வியாழன், 6 ஆகஸ்ட், 2026

திருகோணமலை குளவி- 50 மாணவர்கள் வைத்தியசாலையில்!!

குளவி கொட்டுக்கு இலக்காகி திருகோணமலை பாடசாலை ஒன்றின் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

திருகோணமலை திவுல்வெவ மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலைக் கட்டடத்தில் இருந்த குளவிக் கூடு கலைந்தமையினால் மாணவர்கள் இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த மாணவர்கள் சிகிச்சைக்காக மஹதிவுல்வெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் மூன்று மாணவிகள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks