ஞாயிறு, 15 நவம்பர், 2026

அநுராதபுரம் ஹஸ்தி சேனா சுற்றிவளைப்பு

அக்போ யானை அடிக்கடி நடமாடும் அநுராதபுரம், திறப்பனை வலையத்தை அண்மித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட 'ஹஸ்தி சேனா' கூட்டு நடவடிக்கையின் போது, அனுமதியற்ற துப்பாக்கிகள், வெடிமருந்துகள் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

காட்டு யானைகளின் உயிரைப் பாதுகாத்தல், மனித உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாத்தல் மற்றும் மனித -யானை மோதலைக் குறைக்கும் நோக்கத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய 'ஹஸ்தி சேனா' நடவடிக்கையின் கீழ் இந்த விசேட முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 இதன்போது, வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காகப் பயன்படுத்தப்படும் அனுமதியற்ற துப்பாக்கிகள், ஹக்கபட்டஸ், பொறிகள் மற்றும் வெடிமருந்துத் தொகை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கற்குளம், கெட்டமாலாகந்த, முரியாக்கடவல, பெரியமியைங்குளம், கிரிந்தேகம, வண்ணான்குளம், உள்ளிட்ட பல பகுதிகளை உள்ளடக்கிய வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

காட்டு யானைகளை வேட்டையாடுவதையும் அவற்றின் உயிர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதையும் அத்துடன் மனித - யானை இணக்கப்பாட்டை உறுதிப்படுத்துவதையுமே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks