அவர் ஓரிரு வாரங்களுக்குள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் அறிக்கையின்படி, அனோஜனுக்கு எதிரான வழக்கைத் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதில்லை என சவூதி அரேபியாவின் அரச வழக்கறிஞர் அலுவலகம் நவம்பர் 9ஆம் திகதி தீர்மானித்துள்ளது.
இதனால், அவருக்கு எதிராக சவூதி நீதிமன்றத்தில் தற்போது எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும், அனோஜன் தற்போது சவூதி அரேபியாவில் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
2026 செப்டம்பர் 17ஆம் திகதி, சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட அவதூறானதாகக் கருதப்பட்ட பதிவு தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில், சவூதி அரேபியாவின் கிழக்கு பிராந்திய மேல்முறையீட்டு நீதிமன்றம் அனோஜனுக்கு மரண தண்டனை விதித்திருந்தது. இராஜதந்திரத் தலையீடுகளைத் தொடர்ந்து, ஒக்டோபர் 14ஆம் திகதி அந்த மரண தண்டனை இரத்து செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஏனைய தண்டனைகளிலிருந்தும் அவரை விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பலனாக, தற்போது அவர் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று (நவம்பர் 11) வெளிவிவகார அமைச்சுக்கு வருகை தந்த அனோஜனின் குடும்பத்தினர், அவரது விடுதலைக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்த விடுதலைக்காக சவூதி அரசாங்கம், அந்நாட்டு நீதித்துறை, இரு நாடுகளின் இராஜதந்திர அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் குழு வழங்கிய ஒத்துழைப்பையும் அமைச்சர் பாராட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக