அதனைத் தொடர்ந்து தவில், நாதஸ்வர மங்கள வாத்தியங்கள் முழங்க, கொடி, குடை மற்றும் ஆலவட்டம் சகிதம் பல்கலைக்கழக வேந்தர் தகைசால் பேராசிரியர் இ.குமாரவடிவேல் மற்றும் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி ஆகியோர் கௌரவமாக விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
மண்டபத்தில் குழுமியிருந்த பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேரவை உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோரின் முன்னிலையில் பட்டமளிப்பு வைபவம் இடம்பெற்றது. தகுதிபெற்ற பட்டதாரிகளுக்கும் டிப்ளோமாதாரிகளுக்கும் பட்டங்கள் மற்றும் தகைமைச் சான்றிதழ்கள் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டன.
கல்வியில் சாதனை படைத்த சிறப்பு மாணவர்களுக்குப் பரிசில்கள், புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், தங்கப் பதக்கங்களும் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
இம்முறை பட்டமளிப்பு விழாவில் பின்வரும் பீடங்களைச் சேர்ந்த பட்டதாரிகள் மற்றும் தொலைக்கல்வி மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக