சீரற்ற வானிலை காரணமாக, அனர்த்த நிவாரணப் பணிகளுக்காகக் கடற்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கடற்படை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 171 கடற்படை அனர்த்த நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அத்துடன் இன்று (21) 14 அனர்த்த நிவாரணக் குழுக்கள் தெற்கு மற்றும் மேற்கு கடற்படைக் கட்டளைகளினால் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, தெற்கு கடற்படைக் கட்டளையினால் தவலம பகுதியில் இரண்டு குழுக்கள், ஹினிதும பகுதியில் ஒரு குழு, மாபலமக பகுதியில் ஒரு குழு மற்றும் நாகொட பகுதியில் ஒரு குழு என ஐந்து அனர்த்த நிவாரணக் குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் மேற்கு கடற்படைக் கட்டளையினால் நாவலப்பிட்டி பகுதியில் இரண்டு குழுக்கள், யட்டியாந்தோட்டை பகுதியில் இரண்டு குழுக்கள், சீதாவக்க பகுதியில் இரண்டு குழுக்கள் மற்றும் இரத்தினபுரி பகுதியில் மூன்று குழுக்கள் என ஒன்பது அனர்த்த நிவாரணக் குழுக்கள் தேவை ஏற்படின் ஈடுபடுத்துவதற்காக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 38 பாடசாலைகளுக்கு இன்று (21) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள
அவ்வமைச்சு, நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பான அதிகாரத்தைக் கல்வி அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, இன்று காலை 9.00 மணி நிலவரப்படி மத்திய மாகாணத்தின் 35 பாடசாலைகளும், சப்ரகமுவ, தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் தலா ஒரு பாடசாலை வீதமும் என மொத்தமாக 38 பாடசாலைகள் இன்று இயங்காது எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தேர்தலைக் குழப்ப உக்ரைன் முயன்றதாக அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், மொத்தம் 1,600 ஆளில்லா விமானங்கள் இடைமறிக்கப்பட்டதாகவும், இதில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் சேதமடைந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலின் இறுதி நாளான ஞாயிறன்று, மாஸ்கோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான ட்ரோன் தாக்குதல்களில் குறைந்தது இருவர் உயிரிழந்தனர்; மேலும் ஒரு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் சேதமடைந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மொத்தம் 1,600-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் இடைமறித்துச் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அவற்றில் 450 ட்ரோன்கள் மாஸ்கோவை குறிவைத்திருந்ததாகவும் தலைநகரின் மேயர் கூறினார்.
அதிபர் விளாடிமிர் புடினின் 26 ஆண்டுகால அதிகாரப் பிடிப்பை மேலும் வலுப்படுத்தக்கூடியதும், மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டதுமான இந்த மூன்று நாள் தேர்தலில் தலையிட உக்ரைன் முயன்றதாக செர்ஜி சோப்யானின் குற்றம் சாட்டினார்.
"தேர்தலைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் இந்த முன்னெப்போதும் இல்லாத தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எதிரிகள் அதில் வெற்றிபெறவில்லை," என்று அவர் டெலிகிராம் தளத்தில் தெரிவித்தார்.
மாஸ்கோ பிராந்திய ஆளுநர் கூறுகையில், இரண்டு வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 44 வயதுடைய பெண்மணி மற்றும் முதியவர் ஒருவர் என குறைந்தது இருவர் உயிரிழந்ததாகத் தெரிவித்தார்.
21 மாடி கட்டிடம் ஒன்றின் மீது ட்ரோன் மோதியதால் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 400 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர் என்றும் மாஸ்கோ பிராந்திய ஆளுநர் ஆண்ட்ரி வொரோபியோவ் கூறினார்; எனினும், அந்த ட்ரோன்கள் எங்கிருந்து வந்தவை என்பது குறித்த விவரங்களை அவர் குறிப்பிடவில்லை.
ஐந்தாவது ஆண்டாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் போருக்கான நிதியைத் திரட்டும் கிரெம்ளினின் முக்கிய வருவாய் ஆதாரமான எரிசக்தி உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து, ரஷ்யாவுக்கு எதிராகக் கடந்த சில மாதங்களாகக் கீவ் (Kyiv) தனது நீண்ட தூர ட்ரோன் தாக்குதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ள சூழலில் இத்தாக்குதல்கள் நடந்துள்ளன.
கிளிநொச்சி, பரந்தன் வீதித் தடையில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் வழங்க முயன்ற ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனங்களின் உரிமங்களை காவல்துறையினர் பரிசோதித்தபோது, குறித்த வாகனங்களுக்கான மணல் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தில் காவல்நிலைய உத்தியோகத்தர்கள் கையொப்பமிடுவதைத் தடுக்கும் நோக்கில் இலஞ்சம் வழங்க முயற்சித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28, 29, 40 மற்றும் 49 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் வவுனியா, இராமநாதபுரம், தர்மபுரம், ஆனந்தபுரம் மற்றும் புலோலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு ஆசியாவில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவந்து அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க ஈரான் 7 நிபந்தனைகளை விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் தன் செய்தியை கத்தார் நாட்டின் மூலமாக அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது.ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெஜாய் இந்த விவரத்தை வெளியிட்டுள்ளார். டெஹ்ரானின் நிலைப்பாடு மிகத் தெளிவாகவும், குழப்பமில்லாமலும் உள்ளது என்று கூறியுள்ள அவர், தூதரக அளவிலான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா முன்வர வேண்டுமானால், ஈரானின் உரிமைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ரெஜாய், அமெரிக்கா தான் உருவாக்கிய மோதலிலிருந்து வெளியேறவும், மேலும் சிக்கலில் மாட்டிக்கொள்வதைத் தவிர்க்கவும் ஈரானின் உரிமைகளையும் நிபந்தனைகளையும் ஒப்புக்கொள்வது அவசியமாகும் என்று கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மிரட்டல்களால் எந்தப் பயனும் இல்லை என்றும், ஈரான் தீர்க்கமான போருக்கும் தயார் நிலையில் உள்ளது என்றும் எச்சரித்துள்ளார். ஈரான் விதித்துள்ள 7 நிபந்தனைகளின் முழுமையான அதிகாரப்பூர்வ பட்டியலை ரெஜாய் வெளிப்படுத்தவில்லை என்றாலும், 3 முக்கிய கோரிக்கைகளைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்:
நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (20) அதிகாலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாக, அப்பகுதிகளில் உள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, நாவலப்பிட்டியின் கித்துல்கோட்டே, லபுவெல்கொட்டுவ மற்றும் ஜயசுந்தரஓவிட்ட ஆகிய பகுதிகளில் உள்ள பல தாழ்நிலப் பகுதிகளும் வீடுகளும் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாகப் பதிவாகியுள்ளது.
போலி ஆவணங்களைத் தயாரிப்பதற்காக மற்றவர்களுக்குச் சொந்தமான 48 கடவுச்சீட்டுகளைத் தன்வசம் வைத்திருந்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன்னாள் அலுவலக உதவியாளர் ஒருவர் நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து கடவுச்சீட்டுகள், பணத் தாள்களின் பாதுகாப்பு அடையாளங்களைப் பரிசோதிக்கும் போலி இயந்திரம் ஒன்று மற்றும் ஸ்மார்ட் ரக கைத்தொலைபேசி ஒன்று என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடுவலை, இஹள போமிரிய பகுதியில் உள்ள வீடொன்றில் நபரொருவர் தூதரகங்கள் ஊடாக விசாக்களைப் பெற்றுக்கொள்வதற்காகப் போலி ஆவணங்களைத் தயாரிப்பதாக நவகமுவ பொலிஸ் நிலையத்தின் பிரிவுப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு (101998) தகவல் கிடைத்துள்ளது.
அத்தகவலுக்கு அமைய, நவகமுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சுசந்த ஜெயநாத்தின் வழிகாட்டலில், ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஆர்.கே.பி.வி. ஸ்ரீமால் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட சோதனையின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, தான் சுமார் 5 வருடங்கள் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றியதாகத் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர், பத்தரமுல்லை பகுதியில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றில் பணியாற்றியபோதே இந்தக் கடவுச்சீட்டுகளை எடுத்து வந்ததாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா விசா மூலம் பல்வேறு நாடுகளுக்குச் செல்ல முற்படும் நபர்கள், இதற்கு முன்னர் வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளனர் என்பதைக் காட்டும் வகையில், பழைய கடவுச்சீட்டுகளில் உள்ள விசா பகுதிகளை நீராவியைப் பயன்படுத்திச் சூட்சுமமாகப் பிரித்தெடுத்து,
புதிய கடவுச்சீட்டுகளில் போலியாக ஒட்டியுள்ளார்
இதற்காக ஒரு நபரிடமிருந்து 20,000 ரூபாய் வீதம் கட்டணமாகப் பெற்றுள்ளதாகவும் சந்தேகநபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்
சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடவுச்சீட்டுகளில் சுமார் 15 கடவுச்சீட்டுகளில் இருந்து சந்தேகநபர் இவ்வாறு விசா பகுதிகளை அகற்றியுள்ளமை ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 70 வயதுடையவர் என்பதுடன், அவர் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.