புதன், 5 ஆகஸ்ட், 2026

ஆங்கிலக் கால்வாயில் 160 அகதிகளுடன் பயணித்த படகு தீயில்.

பிரான்ஸிலிருந்து சுமார் 160 அகதிகளை ஏற்றிக்கொண்டு எல்லை கடக்க முயன்ற அதிகளவிலான பயணிகளையுடைய சிறிய ரப்பர் படகொன்று (Dinghy) ஆங்கிலக் கால்வாயில் (English Channel) திடீரெனத் தீப்பற்றி மூழ்கியதில் பாரிய உயிர்ச்சேதத்தைத் தடுக்கும் நோக்கில் பிரெஞ்சு மற்றும் பிரித்தானியக் கடலோரக் காவல் படையினர் அவசர மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


பிரான்ஸின் புலோம்-சுர்-மேர் (Boulogne-sur-Mer) கடற்கரைக்கு அப்பால் செவ்வாய்க்கிழமை (2026 ஓகஸ்ட் 04) அதிகாலை 6.00 மணியளவில் இச் சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரெஞ்சு எல்லைப் பகுதியில் சுமார் 160 அகதிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த படகின் இயந்திரம் (Engine) எதிர்பாராதவிதமாகத் திடீரென வெடித்துத் தீப்பற்றியுள்ளது. தீப் பிளம்புகள் படகு முழுவதும் பரவியதால் ரப்பர் படகு சேதமடைந்து கடலுக்குள் மூழ்கத் தொடங்கியது. 


அதில் பயணித்த குழந்தைகள், பெண்கள் உட்பட அனைத்து அகதிகளும் கடும் குளிர்கொண்ட கட நீரில் தூக்கி வீசப்பட்டுக் மூழ்கியுள்ளனர். தகவல் அறிந்தவுடனேயே பிரித்தானியாவின் அரச தேசிய படகு மீட்பு நிறுவனம் (RNLI), பிரித்தானியக் கடலோரக் காவல் படை (UK Coastguard) மற்றும் பிரெஞ்சு கடலோரக் காவல் படை என்பன இணைந்து கூட்டு மீட்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 

கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் ஹெலிகொப்டர்கள் மற்றும் மீட்புப் படகுகள் மூலம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks