அப்போது, கோடிக் கணக்கில் பணம் மற்றும் பணப்பரிவர்தனை தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ரூ.400 கோடி வரை முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டதாகப் எழுந்த புகார்கள் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன்பேரில் கடந்த 26-ம் தேதி முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் பணம் வசூலித்ததாகக் கூறப்படும் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் தலைமறைவாக உள்ள முத்துக்குமார் உள்ளிட்டோரின் தொடர்புகள் குறித்தும் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன்படி தலைமறைவாக உள்ள முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் மூலம் துணிக்கடை அதிபர் சண்முகபிரியா என்பவருக்கு பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து, சண்முகப்பிரியாவுக்கு சொந்தமான நீலாங்கரை வீட்டில் ஏற்கெனவே சோதனை நடத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக