சனி, 10 அக்டோபர், 2026

தமிழகத்தில் தாராபுரம் மதுராந்தகம் தொடரும் விஜய் வெற்றி!!

தமிழகத்தில் தாராபுரம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று காலை 8:00 மணி முதல் வழியாக தொடங்கியது. இதில் ஆரம்பத்தில் இரண்டு தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் முன்னிலை வகித்தது. 

பிறகு திடீரென தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக முன்னிலை வகிக்க தொடங்கியது இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. 

பிறகு தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் மீண்டும் முன்னிலை வகிக்க தொடங்கியது. இன்று மதியம் ஒரு மணி நிலவரப்படி மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி 10வது சுற்று வாக்கு எண்ணிக்கை எண்ணிக்கையில் தமிழக வெற்றிக்கழகம் 38,128 வாக்குகளும் திமுக 25 ஆயிரத்து 354 வாக்குகளும் அதிமுக 21 537 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி 1069 வாக்குகளும் சிபிஎம் கட்சி 866 வாக்குகளும் பெற்று இருந்தன. 

அதேபோல் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி 15வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றி கழகம் 45,336 வாக்குகளும் திமுக 36 ஆயிரத்து 110 வாக்குகளும் அதிமுக 29 ஆயிரத்து 348 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி 3668 வாக்குகளும் சிபிஐ கட்சி 793 வாக்குகளும் பெற்று இருந்தன. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இன்று மதியம் ஒரு மணி நிலவரப்படி தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை வகித்தது இதை அந்த கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர் இரண்டு தொகுதிகளில் மட்டுமல்ல தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இனிப்பு வழங்கி பட்டாசு வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

இரண்டு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை காலை தொடங்கிய போது முதலிடத்தில் தமிழக வெற்றி கழகமும் இரண்டாவது இடத்தில் அதிமுகவும் இருந்தன மூன்றாம் இடத்திற்கு திமுக தள்ளப்பட்டு இருந்தது. 

பிறகு அடுத்தடுத்த சுற்றுகளில் திமுக இரண்டாம் இடத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

அண்மை நிலவரப்படி மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தவெக முன்னிலை வகிக்கிறது. மதுராந்தகத்தில் 10000+ வாக்குகள் வித்தியாசத்திலும், தாராபுரத்தில் 6000+ வாக்குகள் வித்தியாசத்திலும் தவெக முன்னிலை வகிக்கிறது. தாராபுரம் தொகுதியின் வாக்கு முன்னிலை நிலவரம் ஆரம்பத்திலிருந்தே சுவாரஸ்யமாகச் செல்கிறது. 

முதலில் தவெக முன்னிலை பின்னர் அதிமுக முன்னிலை எனத் தொடங்கி இடையில் அதிமுக முன்னிலை எனப் போக்குக் காட்டியது. பின்னர் மீண்டும் தவெக முன்னிலைக்கு வர அதிமுகவுடன் போட்டா போட்டி போக்கு உருவானது.

 இந்நிலையில், தற்போது திமுக இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மதுராந்தகம் முன்னிலை நிலவரம்: 

தவெக – மரகதம் குமரவேல்: 31,117 

திமுக – பரந்தாமன்: 20,701 

அதிமுக – கனிதா சம்பத்: 17,995 

சிபிஎம் – பி.சுகந்தி: 1051 நாதக – ஜானகிராமன்: 885 மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் (தவெக), பரந்தாமன் (திமுக), கணிதா சம்பத் (அதிமுக), சுகந்தி (மார்க்சிஸ்ட்), ஜானகி ராமன் (நாம் தமிழர்) மற்றும் சுயேச்சைகள் என 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 

மதுராந்தகத்தில் 86.26%, வாக்குகள் பதிவாகின. 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.
 தாராபுரம் முன்னிலை நிலவரம்: 

தவெக – சத்யபாமா: 34,987 

திமுக – சுகன்யா: 28,567 

அதிமுக – பானுமதி: 25,307 

இந்திய கம்யூனிஸ்ட் – ப.லட்சுமணன் – 640

நாதக – கார்த்திகா – 2875 தாராபுரத்தில் தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் சார்பில் கார்த்திகா உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தாராபுரத்தில் 80.25% வாக்குகள் பதிவாகின. 

அங்குள்ள 320 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள், 14 மேசைகளில் 23 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன. புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது.

 4 சுற்று வாக்கு எண்ணிக்கையும் முடிவடைந்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அசோக் ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார். 

என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் 13,358 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

 இதனையடுத்து அங்கு என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 4876 வாக்குகளுடன் காங்கிரஸ் வேட்பாளார் விநாயகம் 2-ம் இடம் பெற்றுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks