புதன், 26 ஆகஸ்ட், 2026

நேபாளத்தில் பனிப்பாறை.. அதிர்ந்த பூமி, பாய்ந்த வெள்ளம் 165 பேர் பலி

பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட நிலநடுக்கமே அது என என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (USGS) தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம், நேபாள பகுதியில் பதிவான 4.4 ரிக்டர் அளவிலான நில நடுக்கம், இயல்பான நிலநடுக்கம் அல்ல. 

நேபாளம் - சீனா எல்லையில் நிலநடுக்கம் ஏற்படவில்லை. பனி ஏரி உடைந்து வெள்ளமும், பாறைகளும் பள்ளத்தாக்கை நோக்கி அதிவேகத்தில் பாய்ந்ததில் 4.4 நில அதிர்வு பதிவாகி உள்ளது. 

வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 579-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. காணாமல் போனவர்களில் 28 நாடுகளைச் சேர்ந்த 466 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என தெரிவிக்கப்படுகின்றது. 

அவர்களில் 100க்கும் மேற்பட்ட இந்தியர்களும், 54 அமெரிக்கர்களும், பிரித்தானியாவைச் சேர்ந்த 33 பேரும் அடங்குகின்றனர். திபெத் எல்லையை ஒட்டியுள்ள ரசுவா மாவட்டத்தில் உள்ள கிராமங்களை, இன்று (26) காலை போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட கடும் திடீர் வெள்ளம் அடித்து சென்றதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 165 பேர். 

இந்த திடீர் வெள்ளத்தால் வீதிகள், நீர்மின் திட்டங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன. தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக நேபாள இராணுவம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான 30-க்கும் மேற்பட்ட ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. 

 டஜன் கணக்கான பாதுகாப்புப் படையினர் மற்றும் அரசு அதிகாரிகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிஷிர் கனால் தெரிவித்துள்ளார். தொடர்புகொள்ள முடியாதவர்களில் ரசுவாவில் (Rasuwa) உள்ள நேபாள பொலிஸார் மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த 44 பேரும் அடங்குகின்றனர்.

44 இராணுவத்தினரும், 28 பொலிஸாரும், 13 ஆயுதமேந்திய பொலிஸாரும், மின்சாரத் திட்டங்களில் பணிபுரியும் 60 பேரும் காணாமல் போனவர்களில் உள்ளடங்குவதாக அறிவித்துள்ளது. ஆரம்ப மதிப்பீடுகளின்படி, 98.33 மில்லியன் டொலர்களுக்கும் அதிக பெறுமதியான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதுவரை 19 பாலங்கள் மற்றும் 40 கிலோமீற்றர் தூரமான வீதிகள் சேதமடைந்துள்ளதாக முதல்கட்ட மதீப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks