ஈராக்கில் ஊர்வலங்கள் திட்டமிடப்பட்ட நேரத்தை விட நீடித்ததால், அயதுல்லா அலி கமேனியின் இறுதி ஊர்வலம் தாமதமானது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில் இது நிகழ்ந்துள்ளது
வியாழன், 9 ஜூலை, 2026
இரண்டாவது இரவாக அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்!!
டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில், தொடர்ந்து இரண்டாவது இரவாக அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது; இதற்குப் பதிலடியாக வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்கத் தளங்களை ஈரான் குறிவைத்துள்ளது.பலவீனமான அமெரிக்க-ஈரான் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது. ஹோர்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்களைத் தாக்கியதன் மூலம் தெஹ்ரான் ஒப்பந்தத்தை மீறியதாக வாஷிங்டன் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானிய இலக்குகள் மீது புதிய இராணுவத் தாக்குதல்களை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்த ஈரான், குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறியது. அதே நேரத்தில், நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், "அமெரிக்கா இதற்கான விலையைக் கொடுக்கும்" என்று எச்சரித்தார்.
யாழ். பல்கலைக்கழக முன்றலில் அதிரடிப் போராட்டம்!!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவர் உள்ளிட்ட இருவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகளைக் காலந்தாழ்த்தாது, உடனடியாகத் துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று (வியாழக்கிழமை) காலை பாரிய கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
“பாலியல் வன்முறைகளுக்கு எதிரான மக்கள் இயக்கம்” எனும் அமைப்பின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில், பல்கலைக்கழக மட்டத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவின் செயற்பாடுகள் எவ்வித இழுத்தடிப்புகளுமின்றி நேர்மையான முறையில் மிக விரைவாக நிறைவு செய்யப்பட வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் அழுத்தமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
“கண்ணியத்தை இழந்து கல்வியைப் பெறும் இடமா யாழ். பல்கலைக்கழகம்?”, “பாதிக்கப்பட்டவர்களின் குரல்களைக் கேளுங்கள் – அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்”, மற்றும் “தமிழர் பண்பாட்டிற்கு உணர்ச்சி கொள்ளும் பல்கலைக்கழகமே, பாலியல் சுரண்டல்களுக்கு மௌனம் ஏன்?” போன்ற பல்வேறு வலிமையான வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
கல்வி கற்கும் உயர்தர நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் எனவும், குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காகச் சட்டத்தையோ அல்லது காலத்தையோ ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது எனவும் இதன்போது போராட்டக்காரர்கள் காவல் துறையினரினதும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோஷங்களை எழுப்பினர்.
அம்பாறை வைத்தியசாலையின் வைத்தியர் சடலம் -- சந்தேகநபர் நீதிமன்றத்தில்!!
பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த இருவர் உட்பட நால்வர் இன்று (09) மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அம்பாறை வைத்தியசாலையின் இயன்முறை வைத்தியர் ஒருவரின் சடலம் தெல்தெனிய பகுதியில் உள்ள கார் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டிருந்தது.
அம்பாறை பொது வைத்தியசாலையில் பணியாற்றிய 34 வயதுடைய ஷம்யா தர்ஷனி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பெண் மருத்துவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது மரண பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது.
நுவரெலியா பகுதியில் வைத்து பெண் உடலியல் நிபுணரை கொலை செய்த பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய குண்டசாலை பிரதேச சபையில் பணியாற்றும் சாரதி, மெனிக்ஹின்ன பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆகியோரே இவ்வாறு இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
நுவரெலியா காவல் நிலைய குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இந்தச் சந்தேகநபர்கள், நுவரெலியா நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் (26) ஆம் திகதி நுவரெலியா நீதவான் புத்திகா ஹர்ஷனி தர்மதாஸவிடம் அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேகநபர்களை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மும்பை ரயிலின் முதல் வகுப்பில் முதலிரவு அலங்காரம்!!
ரயிலில் முதல் வகுப்பு ஏசி படுக்கை வசதி பெட்டியை முதலிரவு அறைபோல் அலங்கரிக்கப்பட்ட வீடியோ வைரலான நிலையில், இந்த செயலில் ஈடுபட்ட நபர் மீது ரயில்வே நிர்வாகம் வழக்குப்பதிவு செய்துள்ளது. நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ஒரு தம்பதியினர், தங்களது முதல் வகுப்பு ஏசி தனி அறை பெட்டியை 'தேன்நிலவு அறையாக' மாற்றி இருந்தனர்.
இதற்கெனவே ஒரு தனியார் அலங்கரிப்பாளரிடம் கூறி, பலூன்கள், மலர்கள், வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்திருந்தனர்.
இதையடுத்து புதுமண ஜோடிக்காக முதலிரவு அறையாக அலங்காரம் செய்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை கிளப்பியிருந்தது. இந்நிலையில் பாதுகாப்பு விதிமீறலில் ஈடுபட்டதாக, டிக்கெட் பரிசோதகரை ரயில்வே சஸ்பெண்ட் செய்துள்ளது.
மேலும் ரயிலில் தீ விபத்தை ஏற்படுத்தக்கூடிய மெழுவர்த்திகள், அலங்கார விளக்குகளை பயன்படுத்தியது குறித்து, உயர்மட்ட விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து பணியின் போது இதனை கவனிக்கத் தவறிய குற்றச்சாட்டில் அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டதுடன், விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
யாழில் டெங்கு நோயாளர்கள் சடுதியாக அதிகரிப்பு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 694 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள போதிலும், எந்தவித உயிரிழப்புகளும் பதிவு செய்யப்படவில்லை என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு விசேட கூட்டத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கடந்த வருடத்தைப் போன்றே இந்த வருடமும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோயினால் எந்தவொரு இறப்பும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த வருடமும், நடப்பு வருடத்தின் ஜூன் மாத இறுதிப்பகுதி வரையும் யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் முழுமையான கட்டுப்பாட்டிலேயே இருந்தது.
தற்போது நாட்டின் தென்பகுதி மற்றும் ஏனைய பல மாகாணங்களில் டெங்கு நோயின் பரவல் மிகத் தீவிரமாகக் காணப்படுகின்றது.
இந்த பின்னணியில், ஜூலை மாதத்தின் முதல் 7 நாட்களில் மட்டும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 65 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இது ஒரு சடுதியான அதிகரிப்பாகும்.
மேல் மாகாணத்தில், குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் மேல் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்று வருகின்றனர்.
அதேபோன்று, பலர் தொழில் நிமித்தம் கொழும்பில் தங்கியுள்ளனர்.
"அவர்கள் விடுமுறைக்காக யாழ்ப்பாணத்திற்கு வரும்போது, பலர் டெங்கு நோய்த்தாக்கத்துடன் வந்து இங்குள்ள வைத்தியாசலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்" என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.
புதன், 8 ஜூலை, 2026
அம்பலாங்கொடை மண்ணெண்ணெய்யில் இயங்கிய 4 பேருந்துகள்!!
மண்ணெண்ணெயை எரிபொருளாகப் பயன்படுத்தி இயக்கப்பட்ட 4 பயணிகள் பேருந்துகளை அம்பலாங்கொடை பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.
அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் லங்காதேவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் குழுவினர், நேற்று (07) மாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இந்தப் பேருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
காலி - கொழும்பு மற்றும் அம்பலாங்கொடை - எல்பிட்டிய ஆகிய வழித்தடங்களில் சேவையில் ஈடுபட்டிருந்த நான்கு பேருந்துகளே இவ்வாறு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்துகளில் சில முற்றிலும் மண்ணெண்ணெயை மட்டுமே பயன்படுத்தி இயக்கப்பட்டிருப்பதும், மற்றையவை டீசலுடன் மண்ணெண்ணெயைக் கலந்து இயக்கப்பட்டிருப்பதும் இந்தச் சுற்றிவளைப்பின் போது தெரியவந்துள்ளது.
மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயக்கப்பட்ட இந்த நான்கு பேருந்துகளின் சாரதிகளும் பலப்பிட்டிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Thank You Google
Thanks
என்னைப் பற்றி
-
லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை, சர்வதேச அரசியலி...
-
யாழில் (Jaffna) தனது பாதகைக்கு செருப்பு மாலை அணிவித்ருந்த பதாகையை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அதனை கிழித்து தனது காரில் எடுத்த...
-
ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர், பிரிட்டன் மீண்டும் அந்த அமைப்பில் இணைவதை ஆதரிப்பதாக ஒரு கணக்கெடுப்பு கண்டறிந்துள்...

