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதையும் நிரூபிக்கப்பட்ட உண்மையாகக் குறிப்பிட முடியாது.
சிரந்தியின் தரப்பு என்ன சொல்கிறது?
அவரது வழக்கறிஞர் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். பணம் இன்னும் சிரிலிய சவிய வங்கிக் கணக்கிலேயே இருப்பதாகவும், ஸ்கேனர் வாங்க 16 கோடி ரூபாய் தேவைப்பட்ட நிலையில், 2014 வரை 4 கோடியே 20 இலட்சம் ரூபாய் மட்டுமே திரட்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் செய்யப்பட்ட முறைப்பாட்டால் கணக்கு முடக்கப்பட்டதாகவும் அவரது தரப்பு கூறுகிறது.
எனவே, இந்த மூன்று தொகைகளையும் குழப்பக்கூடாது: ஒரு கோடி ரூபாய் என்பது வழக்கில் கேள்விக்குள்ளாகிய வங்கி நிதி; 4.2 கோடியும் 16 கோடியும் அவரது பாதுகாப்புத் தரப்பு தெரிவித்த திரட்டிய தொகையும் தேவையான செலவும். இவற்றையெல்லாம் சேர்த்து “இவ்வளவு திருடினார்” என்று எழுதுவது உண்மையல்ல.
மக்களுக்குத் தேவையானது குற்றச்சாட்டும் மறுப்பும் மட்டுமல்ல. வங்கிப் பதிவுகள், செலவுக் கணக்குகள், அனுமதி ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலான தெளிவான முடிவு.
கைது எப்போது? பிணை எப்போது?
2026 அக்டோபர் 7: இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவான CIABOC அவரைக் கைது செய்தது. முதலில் அக்டோபர் 13 வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டது.
அக்டோபர் 16:நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியது. நிபந்தனைகள்: ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணை, தலா ஒரு கோடி ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள், வெளிநாட்டுப் பயணத் தடை. இதய அறுவைச் சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவ அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.
இவை பிணை நிபந்தனைகள்; குற்றத்திற்கான அபராதம் அல்ல.
கைது செய்துவிட்டதால் குற்றவாளி ஆகிவிடுவதில்லை. பிணை கிடைத்துவிட்டதால் கணக்குக் கேள்வியும் காணாமல் போய்விடுவதில்லை!
சிரந்தியை விமர்சிக்க வேண்டியது அவர் பெண் என்பதற்காக அல்ல.
பொதுநலத்தின் பெயரில் நிதியைப் பொறுப்பேற்ற செல்வாக்குள்ள நபர் என்பதற்காக.
ஆனால் குழந்தைகளுக்கான உதவி என்ற பெயரில் செயல்படும் ஒரு தாயிடம், மற்ற தாய்மார்கள் கூடுதல் நம்பிக்கை வைப்பது இயல்பு.
மருத்துவமனை வாசலில் குழந்தையின் பரிசோதனை முடிவுக்காகக் காத்திருக்கும் தாய்க்கு, அரசியல் குடும்பத்தின் செல்வாக்கு முக்கியமல்ல. தனது குழந்தைக்குத் தேவையான சிகிச்சை கிடைக்குமா என்பதுதான் முக்கியம்.
குழந்தைகளுக்காக வழங்கப்பட்ட பணம் வேறு நோக்கத்திற்குத் திருப்பப்பட்டதாக நிரூபிக்கப்பட்டால், அது கணக்கில் நடந்த தவறு மட்டுமல்ல; பெற்றோர்கள் வைத்த நம்பிக்கைக்குச் செய்யப்பட்ட துரோகம்.
அத்தகைய செயல் எந்தப் பெண்ணுக்கும், எந்தத் தந்தைக்கும், எந்தப் பொதுவாழ்வுத் தலைவருக்கும் மோசமான முன்னுதாரணமே.
ஒரு நல்ல முன்னுதாரணம் என்பது மேடையில் குழந்தையைத் தூக்கிப் புகைப்படம் எடுப்பதோடு முடிவதில்லை.
அந்தக் குழந்தையின் பெயரில் பெறப்பட்ட ஒவ்வொரு ரூபாய்க்கும் பொறுப்பேற்பதில்தான் அதன் உண்மை தெரியும்.
வசீம் தாஜுதீன் — இன்னொரு குடும்பத்தின் மகன்
2012இல் ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் எரிந்த காருக்குள் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். முதலில் விபத்தாகக் கருதப்பட்ட மரணம் பின்னர் கொலை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
ராஜபக்ச குடும்பம் தங்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தது.
2017 ஆகஸ்ட் 15 அன்று ,இந்த வழக்கில் விசாரணைக்குள்ளான வாகனம் தொடர்பாக சிரந்தியிடம் CID விசாரித்தது. அந்த வாகனத்திற்கும் அவரது அறக்கட்டளைக்கும் தொடர்பு இருப்பதாகச் செய்திகள் தெரிவித்தன.
விசாரணைக்கு அழைக்கப்பட்டதை வைத்து அவர் கொலை செய்தார் என்று சொல்ல முடியாது.
ஆனால் ஒரு தாயின் மகனுக்கான உண்மை வெளிவர வேண்டும் என்ற கோரிக்கை எந்தக் குடும்பத்தின் செல்வாக்கையும் விடப் பெரியது.
தன் பிள்ளையின் எதிர்காலம் எவ்வளவு அருமையோ, மற்றொரு தாயின் பிள்ளையின் உயிரும் அவ்வளவு அருமை.
இந்தக் கொலை விசாரணையையும் தற்போதைய ஒரு கோடி ரூபாய் நிதி வழக்கையும் ஒன்றாக்கக்கூடாது.
ஒவ்வொன்றிலும் ஆதாரங்கள் ஆராயப்பட்டு, பொறுப்புடையவர்கள் யார் என்பது நிரூபிக்கப்பட வேண்டும்.
அனுர தலைமையிலான அரசுக்கும் இதுதான் மக்கள் வைக்கும் சோதனை: கைதுச் செய்தியோடு கடமையை முடித்துக்கொள்ளாமல், நியாயமான விசாரணையும் நீதிமன்றத்தில் நிலைக்கும் ஆதாரங்களும் உறுதிசெய்யப்பட வேண்டும்.
அழகுக்கு வழங்கப்பட்ட கிரீடம், நேர்மைக்கான சான்றிதழ் அல்ல.
தாய்மை மரியாதைக்குரியது; பொறுப்பிலிருந்து விலக்கு அல்ல.
அறப்பணி என்ற பெயர் மட்டும் போதாது; வெளிப்படையான கணக்கும் வேண்டும்.
மக்களின் பணம் குடும்பச் சீதனம் அல்ல!
குழந்தைகளின் நலனுக்கான நிதி, குடும்பச் செல்வாக்கிற்கான முதலீடும் அல்ல!
2026 அக்டோபர் 20 வரை கிடைத்த செய்திகளின் அடிப்படையில். சிரந்தி குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்; நிலுவையிலுள்ள குற்றச்சாட்டுகள் இங்கே நிரூபிக்கப்பட்ட குற்றங்களாகக் குறிப்பிடப்படவில்லை.
பிரித்தானியாவில் தற்பொழுது குடியேற்றவாசிகளுக்கு எதிரான வாதங்களும், நிறவெறிப் போராட்டங்களும் தீவிரமடைந்து வருகின்றன.
"வெள்ளையர்கள் அல்லாத அனைத்துக் குடியேற்றவாசிகளையும் வெளியேற்ற வேண்டும்" என்பதே இந்தப் போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
ஆனால், உணர்ச்சிவசப்பட்டு எழுப்பப்படும் இத்தகைய கோரிக்கைகளின் பின்விளைவுகள் என்ன என்பதைப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஒருவேளை அனைத்துக் குடியேற்றவாசிகளும் ஒரே இரவில் வெளியேற்றப்பட்டால், (Mass Deportation)பிரித்தானியா என்ன மாதிரியான பேரழிவைச் சந்திக்கும்?
முதலாவதாக , பிரித்தானியாவின் NHS என அழைக்கப்படும் National Health Service (தேசிய சுகாதார சேவை) முடங்கும் .
பிரித்தானியாவின் உயிர்நாடியாக விளங்குவது NHS எனப்படும் மருத்துவத்துறை.
இன்று பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனை மருத்துவர்களில் 36% பேர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள்.
30%மான தாதிகள் வெளிநாட்டவர்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் சுகாதாரத் துறையை நம்பி வந்து பணியாற்றுகின்றனர்.
குடியேற்றவாசிகள் அனைவரும் வெளியேறினால், மருத்துவமனைகள் இயங்குவதே கேள்விகுறியாகிவிடும்.
ஏற்கனவே waiting list என்ற காத்திருப்புப் பட்டியல் நீண்டுள்ளது,
குடியேற்றவாசிகள் அனைவரும் வெளியேறினால் waiting list மிக பலமடங்கு நீண்டு மருத்துவமனைகள் இயங்குவதே கேள்விக்குறி ஆகிவிடும், முதியோர் மற்றும் காப்பக பராமரிப்பு மையங்கள் ஆள் பற்றாக்குறையால் மூடப்படும்.
பிரித்தானியாவின் மிக முக்கியமான பொருளாதாரத் துறைகள் முழுவதும் குடியேற்றவாசிகளின் உழைப்பை நம்பியே இயங்குகின்றன,
உணவு மற்றும் விருந்தோம்பல் துறை (Hospitality)15%, கட்டுமானத் துறை (Construction)13%,போக்குவரத்துத் துறை (Transport): 12% தொழிலாளர் வர்க்கத்தின் ஐந்தில் ஒரு பங்கு (20%க்கும் அதிகமானோர்) ஒரே இரவில் காணாமல் போனால், தொழிற்சாலைகள் மூடப்படும், கட்டுமானப் பணிகள் பாதியில் நிற்கும்,
வர்த்தகம் பெருமளவு ஸ்தம்பித்துப் போகும்.
அத்துடன் பிரித்தானியா தனது உணவின் பெரும்பகுதியை இறக்குமதி செய்தாலும், உள்நாட்டு விவசாய உற்பத்திக்கும் உணவுப் பதனிடும் ஆலைகளுக்கும் வெளிநாட்டுப் பணியாளர்கள் இன்றியமையாதவர்கள்.
பருவகால விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் போனால், உணவு உற்பத்தி வீழ்ச்சியடைந்து, சந்தையில் பொருட்களின் விலை தாறுமாறாக உயரும்.
குடியேற்றவாசிகள் தங்களுக்குக் கிடைக்கும் நலத்திட்ட உதவிகளை விட, பல மடங்கு அதிகமான வரியை பிரித்தானிய அரசாங்கத்திற்குச் செலுத்துகின்றனர்.
வருமான வரி (Income Tax),தேசிய காப்பீடு (National Insurance),பொருள் மற்றும் சேவை வரி (VAT) மில்லியன் கணக்கான வரி செலுத்துவோர் வெளியேறினால், அரசாங்கத்திற்கு வரும் வருமானம் பெருமளவில் குறையும்.
இதனால் பிரிட்டன் அரசாங்கத்தின் கருவூலத்திற்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான கோடிக் கணக்கான பவுண்டுகள் நேரடி நஷ்டம் ஏற்படும்.
இதன் விளைவாக பள்ளிகள், காவற்துறை, பொதுப் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்படும்.
சர்வதேச மாணவர்கள் பிரித்தானியாவின் பொருளாதாரத்திற்கு பில்லியன் கணக்கான பவுண்டுகளைக் ( 40 billions pounds)கொண்டுவருகிறார்கள்.
பல்கலைக்கழகங்கள் கல்விக்கட்டணம் மூலம் பெறும் வருவாயையும், உலகளாவிய ஆராய்ச்சித் திறமையாளர்களையும் இழக்க நேரிடும்.
பிரிட்டன் பல்கலைக்கழகங்களை நிதி ரீதியாகத் தாங்கிப் பிடிப்பதே வெள்ளையர் அல்லாத சர்வதேச மாணவர்கள்தான் (International Students).
இவர்கள் உள்ளூர் மாணவர்களை விட 3 முதல் 4 மடங்கு அதிகக் கட்டணம் செலுத்துகிறார்கள்.
இவர்கள் வெளியேற்றப்பட்டால், பிரிட்டனின் பெரும்பாலான முன்னணி பல்கலைக்கழகங்கள் வருவாயின்றி உடனடியாகத் திவால் நிலையை (Bankruptcy) எட்டும்.
பிரித்தானியாவின் வீதிகளில் இன்று நாம் காணும் நூற்றுக்கணக்கான கடைகள்(Off-Licence), உணவகங்கள், தேநீரகங்கள், டாக்சி மற்றும் வாடகை கார் சேவைகள் (Taxi/Private Hire) எனப் பெரும்பாலான சிறு வணிகங்கள் தெற்காசியர்களாலும், ஆபிரிக்கர்களாலும் , அரபு நாடுகளைச் சேர்ந்தவர்களாலும் தான் மிகச் சிறப்பாகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றன.
காலை விடியும் முன்பே கடையைத் திறந்து, நள்ளிரவு வரை வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றுவது, வார இறுதி நாட்களோ அல்லது பொது விடுமுறை நாட்களோ பாராமல் இடைவிடாமல் உழைப்பது என இவர்கள் இந்தத் தொழில்களில் காட்டும் அர்ப்பணிப்பு மகத்தானது.
பிரித்தானியாவில் வெள்ளையர் அல்லாத சிறுபான்மையின மக்களால் நடத்தப்படும் வணிக நிறுவனங்கள் (Ethnic Minority Businesses) மட்டும் பிரிட்டன் பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் £24 பில்லியன் முதல் £74 பில்லியன் பவுண்டுகள் வரை மதிப்பு கூட்டப்பட்ட பங்களிப்பை (GVA/GDP) வழங்குகின்றன.
இந்த சிறுவணிகங்கள் பிரித்தானிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கின்றன என பொருளாதார வல்லுனர்களால் வர்ணிக்கப்பட்டுள்ளன.
இந்த நிறுவனங்கள் மூலமாக பிரிட்டனில் 30 லட்சத்திற்கும் (3 Million) அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
சிறுபான்மையின மக்களால் நடத்தப்படும் பல்லாயிரக்கணக்கான வணிக நிறுவனங்கள் (Ethnic Minority Businesses) மூடப்பட்டால் உள்ளூர் வெள்ளையின மக்களுக்கான லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளும் அழியும்.
தொழிலாளர்கள் பற்றாக்குறையால், எஞ்சியிருக்கும் பொருட்களின் உற்பத்திச் செலவு மற்றும் சேவைகளுக்கான கட்டணங்கள் பல மடங்கு உயரும்.
காய்கறிகள், உணவுப் பொருட்கள், பேருந்து/ரயில் கட்டணங்கள், மற்றும் ஹோட்டல் உணவுகளின் விலை மிகக் கடுமையாக உயர்ந்து, சாதாரண பிரிட்டன் குடிமக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவு தாங்க முடியாத அளவுக்கு அதிகரிக்கும்.
பிரித்தானிய உள்துறை அமைச்சகத்தின் (Home Office) அதிகாரப்பூர்வ மதிப்பீட்டின்படி, குடியேற்றவாசிகள் பிரிட்டனின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தை (Economic Trend Growth) 10% முதல் 15% வரை அதிகரிக்க உதவுகிறார்கள்.
Oxford Economics ஆய்வின்படி, ஐரோப்பியர் அல்லாத (பெரும்பாலும் வெள்ளையர் அல்லாத ஆசிய, ஆப்பிரிக்க) குடியேற்றவாசி ஒருவர் பிரிட்டனில் வாழும் காலத்தில் அரசுக்குச் செலுத்தும் நிகர வரி லாபம் சராசரியாக £28,000 பவுண்டுகள் ஆகும்.
இது சராசரி உள்ளூர் குடிமகனின் பங்களிப்பை விட அதிகமாகும்.
பணியிடங்களில் வெள்ளையர் அல்லாத சிறுபான்மையினருக்கு முறையான ஊதியம் மற்றும் தலைமைப் பொறுப்புகள் வழங்கப்பட்டால், அது பிரிட்டனின் GDP-யை மேலும் £37 பில்லியன் பவுண்டுகள் வரை உயர்த்தும் என 'Business in the Community' (BITC) அமைப்பின் ஆய்வுகள் காட்டுகின்றன .
பிரிட்டனில் வாழும் சிறுபான்மையின மக்களின் வாங்கும் திறன் (Disposable Income) வேகமாக அதிகரித்து வருகிறது. வரும் காலங்களில் இவர்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு ஆண்டுக்கு £575 பில்லியன் பவுண்டுகளாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் வாழும் வெள்ளையர் அல்லாத குடியேற்றவாசிகள் மற்றும் சிறுபான்மையின மக்கள் அனைவரையும் திருப்பி அனுப்பினால் (Mass Deportation/Repatriation), பிரித்தானிய பொருளாதாரம் மிகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து, உடனடியாக பெரும் பொருளாதார மந்தநிலைக்குள் (Deep Recession) தள்ளப்படும்.
குடியேற்றவாசிகளை வெளியேற்றுவது என்பது பிரிட்டனின் ஒட்டுமொத்த GDP-யில் சுமார் 10% முதல் 15% வரையிலான மதிப்பை உடனடியாக அழித்துவிடும்.
இது பிரிட்டனை உலக அரங்கில் ஒரு ஏழை நாடாக மாற்றக்கூடிய அளவிற்கான மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதல்ல சந்தேகமே இல்லை.
வளர்ச்சியடைந்த நாடுகளை நோக்கி மனிதர்கள் குடியேறி வருவது காலங்காலமாக நடந்து வரும் இயற்கையான ஒரு நிகழ்வாகும்.
இதற்கு வரலாற்றில் பல சான்றுகள் உண்டு.
எகிப்திய நாகரிகத்தின் உச்சக்கட்டக் காலத்தில், உலகத்தின் மற்றும் ஆப்பிரிக்காவின் எல்லா பகுதிகளில் இருந்தெல்லாம் மக்கள் எகிப்து நாட்டை நோக்கிப் படையெடுத்தனர்.
தங்களை வளப்படுத்திக் கொள்வதற்காகவும், சிறந்த வாழ்வாதாரத்தைத் தேடியுமே அவர்கள் அவ்வாறு சென்றனர்.
இன்று பொருளாதாரம் மேம்பட்ட நாடுகளில், வாழ்க்கைத்தரம் அதிகமாக உள்ள சூழலில், அங்குள்ள சொந்த நாட்டு மக்கள் 'Unskilled jobs எனப்படும் குறைந்த ஊதியக் கடின உழைப்பு வேலைகளில் ஈடுபட விரும்புவதில்லை. Skilled jobல் ஈடுபடுவதற்கான கல்வித் தகமைகளையும் அவர்கள் கொண்டிருப்பதில்லை.
அந்த வெற்றிடங்களை நிரப்பவும், நாட்டின் பொருளாதார இயந்திரம் தங்குதடையின்றி இயங்கவும் குடியேற்றவாசிகள் எப்போதுமே அவசியமாகத் தேவையாக இருக்கிறார்கள்.
ஏன் சொந்த நாட்டு வெள்ளையின மக்களால் குடியேற்றவாசிகள் செய்யும் வேலையைச் செய்ய முடியாது?"
இதற்கான உண்மையான காரணங்கள் என்ன?
இந்தக் கேள்வி பலரது மனதில் எழுவது இயல்பே.
வெளிநாட்டவர்கள் செய்யும் வேலைகளை ஏன் உள்ளூர் மக்களால் செய்ய முடியாது ?
காரணம் தொழிலாளர் பற்றாக்குறை (Labour Shortage)
பிரித்தானியாவின் மக்கள் தொகை வயதாகி வருகிறது (Aging Population). அதாவது, வேலைக்குச் செல்லும் இளைஞர்களை விட ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
எனவே, நாட்டின் அனைத்துத் துறைகளையும் நிரப்புவதற்குப் போதுமான உள்ளூர் மக்கள் தொகையே அங்கு இல்லை. குடியேற்றவாசிகள் இல்லை என்றால், அந்தப் பணியிடங்களை நிரப்ப ஆட்களே இருக்க மாட்டார்கள்.
விவசாயம், முதியோர் பராமரிப்பு, துப்புரவு மற்றும் உணவு விடுதி போன்ற துறைகளில் வழங்கப்படும் கூலி ஒப்பீட்டளவில் குறைவு. மேலும், இவை அதிக உடல் உழைப்பைக் கோருபவை. உள்ளூர் மக்கள் நீண்ட காலமாக உயர் கல்வி மற்றும் சிறந்த அலுவலகப் பணிகளை நாடுவதால், இத்தகைய குறைந்த ஊதியக் கடின உழைப்பு வேலைகளில் சேர அவர்கள் விரும்புவதில்லை.
பிரித்தானியாவில் உள்ள முதியோர்களைப் பராமரிக்கவும், படுக்கைகளில் இருக்கும் நோயாளிகளுக்குச் சேவை செய்யவும், இரவு பகலாக உழைக்கவும் ஒரு பெரிய உழைக்கும் வர்க்கம் தேவைப்படுகிறது.
உள்ளூர் மக்கள் மட்டுமே இந்தத் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியாது என்பதே காலத்தின் உண்மை.
பிரித்தானிய வெள்ளையர்கள் குடியேற்றவாசிகளைப் போல நீண்ட நேரம் வேலை செய்வதையோ அல்லது உடல் உழைப்பைக் கோரும் கடினமான வேலைகளில் ஈடுபடுவதையோ விரும்புவதில்லை.
குறிப்பாக, வார இறுதி நாட்களிலும் (Weekends) அதிகாலை நேரங்களிலும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் (Work-life balance) ஓய்வுக்கும் அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
ஆனால், குடியேற்றவாசிகள் தங்களது எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளவும், பிழைப்புக்காகவும் எத்தகைய கடின உழைப்பையும் வெளிப்படுத்தத் தயங்குவதில்லை.
வெள்ளையர்களை விடக் குடியேற்றவாசிகள் அதிக உழைப்பாளிகளாகவும் (Hardworking), பொறுப்புமிக்கவர்களாகவும் இருப்பதால், முதலாளிகள் (Employers) வெள்ளையர்களைக் காட்டிலும் குடியேற்றவாசிகளையே வேலைக்கு அமர்த்த அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
முன்பு நான் குறிப்பிட்டதைப்போல் நாட்டின் பொருளாதரத்தின் முதுகெலும்பான சிறு வணிகங்களை குடியேற்றவாசிகளால் மட்டுமே நடாத்தமுடியும், இங்குள்ள வெள்ளையின மக்களிடம் சிறு வணிகங்கள் நடத்தும் அளவிற்கான கடின உழைப்பும், நீண்ட நேரப் பொறுமையும் (Patience and Endless Hustle) பொதுவாகக் குறைவாகவே காணப்படுகிறது.
பிரித்தானியாவின் உள்ளூர் மக்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கும், குடும்பத்தினருடன் (Work-Life Balance) செலவிடும் நேரத்திற்கும் (Family time) வார இறுதி ஓய்வுகளுக்கும் அதிக முன்னுரிமை அளிக்கிறார்கள்.
ஆனால் குடியேற்றவாதிகளோ, தங்களது எதிர்காலத்தைக் கட்டமைக்க வேண்டும், அடுத்த தலைமுறைக்கு ஒரு சொத்து சேர்த்து வைக்க வேண்டும் என்ற உந்துதலில், இரவு பகலாகக் கஷ்டப்பட்டு உழைக்கத் தயாராக இருக்கிறார்கள்.
இலாப நோக்கம் மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறன் சிறுவணிகத்திற்கு இன்றியமையாத்து.சிறு வணிகங்கள் லாபகரமாக மாறுவதற்கு பல ஆண்டுகள் தொடர்ச்சியான உழைப்பு தேவை. இந்தச் சவால்களை எதிர்கொள்ள வெள்ளையின மக்களை விடக் குடியேற்றவாதிகளே அதிகம் முன்வருகிறார்கள்.
ஒரு கடையையோ அல்லது உணவகத்தையோ வெற்றிகரமாக நடத்துவதற்குப் பணம் மட்டும் போதாது;
அங்கு தொடர்ச்சியான உடல் உழைப்பும், வாடிக்கையாளர்களிடம் காட்டும் பொறுமையும் மிக அவசியம். அந்த வெற்றிடத்தைத்தான் தெற்காசியர்களும் அரபுகளும் தங்களது கடின உழைப்பால் வெற்றிகரமாக நிரப்பியுள்ளனர்.
ஆனால் வெள்ளையர்களுக்கு அவ்வளவு பொறுமை இல்லை.
வெள்ளையின மக்களால் செய்ய முடியாத அல்லது செய்ய விரும்பாத குறைந்த ஊதிய வேலைகளையும், நீண்ட நேரக் கடின உழைப்புத் தேவையுள்ள சிறு வணிகங்களையும் தெற்காசியர்களும் அரபுகளும் வெற்றிகரமாக நடத்தி நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக விளங்குகின்றனர்.
குடியேற்றவாதிகள் அனைவரையும் வெளியேற்றுவது பிரித்தானியாவை எந்த விதத்திலும் பாதுகாப்பானதாகவோ, வளமானதாகவோ மாற்றப் போவதில்லை அது பிரித்தானியாவுக்கு எந்தவொரு தீர்வையும் தராது. மாறாக, அது நவீன பிரித்தானியப் பொருளாதாரத்தைப் படுகுழியில் தள்ளிவிடும்.
பிரச்சனை குடியேற்றவாதிகள் அல்ல; மாறாக, மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளையும், பொதுச்சேவைகளையும் முறையாகத் திட்டமிடாத அரசாங்கத்தின் நிர்வாகக் குறைபாடே ஆகும்.
பிரித்தானியாவைத் தலைநிமிரச் செய்ததில் பல தலைமுறைகளாக உழைத்து வரும் குடியேற்றவாசிகளின் பங்கு அளப்பரியது.
இன்றைக்குக் குடியேற்றவாசிகளுக்கு எதிராகத் தெருக்களில் இறங்கி நச்சு விதைக்கும் இந்தக் கூட்டத்தின் பின்னணியை நாம் உற்று நோக்க வேண்டும். வெள்ளையின மக்களில் படிப்பறிவில்லாதவர்கள், சோம்பேறிகள், மது மற்றும் போதைவஸ்துகளுக்கு அடிமையானவர்கள், எந்தவித உழைப்புமின்றி அரசாங்கத்தின் நலத்திட்ட உதவிகளில் (Benefits) வாழ்ந்து பழகிய வர்க்கத்தினரே இவர்களில் பெரும்பான்மையினர் ஆவர்.
தங்கள் வாழ்வில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல், உழைக்கத் திராணியின்றி முடங்கிப் கிடக்கும் இவர்கள், தங்களது சொந்தக் திறமையால் படித்து முன்னேறி, கடைகளைத் தொடங்கி, பொருளாதாரத்தில் உயர்ந்த இடத்திற்கு வரும் குடியேற்றவாசிகளின் Success-ஐ கண்டு பொறுக்க முடியாமல் தங்களது கையாலாகத்தனத்தை நிறவெறியாகக் கக்குகிறார்கள்.
உழைப்பை பெறுமதியை மதிக்கத் தெரியாத இந்தச் சோம்பேறி வர்க்கத்தின் பொறாமைப் பேச்சுகள்தான் இன்று இனவெறிப் போராட்டங்களாக உருவெடுத்துள்ளன.
நிறவெறியைக் கைவிட்டு, திறம்பட நிர்வகிப்பதும், சட்டங்களைச் முறையாக நடைமுறைப்படுத்துவதுமே தற்போதைய தீர்வாகும்.
இன்றைக்கு நாட்டில் நிலவும் பொருளாதாரச் சீரழிவுக்கும், வீழ்ச்சிக்கும் குடியேற்றவாசிகள்தான் காரணம் என்று திசை திருப்புவது அரசியல்வாதிகளின் அரசியல் தந்திரமாகும்.
தமது சொந்த நிர்வாகத்தின் சீர்கேடுகளையும், பொருளாதாரத் தோல்விகளையும் மறைப்பதற்காகக் குடியேற்றவாசிகளின் தலையில் பழியைப் போட்டுத் தப்பிக்க நினைக்கிறார்கள்.
இந்த ஏமாற்று வேலையை இனம் காணவேண்டியது பிரித்தானியாவில் உள்ள வெள்ளையின மக்களின் இன்றியமையாத வரலாற்றுப் பொறுப்பாகும்.
அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மையைச் சுட்டிக் காட்டுவதற்குப் பதிலாக, அப்பாவி மக்கள் மீது நிறவெறியைத் திணிக்கும் சக்திகளை அடையாளம் கண்டு கேள்வி கேட்பதே உண்மையான தேசப்பற்றாகும்.
நிறவெறியைக் கைவிட்டு, திறம்பட நிர்வகிப்பதும், நாட்டின் உழைப்புச் சக்தியைப் புரிந்துகொண்டு சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்துவதுமே இன்றைய தேவையாகும்.
குடியேற்றவாசிகளின் உழைப்பை நம்பியிருக்கும் பிரித்தானியா, அவர்களை வெளியேற்றுவது தற்கொலைக்குச் சமம் என்பதை உணர வேண்டும்.
ரஷ்யாவுடனான போரில் ஒக்டோபர் மாதத்தில் 54,400 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாகவோ அல்லது படுகாயமடைந்ததாகவோ உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும் , போர் தொடங்கியதிலிருந்து இதுவே மிக அதிகமான மாதாந்திர எண்ணிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒக்டோபர் மாதத்தில் உக்ரேனியப் படைகள் 96.2 சதுர கிலோமீட்டர் (37.1 சதுர மைல்) நிலப்பரப்பை மீண்டும் கைப்பற்றியதாகவும், இது அதே காலகட்டத்தில் ரஷ்யப் படைகள் கைப்பற்றியதை விட 10.4 சதுர கிலோமீட்டர் அதிகம் என்றும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
ஈரான் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் புதிய ஆயுதங்களைப் பயன்படுத்தி பேரழிவுகரமான தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அந்நாட்டின் உச்ச தேசிய பாதுகாப்பு மன்றத்தின் செயலாளர் மொஹ்சென் ரெஸாயி எச்சரித்ததோடு, தனது ஏழு நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் தெஹ்ரான் ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக உள்ளது என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.
ராஜதந்திரப் பாதை தொடர்ந்து திறந்திருக்க வேண்டுமானால், தாங்கள் அறிவித்த ஏழு நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று ஈரான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக ரெசாயி கூறினார்.
"இருப்பினும், நாட்டிற்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் இன்று ஆயுதப் படைகளுக்கு வழங்கிய உத்தரவின்படி, புதிய ஆயுதங்களைப் பயன்படுத்தி ஆக்கிரமிப்பாளருக்குப் பேரழிவை ஏற்படுத்தும் அடிகளை வழங்குவோம்," என்று அவர் எச்சரித்தார்.
இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் அயதுல்லா சையத் மொஜ்தபா ஹொசைனி கமேனி, மூத்த இராணுவத் தளபதிகளுடனான ஒரு சந்திப்பில், உச்சபட்ச தடுப்பாற்றலை அடைவதற்கு அறிவார்ந்த போர் தயார்நிலை அவசியம் என்பதை வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அவரது கருத்துக்கள் வெளிவந்தன.
எந்தவொரு அச்சுறுத்தலுக்கும், அதன் தன்மை அல்லது அளவைப் பொருட்படுத்தாமல், உடனடியாகவும், திறம்படவும், புவியியல் கட்டுப்பாடுகள் இன்றியும் பதிலடி கொடுக்குமாறு தலைவர் ஆயுதப் படைகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், அமெரிக்க-சியோனிச எதிரியின் அனைத்து பௌதீக மற்றும் பௌதீகமற்ற சொத்துக்களையும் ஈரானின் ஆயுதப் படைகளின் வரம்பிற்குள் கொண்டுவருவதற்காக, இராணுவ இலக்குகள் தரவுத்தளத்தை முழுமையாகப் புதுப்பிக்கவும் அவர் உத்தரவிட்டார்.
ஈரானின் எதிரிகள் மீண்டும் இராணுவ அல்லது பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடங்கினால், அந்தத் தாக்குதல்கள் எப்போது, என்ன நிபந்தனைகளின் கீழ் முடிவுக்கு வரும் என்பதை ஈரானிய தேசமும் ஆயுதப் படைகளுமே தீர்மானிக்கும் என்று அயதுல்லா ஹொசைனி கமேனி மேலும் வலியுறுத்தினார்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்னதாக, டொனால்ட் டிரம்பின் அழுத்தத்தை மீறி, உக்ரைன் ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தனது தாக்குதல்களை மீண்டும் தொடங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆக்கிரமிக்கப்பட்ட நகரமான ஒலேஷ்கியில் போர் நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை இரவு முடிவுக்கு வர உள்ளது.
ரஷ்யாவின் அரசு எரிசக்தி நிறுவனமான ரோஸ்நெஃப்டுக்குச் சொந்தமான, சமாரா மாகாணத்தில் உள்ள மற்றொரு பெரிய சுத்திகரிப்பு நிலையம் மீது நடத்தப்பட்ட பெரும் தாக்குதலுக்குப் பிறகு, உக்ரைனின் நீண்ட தூர ஆளில்லா விமானங்கள் நிஸ்னி நோவ்கோரோட் மாகாணத்தில் உள்ள க்ஸ்டோவோ சுத்திகரிப்பு நிலையத்திற்கு இரவோடு இரவாகத் தீ வைத்ததாக ரஷ்ய அரசு ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.
ரஷ்ய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது குண்டு வீசுவதை நிறுத்துமாறு வெள்ளை மாளிகை கொடுத்த அழுத்தத்திற்கு உக்ரைன் பணிந்துவிட்டதாக 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்தி வெளியிட்டிருந்தது.
இருப்பினும், சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்குமாறு அமெரிக்க அதிபரின் மருமகனான ஜாரெட் குஷ்னர் விடுத்த கோரிக்கைக்கு தாங்கள் ஒருபோதும் உடன்படவில்லை என்று உக்ரைனிய அதிகாரிகள் 'கீவ் இன்டிபென்டன்ட்' செய்தித்தாளிடம் தெரிவித்தனர். ரஷ்யா மீதான தாக்குதல்கள் வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கியுள்ளதாக கிரெம்ளின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், கீவ் இப்போது அமெரிக்காவின் விருப்பங்களை "முற்றிலும் புறக்கணிக்கிறது" என்றும் அவர்கள் புகார் கூறினர்.
உலகளாவிய எரிபொருள் விலை உயர்வுக்கு உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியே காரணம் என்று டிரம்ப் குற்றம் சாட்டியதோடு, கடந்த மாதம் ரஷ்ய டீசல் மீதான அமெரிக்கத் தடைகளையும் நீக்கினார்.