வெள்ளி, 13 நவம்பர், 2026

போதைப்பொருளுடன் யசிரு புதா படகு காலி துறைமுகத்திற்கு

நாட்டின் தெற்குப் பகுதியிலுள்ள ஆழ்கடலில் கடற்படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருட்கள் எனச் சந்தேகிக்கப்படும் பொதிகளைக் கடத்திச் சென்ற 'யசிரு புதா' என்ற நெடுநாள் மீன்பிடிப் படகு காலி துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. 

குறித்த படகிலிருந்து 50 ஐஸ் போதைப்பொருள் பொதிகளும், 52 ஹெரோயின் போதைப்பொருள் பொதிகளும் மீட்கப்பட்டுள்ளதுடன், அவை ஆறு சாக்குகளில் அடைக்கப்பட்டிருந்ததாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடற்படை மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின் போதே இந்தப் போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதி மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்றிருந்த இந்தப் படகில் போதைப்பொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையையடுத்து, நவம்பர் 11 ஆம் திகதி இது கைப்பற்றப்பட்டுள்ளது. 

இதன்போது, படகிலிருந்த ஐந்து சந்தேகநபர்களும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டனர். தற்போது கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருள் தொகையின் எடை மற்றும் அளவை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளைப் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks