ஈரானின் லராக் தீவில் அமைந்திருந்த இரண்டு ஈரானிய ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியது. ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை வைக்கும் பணியில் ஈரான் படைகள் ஈடுபட்டதை அடுத்து அமெரிக்கா இந்தத் தாக்குதலை நடத்தியது.
தற்போது இதற்கு பதிலடியாக ஜோர்டானில் உள்ள கிங் ஹுசைன் மற்றும் அல் அஸ்ராக் ஆகிய அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. அவற்றில் 8 பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்ததாக ஜோர்டானியப் படைகள் தெரிவித்தன.
லராக் தீவில் உள்ள ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என ஈரான் பார்லிமென்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் தலைவர் இப்ராஹிம் அஜிஜி, எச்சரித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியின் மீது தங்களுக்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதாகவும், எங்களுடன் ஒன்று இணைந்து செயல்படாமல் கடந்து செல்லும் கப்பல்களுக்கு அந்த ஜலசந்தி மூடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், மீண்டும் பதற்றம் அதிகரித்ததால் கச்சா எண்ணெய் விலைகளும் உயர்ந்தன. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க உளவு மற்றும் ராணுவக் கட்டமைப்புகளுக்கு ஈரான் தொடர்ச்சியான தாக்குதல்கள் மூலம் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக