செவ்வாய், 6 அக்டோபர், 2026

தமிழகத்தில் நல்லெண்ணெய் விலை திடீரென அதிகரிப்பு!!

தமிழகத்தில் எள் விளைச்சல் சரிவடைந்துள்ளதன் காரணமாக, அன்றாட சமையலில் நல்லெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.45 வரை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் வீட்டு செலவுகளை கவனித்து கொள்ளும் நபர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். 

நல்லெண்ணெய் மட்டுமின்றி, சமையலுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படும் சூரியகாந்தி எண்ணெய் (Sunflower Oil) விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இது குறித்து பேசியிருக்கும் வியாபாரிகள், வெளிமாநில வரத்து எதிர்பார்த்த அளவு இல்லாததால் மார்க்கெட்டில் எள் வரத்து சரிந்துள்ளதக்க குறிப்பிட்டனர்.

எனவே எள் விலை உயர்ந்துள்ளது. இந்த சூழலில் தான் எள்ளை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் நல்லெண்ணெய் விலை லிட்டருக்கு 45 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. பிரபல நிறுவனம் ஒன்றால் தயாரிக்கப்படும் நல்லெண்ணெய் விலை லிட்டருக்கு 365 ரூபாயிலிருந்து 410 ரூபாயாக அதிகரித்து உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks