வியாழன், 29 அக்டோபர், 2026

இலங்கை சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 112 குற்றவாளிகள் 13 நாடுகளில்!!

சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 112 குற்றவாளிகள் 13 நாடுகளில் தலைமறைவாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும், அந்த சந்தேகநபர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்குத் தேவையான அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியாட்சகருமான எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார். 

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயல்பாட்டின் முன்னேற்றம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். குறித்த குற்றவாளிகளை 2027 ஆம் ஆண்டிற்குள் நாட்டிற்கு அழைத்து வர முடியும் என்றும், அதன் பின்னர் அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இக்குற்றவாளிகள் போதைப்பொருள் கடத்தல் மூலமே சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கின்றனர் எனச் சுட்டிக்காட்டிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அந்தச் சட்டவிரோதப் பணத்தில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் பொலிஸின் இரண்டு விசேட பிரிவுகள் ஊடாக 24 மணி நேரமும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

அரசாங்கம் பொறுப்பேற்கத் திட்டமிட்டுள்ள சொத்துக்களின் மதிப்புகள்: 

2024 ஆம் ஆண்டு: 1,490 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் 

2025 ஆம் ஆண்டு: 1,549 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் 

2026 ஆம் ஆண்டு (நேற்றைய தினம் வரை): 1,656 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் 

இந்தச் சொத்துக்களில் தங்க ஆபரணங்கள், காணிகள், வாகனங்கள் மற்றும் ரொக்கப் பணம் என்பன அடங்குகின்றன. போதைப்பொருள் சோதனைகளும் கைதுகளும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மற்றும் 2026 ஆம் ஆண்டில் இதுவரை பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவுகள்:

ஹெரோயின் - 4,483 கிலோ (மதிப்பு 107.942 பில்லியன் ரூபாய்) ஐஸ் போதைப்பொருள் - 7,129 கிலோ (மதிப்பு 121.64 பில்லியன் ரூபாய்) கஞ்சா - 33,277 கிலோ (மதிப்பு 5.293 பில்லியன் ரூபாய்) கொக்கைன் - 333 கிலோ (மதிப்பு 14.306 பில்லியன் ரூபாய்) தற்போதுள்ள சட்டங்களின்படி, ஐஸ், ஹெரோயின் மற்றும் கொக்கைன் ஆகிய போதைப்பொருட்களை 5 கிராமுக்கு மேல் வைத்திருத்தல், கையாளுதல், வியாபாரம் செய்தல், கடத்துதல் அல்லது உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டவாறு கைதானால், மேல் நீதிமன்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் அவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் வூட்லர் மேலும் வலியுறுத்தினார். 

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயல்பாட்டின் கடந்த ஆண்டு முன்னேற்றம் 2025 ஒக்டோபர் மாதம் தொடங்கப்பட்டமுழு நாடுமே ஒன்றாக தேசிய செயல்பாட்டிற்கு தற்போது ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த ஒரு வருடத்தில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவுகள்:

 ஹெரோயின் - 2,835 கிலோ 682 கிராம் ஐஸ் - 3,550 கிலோ 750 கிராம் கொகேயின் - 297 கிலோ 135 கிராம் கஞ்சா - 11,167 கிலோ 569 கிராம் மேலும், கடந்த ஆண்டு முழுவதும் பல்வேறு குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 5,743 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அந்த சந்தேகநபர்களில் 450 பேருக்கு எதிராகச் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இக்குற்ற ஒழிப்பு நடவடிக்கைகள் இலங்கை பொலிஸாருக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளபோதிலும், அதற்கு முப்படையினரின் பலமான ஒத்துழைப்பு நிச்சயமாகக் கிடைப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks