வெள்ளி, 25 செப்டம்பர், 2026

ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு

தொழிலதிபர் ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, டிஜிபி உத்தரவின் பேரில் இந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் குழுவில் கூடுதல் ஆணையர் தேன்மொழி, இணை ஆணையர் திஷா மிட்டல், கண்காணிப்பாளர் முத்தரசி மற்றும் துணை ஆணையர் கீதாஞ்சலி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

இந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழு, வழக்கு தொடர்பான அனைத்து அம்சங்களையும் விசாரித்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks