"வெள்ளையர்கள் அல்லாத அனைத்துக் குடியேற்றவாசிகளையும் வெளியேற்ற வேண்டும்" என்பதே இந்தப் போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
ஆனால், உணர்ச்சிவசப்பட்டு எழுப்பப்படும் இத்தகைய கோரிக்கைகளின் பின்விளைவுகள் என்ன என்பதைப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஒருவேளை அனைத்துக் குடியேற்றவாசிகளும் ஒரே இரவில் வெளியேற்றப்பட்டால், (Mass Deportation)பிரித்தானியா என்ன மாதிரியான பேரழிவைச் சந்திக்கும்?
முதலாவதாக , பிரித்தானியாவின் NHS என அழைக்கப்படும் National Health Service (தேசிய சுகாதார சேவை) முடங்கும் .
பிரித்தானியாவின் உயிர்நாடியாக விளங்குவது NHS எனப்படும் மருத்துவத்துறை.
இன்று பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனை மருத்துவர்களில் 36% பேர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள்.
30%மான தாதிகள் வெளிநாட்டவர்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் சுகாதாரத் துறையை நம்பி வந்து பணியாற்றுகின்றனர்.
குடியேற்றவாசிகள் அனைவரும் வெளியேறினால், மருத்துவமனைகள் இயங்குவதே கேள்விகுறியாகிவிடும்.
ஏற்கனவே waiting list என்ற காத்திருப்புப் பட்டியல் நீண்டுள்ளது,
குடியேற்றவாசிகள் அனைவரும் வெளியேறினால் waiting list மிக பலமடங்கு நீண்டு மருத்துவமனைகள் இயங்குவதே கேள்விக்குறி ஆகிவிடும், முதியோர் மற்றும் காப்பக பராமரிப்பு மையங்கள் ஆள் பற்றாக்குறையால் மூடப்படும்.
பிரித்தானியாவின் மிக முக்கியமான பொருளாதாரத் துறைகள் முழுவதும் குடியேற்றவாசிகளின் உழைப்பை நம்பியே இயங்குகின்றன,
உணவு மற்றும் விருந்தோம்பல் துறை (Hospitality)15%, கட்டுமானத் துறை (Construction)13%,போக்குவரத்துத் துறை (Transport): 12% தொழிலாளர் வர்க்கத்தின் ஐந்தில் ஒரு பங்கு (20%க்கும் அதிகமானோர்) ஒரே இரவில் காணாமல் போனால், தொழிற்சாலைகள் மூடப்படும், கட்டுமானப் பணிகள் பாதியில் நிற்கும்,
வர்த்தகம் பெருமளவு ஸ்தம்பித்துப் போகும்.
அத்துடன் பிரித்தானியா தனது உணவின் பெரும்பகுதியை இறக்குமதி செய்தாலும், உள்நாட்டு விவசாய உற்பத்திக்கும் உணவுப் பதனிடும் ஆலைகளுக்கும் வெளிநாட்டுப் பணியாளர்கள் இன்றியமையாதவர்கள்.
பருவகால விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் போனால், உணவு உற்பத்தி வீழ்ச்சியடைந்து, சந்தையில் பொருட்களின் விலை தாறுமாறாக உயரும்.
குடியேற்றவாசிகள் தங்களுக்குக் கிடைக்கும் நலத்திட்ட உதவிகளை விட, பல மடங்கு அதிகமான வரியை பிரித்தானிய அரசாங்கத்திற்குச் செலுத்துகின்றனர்.
வருமான வரி (Income Tax),தேசிய காப்பீடு (National Insurance),பொருள் மற்றும் சேவை வரி (VAT) மில்லியன் கணக்கான வரி செலுத்துவோர் வெளியேறினால், அரசாங்கத்திற்கு வரும் வருமானம் பெருமளவில் குறையும்.
இதனால் பிரிட்டன் அரசாங்கத்தின் கருவூலத்திற்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான கோடிக் கணக்கான பவுண்டுகள் நேரடி நஷ்டம் ஏற்படும்.
இதன் விளைவாக பள்ளிகள், காவற்துறை, பொதுப் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்படும்.
சர்வதேச மாணவர்கள் பிரித்தானியாவின் பொருளாதாரத்திற்கு பில்லியன் கணக்கான பவுண்டுகளைக் ( 40 billions pounds)கொண்டுவருகிறார்கள்.
பல்கலைக்கழகங்கள் கல்விக்கட்டணம் மூலம் பெறும் வருவாயையும், உலகளாவிய ஆராய்ச்சித் திறமையாளர்களையும் இழக்க நேரிடும்.
பிரிட்டன் பல்கலைக்கழகங்களை நிதி ரீதியாகத் தாங்கிப் பிடிப்பதே வெள்ளையர் அல்லாத சர்வதேச மாணவர்கள்தான் (International Students).
இவர்கள் உள்ளூர் மாணவர்களை விட 3 முதல் 4 மடங்கு அதிகக் கட்டணம் செலுத்துகிறார்கள்.
இவர்கள் வெளியேற்றப்பட்டால், பிரிட்டனின் பெரும்பாலான முன்னணி பல்கலைக்கழகங்கள் வருவாயின்றி உடனடியாகத் திவால் நிலையை (Bankruptcy) எட்டும்.
பிரித்தானியாவின் வீதிகளில் இன்று நாம் காணும் நூற்றுக்கணக்கான கடைகள்(Off-Licence), உணவகங்கள், தேநீரகங்கள், டாக்சி மற்றும் வாடகை கார் சேவைகள் (Taxi/Private Hire) எனப் பெரும்பாலான சிறு வணிகங்கள் தெற்காசியர்களாலும், ஆபிரிக்கர்களாலும் , அரபு நாடுகளைச் சேர்ந்தவர்களாலும் தான் மிகச் சிறப்பாகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றன.
காலை விடியும் முன்பே கடையைத் திறந்து, நள்ளிரவு வரை வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றுவது, வார இறுதி நாட்களோ அல்லது பொது விடுமுறை நாட்களோ பாராமல் இடைவிடாமல் உழைப்பது என இவர்கள் இந்தத் தொழில்களில் காட்டும் அர்ப்பணிப்பு மகத்தானது.
பிரித்தானியாவில் வெள்ளையர் அல்லாத சிறுபான்மையின மக்களால் நடத்தப்படும் வணிக நிறுவனங்கள் (Ethnic Minority Businesses) மட்டும் பிரிட்டன் பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் £24 பில்லியன் முதல் £74 பில்லியன் பவுண்டுகள் வரை மதிப்பு கூட்டப்பட்ட பங்களிப்பை (GVA/GDP) வழங்குகின்றன.
இந்த சிறுவணிகங்கள் பிரித்தானிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கின்றன என பொருளாதார வல்லுனர்களால் வர்ணிக்கப்பட்டுள்ளன.
இந்த நிறுவனங்கள் மூலமாக பிரிட்டனில் 30 லட்சத்திற்கும் (3 Million) அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
சிறுபான்மையின மக்களால் நடத்தப்படும் பல்லாயிரக்கணக்கான வணிக நிறுவனங்கள் (Ethnic Minority Businesses) மூடப்பட்டால் உள்ளூர் வெள்ளையின மக்களுக்கான லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளும் அழியும்.
தொழிலாளர்கள் பற்றாக்குறையால், எஞ்சியிருக்கும் பொருட்களின் உற்பத்திச் செலவு மற்றும் சேவைகளுக்கான கட்டணங்கள் பல மடங்கு உயரும்.
காய்கறிகள், உணவுப் பொருட்கள், பேருந்து/ரயில் கட்டணங்கள், மற்றும் ஹோட்டல் உணவுகளின் விலை மிகக் கடுமையாக உயர்ந்து, சாதாரண பிரிட்டன் குடிமக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவு தாங்க முடியாத அளவுக்கு அதிகரிக்கும்.
பிரித்தானிய உள்துறை அமைச்சகத்தின் (Home Office) அதிகாரப்பூர்வ மதிப்பீட்டின்படி, குடியேற்றவாசிகள் பிரிட்டனின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தை (Economic Trend Growth) 10% முதல் 15% வரை அதிகரிக்க உதவுகிறார்கள்.
Oxford Economics ஆய்வின்படி, ஐரோப்பியர் அல்லாத (பெரும்பாலும் வெள்ளையர் அல்லாத ஆசிய, ஆப்பிரிக்க) குடியேற்றவாசி ஒருவர் பிரிட்டனில் வாழும் காலத்தில் அரசுக்குச் செலுத்தும் நிகர வரி லாபம் சராசரியாக £28,000 பவுண்டுகள் ஆகும்.
இது சராசரி உள்ளூர் குடிமகனின் பங்களிப்பை விட அதிகமாகும்.
பணியிடங்களில் வெள்ளையர் அல்லாத சிறுபான்மையினருக்கு முறையான ஊதியம் மற்றும் தலைமைப் பொறுப்புகள் வழங்கப்பட்டால், அது பிரிட்டனின் GDP-யை மேலும் £37 பில்லியன் பவுண்டுகள் வரை உயர்த்தும் என 'Business in the Community' (BITC) அமைப்பின் ஆய்வுகள் காட்டுகின்றன .
பிரிட்டனில் வாழும் சிறுபான்மையின மக்களின் வாங்கும் திறன் (Disposable Income) வேகமாக அதிகரித்து வருகிறது. வரும் காலங்களில் இவர்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு ஆண்டுக்கு £575 பில்லியன் பவுண்டுகளாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் வாழும் வெள்ளையர் அல்லாத குடியேற்றவாசிகள் மற்றும் சிறுபான்மையின மக்கள் அனைவரையும் திருப்பி அனுப்பினால் (Mass Deportation/Repatriation), பிரித்தானிய பொருளாதாரம் மிகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து, உடனடியாக பெரும் பொருளாதார மந்தநிலைக்குள் (Deep Recession) தள்ளப்படும்.
குடியேற்றவாசிகளை வெளியேற்றுவது என்பது பிரிட்டனின் ஒட்டுமொத்த GDP-யில் சுமார் 10% முதல் 15% வரையிலான மதிப்பை உடனடியாக அழித்துவிடும்.
இது பிரிட்டனை உலக அரங்கில் ஒரு ஏழை நாடாக மாற்றக்கூடிய அளவிற்கான மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதல்ல சந்தேகமே இல்லை.
வளர்ச்சியடைந்த நாடுகளை நோக்கி மனிதர்கள் குடியேறி வருவது காலங்காலமாக நடந்து வரும் இயற்கையான ஒரு நிகழ்வாகும்.
இதற்கு வரலாற்றில் பல சான்றுகள் உண்டு.
எகிப்திய நாகரிகத்தின் உச்சக்கட்டக் காலத்தில், உலகத்தின் மற்றும் ஆப்பிரிக்காவின் எல்லா பகுதிகளில் இருந்தெல்லாம் மக்கள் எகிப்து நாட்டை நோக்கிப் படையெடுத்தனர்.
தங்களை வளப்படுத்திக் கொள்வதற்காகவும், சிறந்த வாழ்வாதாரத்தைத் தேடியுமே அவர்கள் அவ்வாறு சென்றனர்.
இன்று பொருளாதாரம் மேம்பட்ட நாடுகளில், வாழ்க்கைத்தரம் அதிகமாக உள்ள சூழலில், அங்குள்ள சொந்த நாட்டு மக்கள் 'Unskilled jobs எனப்படும் குறைந்த ஊதியக் கடின உழைப்பு வேலைகளில் ஈடுபட விரும்புவதில்லை. Skilled jobல் ஈடுபடுவதற்கான கல்வித் தகமைகளையும் அவர்கள் கொண்டிருப்பதில்லை.
அந்த வெற்றிடங்களை நிரப்பவும், நாட்டின் பொருளாதார இயந்திரம் தங்குதடையின்றி இயங்கவும் குடியேற்றவாசிகள் எப்போதுமே அவசியமாகத் தேவையாக இருக்கிறார்கள்.
ஏன் சொந்த நாட்டு வெள்ளையின மக்களால் குடியேற்றவாசிகள் செய்யும் வேலையைச் செய்ய முடியாது?"
இதற்கான உண்மையான காரணங்கள் என்ன?
இந்தக் கேள்வி பலரது மனதில் எழுவது இயல்பே.
வெளிநாட்டவர்கள் செய்யும் வேலைகளை ஏன் உள்ளூர் மக்களால் செய்ய முடியாது ?
காரணம் தொழிலாளர் பற்றாக்குறை (Labour Shortage)
பிரித்தானியாவின் மக்கள் தொகை வயதாகி வருகிறது (Aging Population). அதாவது, வேலைக்குச் செல்லும் இளைஞர்களை விட ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
எனவே, நாட்டின் அனைத்துத் துறைகளையும் நிரப்புவதற்குப் போதுமான உள்ளூர் மக்கள் தொகையே அங்கு இல்லை. குடியேற்றவாசிகள் இல்லை என்றால், அந்தப் பணியிடங்களை நிரப்ப ஆட்களே இருக்க மாட்டார்கள்.
விவசாயம், முதியோர் பராமரிப்பு, துப்புரவு மற்றும் உணவு விடுதி போன்ற துறைகளில் வழங்கப்படும் கூலி ஒப்பீட்டளவில் குறைவு. மேலும், இவை அதிக உடல் உழைப்பைக் கோருபவை. உள்ளூர் மக்கள் நீண்ட காலமாக உயர் கல்வி மற்றும் சிறந்த அலுவலகப் பணிகளை நாடுவதால், இத்தகைய குறைந்த ஊதியக் கடின உழைப்பு வேலைகளில் சேர அவர்கள் விரும்புவதில்லை.
பிரித்தானியாவில் உள்ள முதியோர்களைப் பராமரிக்கவும், படுக்கைகளில் இருக்கும் நோயாளிகளுக்குச் சேவை செய்யவும், இரவு பகலாக உழைக்கவும் ஒரு பெரிய உழைக்கும் வர்க்கம் தேவைப்படுகிறது.
உள்ளூர் மக்கள் மட்டுமே இந்தத் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியாது என்பதே காலத்தின் உண்மை.
பிரித்தானிய வெள்ளையர்கள் குடியேற்றவாசிகளைப் போல நீண்ட நேரம் வேலை செய்வதையோ அல்லது உடல் உழைப்பைக் கோரும் கடினமான வேலைகளில் ஈடுபடுவதையோ விரும்புவதில்லை.
குறிப்பாக, வார இறுதி நாட்களிலும் (Weekends) அதிகாலை நேரங்களிலும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் (Work-life balance) ஓய்வுக்கும் அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
ஆனால், குடியேற்றவாசிகள் தங்களது எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளவும், பிழைப்புக்காகவும் எத்தகைய கடின உழைப்பையும் வெளிப்படுத்தத் தயங்குவதில்லை.
வெள்ளையர்களை விடக் குடியேற்றவாசிகள் அதிக உழைப்பாளிகளாகவும் (Hardworking), பொறுப்புமிக்கவர்களாகவும் இருப்பதால், முதலாளிகள் (Employers) வெள்ளையர்களைக் காட்டிலும் குடியேற்றவாசிகளையே வேலைக்கு அமர்த்த அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
முன்பு நான் குறிப்பிட்டதைப்போல் நாட்டின் பொருளாதரத்தின் முதுகெலும்பான சிறு வணிகங்களை குடியேற்றவாசிகளால் மட்டுமே நடாத்தமுடியும், இங்குள்ள வெள்ளையின மக்களிடம் சிறு வணிகங்கள் நடத்தும் அளவிற்கான கடின உழைப்பும், நீண்ட நேரப் பொறுமையும் (Patience and Endless Hustle) பொதுவாகக் குறைவாகவே காணப்படுகிறது.
பிரித்தானியாவின் உள்ளூர் மக்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கும், குடும்பத்தினருடன் (Work-Life Balance) செலவிடும் நேரத்திற்கும் (Family time) வார இறுதி ஓய்வுகளுக்கும் அதிக முன்னுரிமை அளிக்கிறார்கள்.
ஆனால் குடியேற்றவாதிகளோ, தங்களது எதிர்காலத்தைக் கட்டமைக்க வேண்டும், அடுத்த தலைமுறைக்கு ஒரு சொத்து சேர்த்து வைக்க வேண்டும் என்ற உந்துதலில், இரவு பகலாகக் கஷ்டப்பட்டு உழைக்கத் தயாராக இருக்கிறார்கள்.
இலாப நோக்கம் மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறன் சிறுவணிகத்திற்கு இன்றியமையாத்து.சிறு வணிகங்கள் லாபகரமாக மாறுவதற்கு பல ஆண்டுகள் தொடர்ச்சியான உழைப்பு தேவை. இந்தச் சவால்களை எதிர்கொள்ள வெள்ளையின மக்களை விடக் குடியேற்றவாதிகளே அதிகம் முன்வருகிறார்கள்.
ஒரு கடையையோ அல்லது உணவகத்தையோ வெற்றிகரமாக நடத்துவதற்குப் பணம் மட்டும் போதாது;
அங்கு தொடர்ச்சியான உடல் உழைப்பும், வாடிக்கையாளர்களிடம் காட்டும் பொறுமையும் மிக அவசியம். அந்த வெற்றிடத்தைத்தான் தெற்காசியர்களும் அரபுகளும் தங்களது கடின உழைப்பால் வெற்றிகரமாக நிரப்பியுள்ளனர்.
ஆனால் வெள்ளையர்களுக்கு அவ்வளவு பொறுமை இல்லை.
வெள்ளையின மக்களால் செய்ய முடியாத அல்லது செய்ய விரும்பாத குறைந்த ஊதிய வேலைகளையும், நீண்ட நேரக் கடின உழைப்புத் தேவையுள்ள சிறு வணிகங்களையும் தெற்காசியர்களும் அரபுகளும் வெற்றிகரமாக நடத்தி நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக விளங்குகின்றனர்.
குடியேற்றவாதிகள் அனைவரையும் வெளியேற்றுவது பிரித்தானியாவை எந்த விதத்திலும் பாதுகாப்பானதாகவோ, வளமானதாகவோ மாற்றப் போவதில்லை அது பிரித்தானியாவுக்கு எந்தவொரு தீர்வையும் தராது. மாறாக, அது நவீன பிரித்தானியப் பொருளாதாரத்தைப் படுகுழியில் தள்ளிவிடும்.
பிரச்சனை குடியேற்றவாதிகள் அல்ல; மாறாக, மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளையும், பொதுச்சேவைகளையும் முறையாகத் திட்டமிடாத அரசாங்கத்தின் நிர்வாகக் குறைபாடே ஆகும்.
பிரித்தானியாவைத் தலைநிமிரச் செய்ததில் பல தலைமுறைகளாக உழைத்து வரும் குடியேற்றவாசிகளின் பங்கு அளப்பரியது.
இன்றைக்குக் குடியேற்றவாசிகளுக்கு எதிராகத் தெருக்களில் இறங்கி நச்சு விதைக்கும் இந்தக் கூட்டத்தின் பின்னணியை நாம் உற்று நோக்க வேண்டும். வெள்ளையின மக்களில் படிப்பறிவில்லாதவர்கள், சோம்பேறிகள், மது மற்றும் போதைவஸ்துகளுக்கு அடிமையானவர்கள், எந்தவித உழைப்புமின்றி அரசாங்கத்தின் நலத்திட்ட உதவிகளில் (Benefits) வாழ்ந்து பழகிய வர்க்கத்தினரே இவர்களில் பெரும்பான்மையினர் ஆவர்.
தங்கள் வாழ்வில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல், உழைக்கத் திராணியின்றி முடங்கிப் கிடக்கும் இவர்கள், தங்களது சொந்தக் திறமையால் படித்து முன்னேறி, கடைகளைத் தொடங்கி, பொருளாதாரத்தில் உயர்ந்த இடத்திற்கு வரும் குடியேற்றவாசிகளின் Success-ஐ கண்டு பொறுக்க முடியாமல் தங்களது கையாலாகத்தனத்தை நிறவெறியாகக் கக்குகிறார்கள்.
உழைப்பை பெறுமதியை மதிக்கத் தெரியாத இந்தச் சோம்பேறி வர்க்கத்தின் பொறாமைப் பேச்சுகள்தான் இன்று இனவெறிப் போராட்டங்களாக உருவெடுத்துள்ளன.
நிறவெறியைக் கைவிட்டு, திறம்பட நிர்வகிப்பதும், சட்டங்களைச் முறையாக நடைமுறைப்படுத்துவதுமே தற்போதைய தீர்வாகும்.
இன்றைக்கு நாட்டில் நிலவும் பொருளாதாரச் சீரழிவுக்கும், வீழ்ச்சிக்கும் குடியேற்றவாசிகள்தான் காரணம் என்று திசை திருப்புவது அரசியல்வாதிகளின் அரசியல் தந்திரமாகும்.
தமது சொந்த நிர்வாகத்தின் சீர்கேடுகளையும், பொருளாதாரத் தோல்விகளையும் மறைப்பதற்காகக் குடியேற்றவாசிகளின் தலையில் பழியைப் போட்டுத் தப்பிக்க நினைக்கிறார்கள்.
இந்த ஏமாற்று வேலையை இனம் காணவேண்டியது பிரித்தானியாவில் உள்ள வெள்ளையின மக்களின் இன்றியமையாத வரலாற்றுப் பொறுப்பாகும்.
அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மையைச் சுட்டிக் காட்டுவதற்குப் பதிலாக, அப்பாவி மக்கள் மீது நிறவெறியைத் திணிக்கும் சக்திகளை அடையாளம் கண்டு கேள்வி கேட்பதே உண்மையான தேசப்பற்றாகும்.
நிறவெறியைக் கைவிட்டு, திறம்பட நிர்வகிப்பதும், நாட்டின் உழைப்புச் சக்தியைப் புரிந்துகொண்டு சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்துவதுமே இன்றைய தேவையாகும்.
குடியேற்றவாசிகளின் உழைப்பை நம்பியிருக்கும் பிரித்தானியா, அவர்களை வெளியேற்றுவது தற்கொலைக்குச் சமம் என்பதை உணர வேண்டும்.
இது ஒரு முகப்புத்தகத்தின் பிரதியாக்கம்.
முகிந்தன் துரைராஜசிங்கம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக